தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மன்னர் என்ன சொன்னார்?

மன்னர் என்ன சொன்னார்?

மன்னர் என்ன சொன்னார்?


PUBLISHED ON : ஜன 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் யஷ்வந்த் என்ற மன்னர் இருந்தார். அவர் மிகவும் அறிவாளி. அவருக்கு பறவைகள் மற்றும் மிருகங்களின் மொழிகள் கூட தெரியும்.

ஒருமுறை அரண்மனையிலுள்ள நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.

இரண்டு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண்புறா கோபமாக, 'என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்' என்று கூறியது.

இதனைக் கேட்ட யஷ்வந்த் மன்னர் அந்த ஆண் புறாவை அருகில் அழைத்தார்.

''என்ன புறாவே, இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்கிறாயே... உன்னால் எப்படி முடியும்?'' என்று கேட்டார் மன்னர்.

''மன்னரே, என்னால் எப்படி முடியும்? ஏதோ மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன்; அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...'' என்றது.

மீண்டும் அந்த ஆண்புறா, பெண்புறாவிடம் சென்றது.

''மன்னர் கூப்பிட்டாரே... எதற்குக் கூப்பிட்டார்?'' என்று பெண்புறா கேட்டது.

''நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவேதான், என்னைக் கூப்பிட்டு அப்படியெல்லாம் செய்துவிடாதே' என்று கேட்டுக் கொண்டார்'' என்றது ஆண் புறா.

ஆண்புறாவின் சாமர்த்தியத்தை கண்டு ஆச்சரியமடைந்தார் மன்னர். அதே சமயம், மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் ஆண்புறாவிடம் கற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us