sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2022 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

/

2022 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2022 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2022 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஆக.1: ஸ்ரீபெரும்புதுார் அருகே பரந்துாரில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு.

ஆக.6: 'பிங்க்' நிற அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்.

ஆக.7: டில்லி அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் தலைமை இயக்குனராக தமிழகத்தின் கலைச்செல்வி பதவியேற்பு.

ஆக.16: போலீசாருக்கு வாரவிடுமுறை போல, எஸ்.ஐ.,களுக்கும் 15 நாளுக்கு ஒருமுறை விடுப்பு வழங்க அரசு உத்தரவு.

ஆக.17: ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

ஆக.21: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பஸ் சேவை புனேயில் அறிமுகம்.

ஆக.22: புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

யானைக்கு அடைக்கலம்: ஆக.26: தமிழகத்தின் 5வது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி, கன்னியாகுமரியில் உள்ள அகஸ்திய மலையை (1197 சதுர கி.மீ.,) மத்திய அரசு அறிவித்தது.

நீளமான ரயில்...: அக்.30: உலகின் நீளமான (1.9 கி.மீ.,) பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து சாதனை.

இந்தியா

ஆக.1: மேற்கு வங்கத்தில் 23ல் இருந்து 30 ஆக மாவட்டங்களின் எண்ணிக்கை உயர்வு.

ஆக.2: இந்தியா - மாலத்தீவு இடையே பேரிடர் மேலாண்மை, கட்டமைப்பு வசதி மேம்பாடு, வீட்டு வசதி உட்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மக்கள் தலைவர்: ஆக.2: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இந்தியாவின் நீண்டகால எம்.எல்.ஏ., (18,728 நாள்) சாதனையை படைத்தார்.

ஆக.3: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் படேல் பதவியேற்பு.

ஆக.10: பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகினார் நிதிஷ் குமார் (ஜே.டி.யு.,). காங்., கூட்டணி சார்பில் பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்பு.

ஜக்தீப் ஜெயம்: ஆக.11: இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக பா.ஜ., கூட்டணியின் ஜக்தீப் தன்கர் (528 ஓட்டு) பதவியேற்பு. எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா (182) தோல்வி.

ஆக.13: காஷ்மீரின் செனாப் நதியின் மேல் அமைக்கப்பட்ட உலகின் உயரமான ரயில் பாலம் திறப்பு. உயரம் 1177 அடி, நீளம் 1.31 கி.மீ.

ஆக.15: 75வது சுதந்திர தின 'அமுதப்பெருவிழா' நிறைவு. வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்.

சூப்பர் 'வாசுகி': ஆக.17: இந்தியாவின் நீளமான (3.5 கி.மீ.,) 'சூப்பர் வாசுகி' சரக்கு ரயில் சோதனை ஓட்டம் வெற்றி. 26,000 டன் நிலக்கரியை எடுத்துச்செல்லும்.

மின்சார பஸ்: ஆக.18: இந்தியாவின் முதல் ஏ.சி., இரண்டடுக்கு மின்சார பஸ் (ஸ்விட்ச் இவ் 22) மும்பையில் அறிமுகம்.

'அமிர்தா' மருத்துவ சேவை: ஆக.24: ஆசியாவின் பெரிய மருத்துவமனையை ('அமிர்தா') ஹரியானாவின் பரிதாபாத்தில் பிரதமர் மோடி துவக்கினார். 133 ஏக்கரில் 2600 படுக்கைளுடன் கட்டப்பட்டுள்ளது.

ஆக.26: காங். கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல்.

*மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,) தலைவராக சமீர் வி காமத் பதவியேற்பு.

*உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பானது.

ஆக.27: குஜராத் சபர்மதி ஆற்றங்கரையில் ஒரே நேரத்தில் 7500 பெண்கள் ராட்டையில் நுால் நுாற்றனர்.

ஆக.28: குஜராத் புஜ் நகரில் 2001ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர் களுக்கான நினைவகத்தை ('ஸ்மிருதி வன்') பிரதமர் மோடி துவக்கினார்.

உலகம்

ஆக.2: ஆப்கனில் பதுங்கி இருந்த அல் - குவைதா பயங்கர வாத அமைப்பின் தலைவர் அல் - ஜவாஹிரி, அமெரிக்கா நடத்திய 'ட்ரோன்' தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஆக.3: அமெரிக்க பார்லி மென்ட் சபாநாயகர் நான்சி பொலோஸி முதல் முறையாக தைவான் வருகை.

விரல் ஜாலம்: ஆக.4: இரண்டு கை விரல்களிலும் சேர்த்து நீளமான நகம் (42 அடி) வளர்த்த அமெரிக்க பெண்மணி டியான ஆம்ஸ்ட்ராங் 63, கின்னஸ் சாதனை.

ஆக.6: செயின்ட் கிட்ஸ், நெவிஸ் பிரதமராக டெரன்ஸ் ட்ரீவ் பதவியேற்பு.

ஆக.8: கொலம்பிய அதிபராக கஸ்டவோ பெட்ரோ பதவியேற்பு.

ஆக.9: பப்புவா நியூ கினியா பிரதமராக ஜேம்ஸ் மராப்பே பதவியேற்பு.

ஆக.14: சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந் தோட்டை துறைமுகம் வருகை.

ஆக.15: அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் ஒமைக்ரான் தடுப்பூசிக்கு முதல் நாடாக பிரிட்டன் அனுமதி.

ஆக.22: பராகுவேயில் மகாத்மா காந்தி சிலையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

*கொலம்பியா அதிபராக கஸ்டவோ பெட்ரோ பதவியேற்பு.

ஆக.23: பிரிட்டனுக்கான இந்திய துாதராக விக்ரம் துரைசாமி பதவியேற்பு.

ஆக.28: பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் போர்டு எஸ்கார்ட் கார் ரூ.6 கோடிக்கு ஏலம் போனது.

*ஐ.நா., அறிக்கையின் படி, உலகில் கருவுறுதல் விகிதம் குறைந்த(0.8%) நாடாக தென்கொரியா உள்ளது.

டாப் 4

ஆக 24: ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் அறிமுகம்.

ஆக.27: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் பற்றி விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் அளித்தது.

ஆக.28: பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1000 பேர் பலி.

ஆக.31: இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை, டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் துவக்கினார்.






      Dinamalar
      Follow us