தமிழகம்
பிப். 1: மதுரை கீழவெளி பகுதியில் பழமை யான கட்டட சுவர் இடிந்து மூவர் பலி.
பிப். 4: ராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கே அதி காரம் என தமிழக கவர்னர் உச்சநீதிமன்றத்தில் மனு.
பிப். 5: கூட்டுறவு வங்கிகள் வழங்கிய ரூ. 12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளு படி.
பிப். 6: ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலையை இணைத்து புலிகள் சரணாலயமாக்கி மத்திய அரசு அறிவிப்பு.
பிப். 8: திருப்பூர், கரூரில் 175 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு.
பிப். 9: கிருபானந்த வாரியார் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
பிப். 12: சாத்துார் பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் பலி.
பிப். 14: சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உட்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார்.
பிப். 17: பிரதமர் மோடி காணொலி மூலம் ராமநாதபுரம் - துாத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தை துவக்கினார்.
* தனது தந்தை ராஜிவை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக காங்., எம்.பி., ராகுல் கூறினார்.
பிப். 20: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து.
* சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு.
பிப். 21: காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைக்கும் திட்டத்துக்கு அடிக்கல்.
பிப். 22: புதுச்சேரியில் காங்., அரசு கவிழ்ந்தது.
பிப். 23: இடைக்கால பட் ஜெட் தாக்கல். அரசின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்வு. 2020 பட்ஜெட்டில் 4.56 லட்சம் கோடியாக இருந்தது.
பிப். 24: புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி.
பிப். 25: அரசு ஊழியர் ஓய்வு வயது இனி 60.
* 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 'ஆல் பாஸ்' என அறிவிப்பு.
* கோவையில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார்.
* சிவகாசி காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி.
பிப். 26: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.
இந்தியா
பிப். 1: பெரியாறு அணைக்கு 20 ஆண்டுக்குப்பின் கேரள அரசு மின் இணைப்பு வழங்கியது.
பிப். 3: பெங்களூருவில் 13வது சர்வதேச விமான கண்காட்சி துவக்கம்.
பிப். 5: காஷ்மீரில் 18 மாதத்துக்கு பின் 4ஜி இணைய சேவை துவக்கம்.
பிப். 6: சி.ஆர்.பி.எப்., நக்சலைட் ஒழிப்பு படையில் முதல்முறையாக 34 பெண் கமாண்டோ சேர்ப்பு.
வெள்ளம்... வேதனை: பிப். 7: உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உருகி தவிலிகங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16 பேர் பலி.
பிப். 10: சென்னை, துாத்துக் குடி உட்பட 12 துறைமுகத்திற்கு தன்னாட்சி வழங்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்.
சென்னையில் 'திருப்பதி': பிப். 13: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் பத்மாவதி தாயார் கோயில் பூமி பூஜையை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கினார்.
பிப். 13: விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என டில்லி 'ஷாகின்பாக்' வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
பிப். 14: ஆந்திராவின் சித்துாரில் வேன்- - லாரி மோதி 14 பேர் பலி.
பிப். 15: மேற்கு வங்கத்தில் ரூ.5க்கு மதிய உணவு திட்டம் துவக்கம்.
பிப். 16: ம.பி.,யில் பஸ் கால்வாயில் கவிழ்ந்ததில் 37 பேர் பலி.
பிப். 17: காஷ்மீரின் ஸ்ரீநகரில் 30 ஆண்டுக்குப்பின் ஷீத்தல்நாத் கோயில் திறப்பு.
பொறுப்பு... சிறப்பு: பிப். 18: கிரண்பேடி நீக்கப்பட, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி கவர்னராக தமிழிசை (தெலுங்கானா கவர்னர்) பதவி ஏற்பு.
பிப்.18: இந்தியாவின் நீளமான பாலத்தை(19 கி.மீ.,) அசாமின் துப்ரி- -மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்.
பிப்.23: பயணிகளுக்கு பிடித்த விமான நிலைய பட்டியலில் மதுரைக்கு இரண்டாவது இடம். உதய்பூருக்கு (ராஜஸ் தான்) முதலிடம்.
பிப்.25: வங்கி கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு.
உலகம்
பிப்.1: மியான்மர் நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியது.
'நாசா' நேசம்: பிப். 2: அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய (நாசா) செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண்
பவ்யா லால் நியமனம்.
பிப்.3: பண மோசடி வழக்கில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னிக்கு இரண்டரை ஆண்டு சிறை.
பிப்.4: உலகின் 145 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஐ.நா., ஒப்பந்தம்.
பிப். 5: இந்தியாவிடம் கடனாக பெற்ற ரூ. 3000 கோடியை இலங்கை திரும்ப கொடுத்தது.
பிப்.10: சீன உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தகவல்.
பிப்.13: இத்தாலி பிரதமராக மரியோ டிராகி பொறுப்பேற்பு.
பிப்.16: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினால் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
சீனாவுக்கு 'அடி': பிப். 19: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் நடந்த மோதலில் தங்கள் நாட்டு வீரர்கள் நான்கு பேர் பலியானதாக சீனா ஒப்புதல்.
பிப்.19: பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது.
பிப்.25: அமெரிக்க குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு' கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் நீக்கினார்.
டாப் - 4
* பிப். 15: சுங்கச் சாவடியில் 'பாஸ்டேக்' முறை அமல்.
* பிப். 17: முதல் முறையாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியது.
* பிப். 21: இந்தியாவின் முதல் 'டிஜிட்டல்' பல்கலை கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவக்கம்.
* பிப். 23: ராணுவத்தில் பெண்கள் சேர சவுதி அரசு அனுமதி.