தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/செப்டம்பர் - 2013

செப்டம்பர் - 2013

செப்டம்பர் - 2013


PUBLISHED ON : டிச 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம்

செப்., 5: ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வைகைசெல்வன் நீக்கம். உயர்கல்வி துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கூடுதலாக அப்பொறுப்பு ஒப்படைப்பு.

செப்., 7: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில், கேயார் வெற்றி.

செப்., 8: இயக்குநர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் - கயல்விழி திருமணம் நடந்தது.

செப்., 15: தமிழகத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெ., துவக்கினார்.

செப்., 21: நூற்றாண்டில் இந்திய சினிமா: தென்னிந்திய வர்த்தக சபை - தமிழக அரசு இணைந்து நடத்திய 'இந்திய சினிமா நூற்றாண்டு' விழா சென்னையில் செப்., 21 முதல், 4 நாட்கள் நடந்தன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மண் சாண்டி மற்றும் தென்னிந்திய திரைத்துறையினர் பங்கேற்றனர். இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திரா 1913ல் வெளியானது.

செப்., 28: மலைக்கோட்டை டூ செங்கோட்டை: செப்., 26ல் திருச்சியில் நடந்த பா.ஜ., 'இளந்தாமரை' மாநாட்டில் குஜராத் முதல்வர் மோடி பங்கேற்பு. இது, அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் நடந்த முதல் பொதுக்கூட்டம்.

இந்தியா

செப்., 2: ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதா, ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது.

* இம்மசோதா ஆக,. 26ல் லோக்சபாவில் நிறைவேறியது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேரும் பயன்பெறுவர் என தகவல்.

செப்., 3: முன்னணி மொபைல் நிறுவன மான நோக்கியாவை 4 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது.

செப்., 9: லிபெரியா அதிபர் எலன் ஜான்சன் சர்லீப் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை. 2012ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

செப்., 13: வரும் 2014 பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிப்பு.

செப்., 14: இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை திரிபுரா (94.65) பெற்றது. முதல் இடத்தில் இருந்த கேரளா, 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

செப்., 15: இந்தியாவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் (5000 கி.மீ., ), 'அக்னி-5' ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை.

செப்., 20: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மீதான ஊழல் வழக்கில், போதிய சாட்சியங்கள் இல்லாததால் முடித்துக்கொள்வதாக சி.பி.ஐ.,அறிவிப்பு.

செப்., 21: 'தி குட் ரோடு' என்ற குஜராத்தி திரைப்படம் '2014 - ஆஸ்கார்' விருது போட்டிக்கு, இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டது.

செப்., 23: ஆதார் அடையாள அட்டை, அனைவருக்கும் கட்டாயமில்லை. மேலும் இது சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு வழங்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

செப்., 25: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்துவதற்கு '7வது ஊதியக் கமிஷன்' அமைத்தது.

செப்., 26: காஷ்மீரின் ஹிராநகர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சம்பா ராணுவ முகாம் ஆகிய இரண்டு இடங்களில், பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல். ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் பலி. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

செப்., 27: அமெரிக்கவில் 'சர்க்கியூட் கோர்ட்' எனப்படும் மேல்முறையீடு நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியர் சீனிவாசன், பொறுப்பேற்பு.

* 16 மாத சிறைவாசம்: கடப்பா தொகுதி எம்.பி.,யும் , ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், 2012 மே 27ல் ஐதராபாத் - சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், 16 மாதங்களுக்குப் பின் செப், 23ல், சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

செப்., 28: ஓட்டுப்பதிவு எந்திரத்தில், 'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' (நோட்டா) என்ற பட்டன் கட்டாயம் வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

*தெற்கு மும்பையில் டக்யார்டு என்ற இடத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலி.

செப்., 30: இங்கிலாந்துக்கான இந்திய தூதராக ரஞ்சன் மாத்தாய் நியமனம்.

உலகம்

செப்., 1: சாமியாரும் மகனும்: வட மாநிலங்களில் பிரபலமான சாமியார், ஆசாராம் பாபு, 72. இவருக்கு, ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில், ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தானின், ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த, 16 வயது சிறுமி, ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆக., 1ல் போலீசில் புகார். இதையடுத்து செப்., 1ல் சாமியார் கைது. இந்நிலையில் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டிச., 4ல், ஆசாராம் பாபு மகன், நாராயண் சாயும் கைது.

