தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யார் இவர்?

யார் இவர்?

யார் இவர்?


PUBLISHED ON : பிப் 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ் தினம் 1642ம் ஆண்டு, அந்த தினத்தில் இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

'கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால், மிகுந்த கீர்த்தியுடன் விளங்கப் போகிறது!' என்று சிலர் பேசிக் கொண்டனர். அதனைக் கேட்டுப் பிள்ளையின் அம்மா பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

வயது வந்ததும், அந்தப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவன் பள்ளிக்கு சரியாகப் போக மாட்டான்; பாடத்தை ஒழுங்காகப் படிக்க மாட்டான். இதனால், 'வகுப்பிலே கடைசி' என்று அவனுக்கு மற்ற மாணவர்கள் பட்ட பெயர் சூட்டி விட்டனர். படிப்புத்தான் இல்லை. பலமாவது இருக்கக் கூடாதா? அதுவும் இல்லை. துரும்புபோல் இருந்தது அவனது உடம்பு.

ஒருநாள், அந்தச் சிறுவனை அவனது வகுப்பிலே படித்த ஒரு முரட்டுப் பையன் வம்புக்கு இழுத்தான். சிறுவன் முதலில் பேசாமல் தான் இருந்தான். ஆனால், அந்த முரடன் சும்மா இருக்கவில்லை. கை நீட்ட ஆரம்பித்து விட்டான். உடனே, ''டேய், பேசாமல் போகிறாயா அல்லது திருப்பித் தரட்டுமா?'' என்று சிறுவன் கோபமாகக் கேட்டான்.

''அடேயப்பா! ஆளைப் பார்த்தாலே தெரிகிறதே! நான் ஒரு தட்டு தட்டினால், நீ ஒன்பது குட்டிக் கரணம் போடுவாய், ஜாக்கிரதை!'' என்றான் முரடன்.

''எங்கே, தட்டு பார்க்கலாம்,'' என்றான் சிறுவன்.

உடனே முரடன் கையால் தட்டவில்லை; காலால் அந்தச் சிறுவனின் வயிற்றிலே உதைத்துவிட்டான். வயிற்றில் உதை விழுந்ததும், சிறுவனுடைய கோபம் அதிகமாகி விட்டது. ஒரே பாய்ச்சலாக அந்த முரடன் மேல் பாய்ந்தான். அவனைப் பிடித்து 'மடேர்' என்று எதிரிலிருந்த சுவரில் தள்ளினான். அவனுடைய மூக்கைச் சுவருடன் வைத்து, 'தேய் தே'யென்று தேய்த்தான். பாவம், அந்த முரடன் பயந்து ஓடிவிட்டான்.

முரடனைக் கைச்சண்டையில் தோற்கடித்ததோடு அந்தச் சிறுவன் நிற்கவில்லை. படிப்பிலும் தோற்கடிக்க வேண்டுமென நினைத்தான். முயற்சியுடன் படித்தான். வகுப்பிலே முதல் மாணவாக மறுபரீட்சையிலேயே தேறிவிட்டான். அப்புறம், 'வகுப்பிலே கடைசி' என்று யாராவது அவனைக் கூப்பிடுவார்களா? இல்லை, அப்படிக் கூப்பிடத் தைரியம்தான் வருமா?

இப்படி தைரியசாலியான அந்த பையன் யார் என்று தானே கேட்கிறீர்கள்?

ஒரு சின்ன க்ளூ. இவர்தான் புவிஈர்ப்புச் சக்தியை கண்டுபிடித்தார். இப்போது தெரிந்திருக்குமே இவர் யார் என்று?

விடை: ஐசக் நியூட்டன் தான் அந்த தைரியமான பையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us