sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2022ல் சினிமா

/

2022ல் சினிமா

2022ல் சினிமா

2022ல் சினிமா


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வசூல் மழை

'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் - ரூ.500 கோடி, கமலின் 'விக்ரம்' - ரூ.420 கோடி, விஜயின் 'பீஸ்ட்' - ரூ.250 கோடி, அஜித்தின் 'வலிமை' - ரூ. 200 கோடி, 'லவ்டுடே' ரூ.100 கோடி

'காஷ்மீர் பைல்ஸ்' (ஹிந்தி) ரூ.341 கோடி

'கே.ஜி.எப் 2' (கன்னடம்), 'ஆர்.ஆர்.ஆர்.,' (தெலுங்கு) ரூ.1,200, ரூ. 1,300 கோடி

குறைந்த பட்ஜெட்டில் உருவான 'காந்தாரா' (கன்னடம்), ரூ. 400 கோடி

'அவதார்' இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' ஹாலிவுட் முதல் 10 நாளில் ரூ.7 ஆயிரம் கோடி. இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடி

அஜித் அசத்தல்

அஜித், 2022ல் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார். உலகம் முழுக்க பைக்கில் பயணம் செய்யும் அவரது திட்டத்தில் முதற்கட்டமாக இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்.

அதிக படம்

2022ல் நடிகர் அசோக்செல்வன், 'சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம்' படங்களிலும், நடிகர் அசோக்குமார், 'விடியாத இரவொன்று வேண்டும், பெஸ்டி, மாயத்திரை, 4554, தெற்கத்திவீரன்' படங்களிலும், நடிகர் ஜெய், 'வீரபாண்டியபுரம், பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, காபி வித் காதல், குற்றம் குற்றமே' என ஐந்து படங்களில் நடித்துள்ளனர்.

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி 'புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி' என ஐந்து படங்களில் நடித்திருந்தார்.

காமெடி நடிகர் யோகிபாபு, 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

'வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே' என இரண்டு படங்களை சுசீந்திரன் இயக்கி உள்ளார்.

இசையால் வசியம்

யுவன் ஷங்கர் ராஜா-10,

டி இமான், ஜிப்ரான் தலா 7,

ஜி.வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் தலா 6,

இளையராஜா, அனிருத், சாம்.சி.எஸ் - 5,

ஏ.ஆர்.ரஹ்மான் - 4 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய 'அரபிக் குத்து...' பாடல், இணையதளத்தில் 35 கோடி பார்வைகளை பெற்றது.

பேசப்பட்டவை

மன்மதலீலை, காத்துவாக்குல ரெண்டு காதல், வெந்து தணிந்தது காடு, நானே வருவேன், கட்டா குஸ்தி, டாணாக்காரன், இரவின் நிழல், கார்கி, ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்'.

ஆங்கில மோகம்

கார்பன், எப்ஐஆர், இடியட், செல்பி, பீஸ்ட், ஹாஸ்டல், டான், டி பிளாக்,

டேக் டைவர்சன், ராக்கெட்ரி, பெஸ்டி, கிராண்மா, வாட்ச்,

தி வாரியர், தேஜாவு, தி லெஜண்ட், பேட்டரி, பபூன்,

லாஸ்ட் 6 ஹவர்ஸ், மைடியர்லிசா, டைரி, கோப்ரா, கேப்டன், கம்பெனி, ஒன்வே,

நாட் ரீச்சபள், டிராமா, வார்டு 126, டிரிக்கர், ரிப்பீட்ஷூ, பிரின்ஸ், காபிவித்காதல்,

லவ் டுடே, பவுடர், டிஎஸ்பி, ரிவெட், எஸ்டேட், ஈவிள், பரோல், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் கனெக்ட், கிளாப்,

ஓ மை டாக், ஓ2, சூப்பர் சீனியர் ஹீரோஸ் ஏஜன்ட் கண்ணாயிரம் என ஆங்கில பெயரில் அதிக படங்கள் வெளியாகின.

'பிளாப்'

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்'

தனுஷின் 'மாறன், நானே வருவேன்'

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்'

விஷாலின் 'வீரமே வாகை சூடும்'

விக்ரமின் 'மகான், கோப்ரா'

சந்தானத்தின், 'குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம்'

விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி',

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

படங்கள் 'பிளாப்' ஆகின.

'ரீ-மேக்' படங்கள்

தமிழில் ரீ-மேக்கான படங்கள்

ஹாஸ்டல் (அடி காப்பியரே கூட்டாமணி - மலையாளம்)

அக்கா குருவி (சில்ரன் ஆப் ஹெவன் - ஈரான்)

கூகுள் குட்டப்பா (ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25-மலையாளம்)

விசித்திரன் (ஜோசப்-மலையாளம்)

நெஞ்சுக்கு நீதி (ஆர்டிக்கிள் 15 - ஹிந்தி)

வீட்டுல விசேஷம் (பதாய் ஹோ - ஹிந்தி)

ஏஜென்ட் கண்ணாயிரம் (ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - தெலுங்கு)

'டும்...டும்'

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் ஆன நான்கு மாதத்திலேயே, வாடகைத்தாய் வாயிலாக இரட்டை குழந்தை பெற்றது சர்ச்சையானது

நடிகர் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்

தனுஷ் - ஐஸ்வர்யா திருமண உறவு முறிவு.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஆலியா பட் திருமணம்

அறிமுகம் அமோகம்

'லவ்டுடே' ஹீரோ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

'விருமன்' பட நாயகியும் இயக்குனர் ஷங்கர் மகளுமான அதிதி

'வெந்து தணிந்தது காடு' நாயகி சித்தி இட்னானி

'ராக்கெட்ரி' படத்தின் இயக்குனராக நடிகர் மாதவன் அறிமுகத்தில் அசத்தினர்.

சர்ச்சை

* ரஜினியின் 'பாபா' 'ரீ ரிலீஸ்', ஒரே 'ஷாட்'டில் எடுத்ததாக சொல்லப்பட்ட பார்த்திபனின் 'இரவின் நிழல்', சர்ச்சையை கிளப்பின.

* தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் நீக்கம்.

சரிந்த பாலிவுட்

அமீர்கானின் 'லால் சிங் சத்தா',

அக் ஷய்குமாரின் 'சாம்ராட் பிருத்விராஜ், ராம் சேது',

ரன்பீர் கபூரின் 'ஷம்ஷேரா', ரன்வீர் சிங்கின் 'சர்க்கஸ்' படங்கள் தோல்வியை தழுவின.

'பளார்'

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவியை கிண்டல் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்தார் நடிகர் வில் ஸ்மித்.

சினி துளிகள்!

* கொரோனா, விபத்து என பல பிரச்னைகளால் நின்று போன கமலின் 'இந்தியன் 2' படம் மீண்டும் துவங்கியது.

* நவ. 23: தசை அழற்சி பாதிப்பால் நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி.

* ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த படங்கள் வெளியாகின. அவை 'மார்பிங்' செய்யப்பட்டது என விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us