தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மரத்தாலான புத்த விகாரங்கள்

மரத்தாலான புத்த விகாரங்கள்

மரத்தாலான புத்த விகாரங்கள்


PUBLISHED ON : டிச 26, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பானில் புத்த மதம் பல அதிசயங்களை குறிப்பாகக் கட்டடக் கலையில் செய்துள்ளது. அவற்றில் ஒன்று இங்குள்ள பகோடா புத்தரின் கோவில் கோபுரம்.

தெற்கு ஜப்பானின் நாராவில் ஹார்யூ ஜி என்னும் இந்த புத்த விஹாரம் உள்ளது. பெரிய கோவில் பரந்த நிலப்பரப்பில் முழுவதும் மரத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் 60 சதவீதம் காடுகள் சூழப்பட்டுள்ள நாடு. ஆகவே, அங்குள்ள பழைய கட்டடங்கள் அனைத்தும் மரங்களினால் உருவாக்கப்பட்டவை தான். மற்றொரு காரணம், ஜப்பானில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படும். மரவீடானால் பூகம்பத்தினால் பாழாகும் வீடுகளை சீர் செய்து புதுப்பித்துவிடலாம்.

ஜப்பானின் சரித்திரம் முழுவதும் கட்டடங்களின் அடிப்படைப் பொருள் 'மரங்கள்' தான் என்று கூறுகிறது. மரத்தினாலான கட்டுமானப் பொருள்களுக்கு ஜப்பானியர் வர்ணம் பூசுவதில்லை. வார்னிஷ் கொண்டு பாலிஷ் செய்து இயற்கை அழகு கெடாமல் பளபளப்பாக்குவர்.

பாரதத்திலிருந்து கி.பி.538களில் புத்த மதம் ஜப்பானில் பரவியது. அதே நேரத்தில், ஆசியாவின் நுண்கலை- கட்டடக்கலைகளிலும் ஜப்பானியர் முன்னேறினர். இதன் வெளிப்பாடுதான் ஹார்யூ-ஜி புத்த விஹாரம் 607ல் கட்டப்பட்டது. ஒரு கூரை மீது மற்றொரு கூரையை வைத்து பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போன்ற ஸ்டைலில் இந்த புத்த விஹாரம் அமைந்துள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us