தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சைக்கிளில் சென்ற போது...

சைக்கிளில் சென்ற போது...

சைக்கிளில் சென்ற போது...


PUBLISHED ON : செப் 23, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் தஞ்சாவூர் சேக்ரெட் ஹார்ட் மேனிலைப் பள்ளியில், 10 வகுப்பு படித்தபோது, நானும் என் தோழி பத்மாவும் பள்ளிக்கு செல்வோம்.

எங்கள் பள்ளி கண்டிப்புக்கு பேர் போனது. சரியான காரணமின்றி தாமதமாக பள்ளிக்கு வந்தால், 'பைன்' போடுவர். அடிக்கடி தாமதமாக வந்தால் பெற்றோரை அழைத்து வரச் சொல்லுவர்.

ஒருநாள், நாங்கள் இருவரும் பள்ளிக்கு சைக்கிளில் வரும்போது, எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த, வேறு பள்ளியை சேர்ந்த மாணவியரின் சைக்கிளை, ஆட்டோ உரசிவிட்டு செல்ல, இரு மாணவியரும் சாலையில் விழுந்து விட்டனர்.

உடனே, நானும் என் தோழி பத்மாவும், சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த மாணவியரை தூக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து, தேவையான முதலுதவி செய்து அனுப்பிவிட்டு, நாங்கள் இருவரும் பள்ளி வளாகத்திற்குள், 15 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தோம்.

எங்களுக்கு முன்னதாக தாமதமாக வந்த சிலரோடு எங்களையும் நிறுத்தி விசாரித்தார் பள்ளியின் தாளாளர். நடந்ததை கூறினோம். எந்த இடம், எப்படி நடந்தது என்பதை கேட்டு விட்டு எங்களை வகுப்பறைக்கு அனுமதித்தார்.

மறுநாள் காலை, ஸ்கூல் அசெம்ப்ளியின் போது, தகவல் நேரத்தில் எங்கள் இருவரையும் மேடைக்கு அழைத்து, 'சாலை விபத்தின் போது, ஓடிச் சென்று உதவி செய்து மனித பண்பை வெளிப்படுத்தியதற்காக இந்த இரண்டு மாணவியருக்கும் பள்ளியின் சார்பாக பாராட்டுக்கள்' என்று தாளாளர் கூறியதும், குழுமியிருந்த அனைவரும் கை தட்டியதை இன்று நினைத்து பார்த்தாலும், உணர்வுப் பூர்வமாக உள்ளது.

அதிலிருந்து உதவும் மனப்பான்மையும், பொது நல எண்ணமும் என்னுள் சற்று மேலோங்கி விட்டது.

- என்.ஜீவிதா, தஞ்சாவூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us