PUBLISHED ON : ஜன 27, 2012

ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் தலைவர், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வாழ்கிறார். இளஞ்சிவப்பு மாளிகையில் வாழ்வது யார் தெரியுமா? அவர்தான் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைவர். அவரது மாளிகை 'புவனஸ்ஐயரிஸ்' என்ற அர்ஜென்டினாவின் தலைநகரில் அமர்ந்துள்ளது.
'புவனஸ்ஐயரிஸ் என்ற ஸ்பானியச் சொல்லுக்கு, 'நல்ல காற்று' என்று பொருள்.
புவனஸ்ஐயரிஸ்தான் அமெரிக்காவில் மிகப் பெரிய நகரம். பூமத்திய ரேகைக் கோட்டிற்குத் தெற்கேயுள்ள எல்லா நகரங்களிலும் இதுவே பெரியது. மேற்கு பூகோளத்தில் நியூயார்க்கிற்கும் சிகாகோவிற்கு அடுத்த பெரிய நகரம் இது.
இந்த நகரம், 'லாபிளாடா' என்ற ஆற்றின் முகத்து வாரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு தொழில் நகரமாகும். இந்த நகரத்தின் மிகப் பிரசித்தி பெற்ற சதுக்கம் பிளாசா தெல்மேயோவில் அமைந்துள்ளது.
இந்தச் சதுக்கம் பசுமை நிறைந்த ஒன்றாகும். உலகின் மிக அகலமான தெருவும் இந்த நகரிலேயே அமைந்துள்ளது. அதன் பெயர் 'ஜுலை 9 அவென்யு' என்பதாகும்.
