PUBLISHED ON : டிச 29, 2013
தமிழகம்
ஆக., 1: பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ், படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையில் இரங்கல் கூட்டம், சேலத்தில் நடந்தது.
ஆக., 2: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிறுவப்பட்ட 'பெல்' நிறுவனத்தை பிரதமர் துவக்கினார். இங்கு பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக., 2: காதலனுடன் சேர்த்து வைக்க கூறியும், தந்தை தன்னை மிரட்டுவதாகவும் சினிமா இயக்குநர் சேரன் மீது, மகள் தாமினி போலீசில் புகார். பின் சில நாட்களுக்குப்பின், தந்தையுடன் சென்றார்.
ஆக., 3: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) புதிய தலைவராக, விபு நய்யார், பொறுப்பேற்பு.
ஆக., 4: மறைந்த பழம்பெரும் பாடகி, டி.கே.பட்டம்மாளின் இசைப் பயணம் குறித்து, இளைய சமுதாயத்தினரும் எளிதாக தெரிந்து கொள்ள ஏதுவாக, தனி இணையதளம் (ஞீடுணீச்ttச்ட்ட்ச்டூ.ணிணூஞ்) துவக்கம்.
* மேட்டூர் அணை, 40வது முறையாக அதன் முழு கொள்ளளவும் நிரம்பியது. கடந்த 8 ஆண்டுகளுக்குப்பின், இந்தாண்டு நிரம்பியது.
ஆக., 6: சென்னையில் நடந்த எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின், 25வது ஆண்டு விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பு.
ஆக., 9: முதல்வர் ஜெ., 42 நாள் ஓய்வுக்குப்பின், தலைநகர் சென்னை திரும்பினார்.
ஆக., 20: நடிகர் விஜய் நடித்த 'தலைவா' திரைப்படம், பல்வேறு பிரச்னைகளால் 11 நாட்களுக்குப் பின், வெளியானது.
ஆக., 23: பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம், தயாரித்து நடித்த 'மெட்ராஸ் கபே' திரைப்படம் தமிழர்களின் எதிர்ப்பு காரணமாக திரையிடப்படவில்லை. படத்தில் விடுதலைபுலிகள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.
ஆக., 25: டி.என்.பி.எஸ்.சி., - குரூப் 4 தேர்வு நடந்தது. 14 லட்சம் பேர் பங்கேற்பு.
இந்தியா
ஆக., 1: இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலராக, சுஜாதா சிங் நியமனம்.
ஆக., 4: காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 ராணுவத்தினர் பலி.
ஆக., 6: ராஜஸ்தானில், சட்ட மேலவை அமைக்க வகை செய்யும் மசோதா, ராஜ்யசபாவில் ஒப்புதல்.
ஆக., 8: சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி, பல்லம் ராஜூ உள்ளிட்ட ஆந்திராவைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் ராஜினாமா.
ஆக., 9: காஷ்மீரின் கீஷ்த்வார், ரஜோரி, உதம்பூர் மாவட்டங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
ஆக., 11: பா.ஜ., கட்சியின் பிரசாரக்குழு தலைவராக மோடி பொறுப்பேற்ற பின், தென் மாநிலத்தில் முதன்முறையாக ஐதராபாத்தில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்பு.
* பலன் தருமா!: சுப்ரமணிய சாமியின் ஜனதா கட்சி, ஆக., 11ல், பா.ஜ., வுடன் இணைக்கப்பட்டது. ஜனதா கட்சி 1975ல் நெருக்கடி நிலையின் போது, பிரதமராக இருந்த இந்திராவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவதற்காக, பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயப்பிரகாஷ் நாராயணால் உருவாக்கப்பட்டது. அவர், பல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். பின் ஜனதா என்ற பெயரை பயன்படுத்தி, பாரதிய ஜனதா, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் என பல கட்சிகள் உருவாகின.
ஆக., 13: திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்தும் சட்ட மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்.
ஆக., 17: சி.ஆர்.பி.எப்., இயக்குனராக ஐ.பி. எஸ்., அதிகாரி திலிப் திரிவேதி நியமனம்.
ஆக., 22: ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை.
ஆக., 23: பாகிஸ்தான் சிறையில் இருந்த, இந்திய மீனவர்கள் உள்ளிட்ட கைதிகள் 337 பேர் விடுதலை.
ஆக., 25: பெங்களூரு ரூரல் மற்றும் மாண்டியா ஆகிய 2 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலில், காங்., வெற்றி. பெங்களூரு ரூரல் தொகுதியில் நடிகை 'குத்து' ரம்யா வெற்றி.
ஆக., 29: இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் இந்திய - நேபாள எல்லையில் கைது.
* நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல்.
ஆக., 30: இந்திய கடற்படைக்கான, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஜிசாட் 7, பிரெஞ்சு கயானாவில் உள்ள கவுரோ விண்வெளி தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
உலகம்
ஆக., 1: வங்கதேசத்தின், மதவாத, 'ஜமாத் -இ- இஸ்லாமி' கட்சியின் அங்கீகாரத்தை, அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆக., 3: ஈரான் அதிபராக இருந்த முகமது அகமதிநிஜாத் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, புதிய அதிபராக ஹசன் ரவ்ஹானி பதவியேற்பு.
* ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில், நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, 7வது முறையாக ராபர்ட் முகாபே அதிபரானார். கடந்த 33 ஆண்டுகளாக இப்பதவியில் தொடர்கிறார்.
ஆக., 5: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'நாசா' விண்வெளி மையத்தால் அனுப்பப்பட்ட 'கியூரியாசிட்டி' விண்கலம் ஓராண்டை நிறைவு செய்தது.
ஆக., 16: நாட்டுக்கு எதிராக: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட 40 குண்டுவெடிப்புகளில், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் என்ற துண்டா, ஆக., 16ம் தேதி, உத்தரகண்ட்டை ஒட்டிய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராஹிம், உள்ளிட்ட பயங்கரவாதிகளிடம் தொடர்பில் இருந்ததாக வாக்குமூலம்.
ஆக., 19: யார் தவறு: ஆக., 19ல், பீகாரின் காகரியா மாவட் டத்தில், சிவன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் தர்மரா ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது ரயிலில் இடம் பிடிப்பதற்காக மக்கள் கூட்டமாக, எதிரில் (ராஜ்யராணி எக்ஸ்பிரஸ்) ரயில் வருவதை கூட பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். ரயில் மோதியதில் 37 பேர் பலியாகினர். இதில் பெண்கள் 30 பேர். ஆத்திரத்தில் மக்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.
ஆக., 22: அமெரிக்க ராணுவ ரகசியங்களை, 'விக்கிலீக்ஸ்' இணையதளத்துக்கு வழங்கிய அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனிங்க்கு, 35 ஆண்டுகள் சிறை.
ஆக., 27: சிரியாவில் நடந்த உள்நாட்டு கலவரத்தில், அதிபர் ஆசாத் அரசு நடத்திய ரசாயன தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
* 'வேற்றுமையில் ஒற்றுமை' இருக்கிறதா: ஆக., 27ல், உ.பி., முஜாபர்நகர் மாவட்டத்தில், இரு வகுப்பினருக்கு இடையேயான வன்முறை, மதக் கலவரமாக மாறியது. 43 பேர் கொல்லப்பட்டனர். 93 பேர் காயமடைந்தனர்.
'நியூஸ் ரேங்க்'
1. முதல் பாதுகாப்பு யாருக்கு: மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில், ஆக., 14ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டு தீ பற்றியது. கப்பல் முற்றிலும் தீக்கிரையானதில் 18 கடற்படை வீரர்கள் பலியாகினர்.
2. வரலாற்று சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 68.85 ரூபாய் என வீழ்ச்சியை சந்தித்தது. 1947ல் டாலருக்கு சமமாக இந்திய ரூபாயின் மதிப்பு இருந்தது.
3. அமெரிக்காவுக்கே 'வேட்டு': அமெரிக்கா, மற்ற உலக நாடுகளை உளவு பார்த்த ரகசியங்களை அந்நாட்டின் எட்வர்டு ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். இவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்தது. ஆனால் அங்கிருந்த தப்பித்த ஸ்னோடெனுக்கு, ஆக., 1ல், ரஷ்யா தஞ்சம் அளித்தது.
விளையாட்டு
ஆக. 3: அசத்திய இந்திய அணி: புலவாயோவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அன்னிய மண்ணில் முதல் முறையாக தொடரை முழுமையாக (5-0) வென்று வரலாறு படைத்தது. இத்தொடரில் 5 போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா 18 விக்கெட் வீழ்த்தினார்.
ஆக. 4: ஜடேஜா ஜாலம்: இந்திய அணியின் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா. இவரது 'சுழல்' ஜாலம் கைகொடுக்க, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என முழுமையாக வென்றது. தொடர்ந்து, ஐ.சி.சி., ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம், கும்ளேவுக்கு பின் 17 ஆண்டுகள் கழித்து முதலிடம் பிடித்த இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்.
ஆக. 12: உலக தடகளப் போட்டியின், பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர் தங்கம் வென்றார்.
ஆக. 16: சீனாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி-முருகேசன் ஜோடி சாம்பியன்.
ஆக. 17: உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீ., ஓட்டத்தில், ஜமைக்காவின் உசைன் போல்ட், தங்கம் வென்றார்.
ஆக. 25: நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆக. 25: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, கோப்பை வென்றது.
ஆக. 29: இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், 'டுவென்டி-20' போட்டியில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார்.
ஆக. 31: முதல் முறையாக நடந்த இந்தியன் பாட்மின்டன் லீக் தொடரில், ஐதராபாத் அணி, அவாத் வாரியர்ஸ் (லக்னோ) அணியை வீழ்த்தி சாம்பியன்.
* சோதிக்கு கேல் ரத்னா: இந்திய விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் 'கேல் ரத்னா' விருது வழங்கப்படும். இதன் படி, 2013ம் ஆண்டுக்கான விருதை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதி பெற்றார். இவர் உலக கோப்பை தொடரில் (2010,11) அடுத்தடுத்து இரண்டு தங்கம் வென்றவர். இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்டோர் 'அர்ஜுனா' விருது பெற்றனர்.
