PUBLISHED ON : நவ 02, 2019

அ நிறம் | அளவு
அக்காலத்தில், வாகனங்களில் பயணிப்பது கடினம்; சரியான சாலை இல்லாததும், வாகன சக்கரங்களின் தன்மையுமே இதற்கு காரணம்.
வாகனங்களின் அதிர்வு, குலுங்கலை குறைக்கும் விதமாக சீர்த்திருத்தும் பணியில் இறங்கினர். சக்கரங்களுக்குக் கெட்டியான ரப்பர் பட்டை பொருத்தினர்; அதுவும் ஒத்து வரவில்லை.
பிரிட்டிஷ் கால்நடை மருத்துவர், ஜான் பாய்டு டன்லப், 1888ல் காற்றடைத்த ரப்பர் குழாய் போன்ற பட்டையை பொருத்தினார். வாகனங்கள் ஓடும் போது ஏற்பட்ட அதிர்வு குறைந்தது.
நாளடைவில் உலோக சக்கரங்கள் செய்து, அதன் மீது காற்றடைத்த ரப்பர் பட்டைகளை வசதியாகப் பொருத்தினர். இதுதான், ரப்பர் டயருக்குள், டியூப் பொருத்தும் அமைப்பின் முன்னோடியாகும்.
வாகனங்களின் அமைப்பும், இயக்கமும், சாலைகளும் மாற்றி அமைக்கப்பட்டதால், வாகனப் பயணம் இன்று சுகமாக இருக்கிறது.
