தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யார் இவர்?

யார் இவர்?

யார் இவர்?


PUBLISHED ON : பிப் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டுக்காரரும், அவருடைய நண்பரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

''உங்களுடைய பையனைக் காணோமே எங்கே போய் இருக்கிறான்?'' என்று கேட்டார் நண்பர்.

''எங்கே போயிருப்பான் ஏதேனும் ஒரு மூலையிலே முட்டைமேல் உட்கார்ந்து கொண்டிருப்பான்!''

''என்ன! முட்டை மேல் உட்கார்ந்து கொண்டிருப்பானா! ஏன், உட்கார வேறு இடம் கிடையாதா?''

''அவன் செய்வது எல்லாமே வேடிக்கை யாகத்தான் இருக்கும். நேற்று நடந்ததைக் கேளுங்கள். அவனை வீட்டில் வெகு நேரமாய்க் காணோம்.

''எங்கே போய் இருப்பான் என்று தேடிப் பார்த்தேன். கடைசியில், அவன் வீட்டில் பின்புறத்திலே ஒரு மூலையில், சில முட்டைகளைக் கீழே வைத்து, அவற்றின் மேலே உட்கார்ந்து இருக்கக் கண்டேன்.

'என்னடா இது, முட்டைமேல் உட்கார்ந்திருக்கிறாய்!' என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன தெரியுமா பதில் சொன்னான்?

'நம் வீட்டுக் கோழி செய்கிறதே, அதே போல் நானும் முட்டையிலிருந்து குஞ்சை வெளியில் கொண்டு வரப் போகிறேன்' என்றான்.

''அடேயப்பா இந்த வயதிலேயே அவன் ஆராய்ச்சியில் இறங்கி விட்டான் போலிருக்கிறது!''

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளியில் சென்றிருந்த அந்தப் பையனும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமுடி கலைந்திருந்தது. உடை முழுவதும் புழுதி படிந்திருந்தது. அவனைக் கண்டதும், 'என்னடா இது அலங்கோலம்?' என்று கேட்டார் அவன் அப்பா.

''நான் வரும் வழியிலே ஒரு குதிர் இருந்தது. அதன் மேல் பகுதியில் வட்டமான மூடி இருந்தது. அந்த மூடியைத் திறந்து கொண்டு அதன் வழியாகக் கோதுமையை உள்ளே கொட்டிக் கொண்டிருந்தனர் சில வேலையாட்கள். அவர்கள் கொட்டும் கோதுமை உள்ளே போய் எப்படி விழுகிறது என்று பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. உடனே, குதிரின் மேல் 'விறு விறு' என்று ஏறினேன். உச்சியிலிருந்து ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது... கால் இடறி, தொப்பென்று உள்ளே விழுந்து விட்டேன்...''

''ஐயோ, அப்புறம்...?'' என்று பதற்றத்துடன் கேட்டார் அப்பா.

''நல்ல காலம், உடனே வேலையாட்கள் என்னைக் காப்பாற்றி விட்டனர். இல்லாது போனால் உள்ளேயே அமுங்கிச் செத்துப் போயிருப்பேன்!'' என்றான் அந்த சிறுவன்.

அவனுக்கு மட்டுமல்ல; நம் எல்லாருக்கும் அது நல்ல காலம்தான்.

'ஏன்?' என்று கேட்கிறீர்களா? அவன் அன்று இறந்து போயிருந்தால், இன்று நாம் கிராம போனில் பாட்டுக் கேட்க முடியாது; சினிமா கொட்டகையில் படம் பார்க்க முடியாது; வீட்டில் 'சுவிட்'சைப் போட்டு விளக்கை எரிய வைக்க முடியாது. இந்த அற்புதங்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவனே அந்தச் சிறுவன்தான்.

விடை: இவர்தான் அந்த சிறுவன் ஆராய்ச்சியாளர் தாமஸ் ஆல்வா எடிசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us