செப்., 6: ஆப்கானிஸ்தானில், இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி படுகொலை.

செப்., 9: பாகிஸ்தானின் புதிய அதிபராக மம்நூன் ஹூசைன் பதவியேற்றார். இவர் இந்தியாவில் பிறந்தவர்.

செப்., 12: ரசாயன ஆயுதங்களை சர்வதேச ஆணையத்திடம் ஒப்படைப்பதாக சிரியா ஒப்புதல், இதையடுத்து அமெரிக்கா, சிரியா மீதான தனது, ஆயுத நடவடிக்கையை நிறுத்தியது.

செப்., 14: இலங்கையில் வடக்கு மாகாணங்களுக்கு ரயில் சேவை துவக்கம். இது இந்திய ரயில்வே துறையால் செய்யப்பட்டது.

செப்., 16: அமெரிக்காவின் வாஷிங்டன் கடற்படை தளத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலி.

செப்., 18: ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியோ கிலார்டு பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய பிரதமராக டோனி அப்போட் பதவியேற்பு.

செப்., 19: ஆப்ரிக்காவில் உள்ள, சுவாசிலாந்து நாட்டின் மன்னர் எம்ஸ்வாட்டி, 15வது மனைவியை தேர்வு செய்தார்.

செப்., 24: கென்ய தலைநகர் நைரோபியில், ஷாப்பிங் மாலில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வாடிக்கையாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். பிணையக் கைதிகளாகவும் பிடித்தனர். இதில் 2 இந்தியர்கள் உட்பட 68 பேர் பலியாகினர்.

செப்., 25: பாகிஸ்தானில் பெஷாவர் அருகே தேவாலயத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலி.

செப்., 26: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட கோர்ட்டின் நீதிபதியாக, அமெரிக்க இந்தியரான சீனிவாசன் பதவியேற்பு.

செப்., 28: இந்தோனேசியாவின் பாலீ தீவில் நடந்த 2013 'மிஸ் வேர்ல்டு' அழகிப் போட்டியில், பிலிப்பைன்ஸ் அழகி மேகன் யங், உலக அழகியாக தேர்வு.

'நியூஸ் ரேங்க்'

1. ரூபாய் மதிப்பு உயருமா! : ரிசர்வ் வங்கியின் கவனர்ராக இருந்த டி.சுப்பராவ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய கவர்னராக ரகுராம் ராஜன் செப்., 4ல் பொறுப்பேற்றார். ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இப்பொறுப்பை ஏற்றார்.

2. முதல் நபர்: காங்., முன்னாள் மத்திய அமைச்சர் ரஷித் மஜித், முறைகேடாக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வழங்கிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் புதிய தீர்ப்பு படி, இவரது எம்.பி., பதவி., பறிக்கப்பட்டது.

3. என்ன பயன்: நியூயார்க்கில் ஐ.நா., சபைக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மன்மோகன் சிங், செப்., 29ல், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை. முன்னதாக பேச்சுவார்த்தைக்கு பா.ஜ., உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு.

விளையாட்டு

செப். 8: வரும் 2020 ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம் சேர்க்கப்பட்டது.

செப். 9: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் பைனலில், பெலாரசின் அசரன்காவை வீழ்த்தி, கோப்பை வென்றார் அமெரிக்காவின் செரினா.

செப். 10: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக ஜெர்மனியின் தாமஸ் பாக் தேர்வு.

* யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில், செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்திய ஸ்பெயினின் நடால் சாம்பியன்.

செப்., 13: சூதாட்ட சூறாவளி: பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா கடந்த மே 16ல் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் ஜாமினில் வெளியாகினர். இதில், ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை (செப்., 13) விதித்தது.

அமித் சிங் 5, சித்தார்த் திரிவேதிக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

செப். 28: டோக்கியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன்.

செப். 29: பி.சி.சி.ஐ., தலைவராக சீனிவாசன் போட்டியின்றி தேர்வு

செப். 29: சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) தொடரில், இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us