sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2022 ஜூலையில் நடந்த நிகழ்வுகள்

/

2022 ஜூலையில் நடந்த நிகழ்வுகள்

2022 ஜூலையில் நடந்த நிகழ்வுகள்

2022 ஜூலையில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜூலை 7: புதிதாக 20 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் துவக்கம்.

தலைமை குழப்பம்: ஜூலை 11: அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு. பன்னீர்செல்வம் நீக்கம். கலவரத்தால் தலைமை அலுவலகத்துக்கு 'சீல்'.

ஜூலை13: அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக முனுசாமி, விஸ்வநாதன் நியமனம்.

ஜூலை19: எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு.

ஜூலை25: தமிழகத்தில் யூகலிப்டஸ் மரம் நடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

ராஜ்யசபாவில் ராஜா: ஜூலை25: ராஜ்யசபா நியமன எம்.பி., யாக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்பு.

ஜூலை31: தமிழக போலீசுக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது.

இந்தியா

ஜூலை1: 'நிதி ஆயோக்' தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் அய்யர் பதவியேற்பு.

ஜூலை3: மணிப்பூர் நோனி மாவட்டத்தில் நிலச்சரிவில் 43 பேர் பலி.

ஜூலை4: இந்தியாவின் இளம் சபாநாயகரானார் மஹாராஷ்டிராவின் ராகுல் நர்வேகர் 45.

*ரெஸ்டாரன்ட்களில் சேவைக்கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை.

அழகின் அழகே...: ஜூலை4: 'மிஸ் இந்தியா' அழகியாக கர்நாடகாவின் சினி ஷெட்டி தேர்வு.

கலங்கியது இலங்கை: ஜூலை9: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கோபமடைந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி அவரது மாளிகையை முற்றுகையிட்டனர்.

அமர்நாத் சோகம்: ஜூலை 9: காஷ்மீர் அமர்நாத் குகை கோயில் பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் பலி.

ஜூலை11: இந்தியாவின் நீண்டகாலம் வாழ்ந்த புலி (25 வயது ராஜா) மேற்குவங்கத்தில் உயிரிழப்பு.

தேசிய சின்னம்: ஜூலை11: இந்திய தேசிய சின்னத்தை புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். உயரம் 21 அடி. எடை 9500 கிலோ.

ஜூலை12: பிரசார் பாரதி நிறுவனத்தின் புதிய லோகோ வெளியீடு.

ஜூலை14: இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் பதிவாகியது.

ஜூலை15: இளநிலை பட்டப்படிப்பில் சேர மத்திய அரசின் 'கியூட்' நுழைவுத்தேர்வு அறிமுகம்.

*இந்தியாவின் சிறந்த பல்கலை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முதலிடம்.

ஜூலை16: ஐ.என்.எஸ்., சிந்துதாஜ் நீர்மூழ்கிக்கப்பல் (1987 - 2022) ஓய்வு.

ஜூலை23: பயணியுடன் பறக்கும் நாட்டின் முதல் 'டிரோனை' (வருணா) பிரதமர் மோடி துவக்கினார்.

ஜூலை25: குஜராத்தின் போடாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் பலி.

இளம் ஜனாதிபதி: ஜூலை25: பா.ஜ., கூட்டணி சார்பில் வென்ற திரவுபதி முர்மு 64, 15வது ஜனாதிபதியாக பதவியேற்பு. இவரே இந்தியாவின் இளம், முதல் பழங்குடியின ஜனாதிபதி.

ஜூலை29: இந்திய கப்பல் படையிடம் உள்நாட்டில் தயாரான 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒப்படைப்பு.

ஜூலை30: புதிய வாக்காளராக 17 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஜூலை31: ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 பேர் புகைப்படம் எடுத்து கின்னஸ் சாதனை.

*பணமோசடி வழக்கில் மஹாராஷ்டிரா சிவசேனா எம்.பி, சஞ்சய் ராவத், அமலாக்கத்துறையால் கைது.

*தமிழக போலீசுக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது.

உலகம்

ஜூலை1: இஸ்ரேல் பிரதமராக யாயிர் லாபிட் பதவியேற்பு.

ஜூலை5: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.

சாலையில் 'ஷாக்': ஜூலை6: ஜப்பான் சாலையில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய போது, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சே அபே சுட்டுக்கொலை.

ஜூலை9: இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகினார்.

ஜூலை13: அமெரிக்காவின் 'டைம்' நாளிதழ் வெளியிட்ட உலகின் சிறந்த 50 இடங்களில், கேரளா, ஆமதாபாத் தேர்வு.

ஜூலை19: பிரிட்டன் வரலாற்றில் அதிகபட்சமாக 40.2 டிகிரி (இதற்கு முன் 38.2) செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

ஜூலை20: இலங்கை அதிபர் தேர்தலில் 134 ஓட்டுகளை (எம்.பி.,) பெற்று ரணில் விக்ரமசிங்கே வெற்றி.

*உலகின் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் பட்டியலில் ஜப்பானுக்கு முதலிடம். இதனை பயன்படுத்தி 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இந்தியாவுக்கு 87வது இடம் (56 நாடுகளுக்கு செல்லலாம்).

ஜூலை22: இலங்கை பிரதமராக பொதுஜன பெரமுனா கட்சியின் தினேஷ் குணவர்த்தனா பதவியேற்பு.

ஜூலை24: அல்பேனியா அதிபராக பஜ்ரம் பெகஜ் பதவியேற்பு.

ஜூலை31: ஆப்கனில் பதுங்கியிருந்த அல் - குவைதா தலைவர் அல் ஜவாஹரி, அமெரிக்கப்படையின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

டாப் 4

ஜூலை1: கர்நாடகாவின் சித்ரதுர்காவில் டி.ஆர்.டி.ஓ., தயாரித்த முதல் ஆளில்லா போர் விமான சோதனை.

ஜூலை1: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குச்சி, கொடி, தட்டு உட்பட 19 பொருட்களுக்கு மத்திய அரசின் தடை அமலுக்கு வந்தது.

ஜூலை25: 'குரங்கு அம்மை' பாதிப்பை உலக சுகாதார நிறுவனம் சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

ஜூலை29: அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதல் பிரதமர் ஆனார் மோடி.






      Dinamalar
      Follow us