sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

மார்ச் - ஏப்ரல்

/

மார்ச் - ஏப்ரல்

மார்ச் - ஏப்ரல்

மார்ச் - ஏப்ரல்


PUBLISHED ON : ஜன 01, 2022

Google News

PUBLISHED ON : ஜன 01, 2022


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

மார்ச் 11: புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை 'ஆல் பாஸ்'.

மீனாட்சி தரிசனம்: ஏப். 1: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம். கோயிலின் முக்கியத்துவத்தை வருகை பதிவேட்டில் குறிப்பிட்டார்.

ஏப். 27: மதுரை கள்ளிக் குடியில் ஆம்னி வேன்--கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.

ஏப். 27: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனாவுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.

இந்தியா

மார்ச் 1: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடிக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப். 8ல் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.

மார்ச் 2: ராஜ்யசபா, லோக்சபா 'டிவி' சேனல், ஒரே சேனலாக (சன்சாத்) இணைப்பு.

மார்ச் 4: வாழ்வதற்கு சிறந்த நகர பட்டியலில் பெங்களூரு முதலிடம், சென்னைக்கு 4வது இடம் மத்திய அரசு அறிவிப்பு.

புதிய நீதிபதி: ஏப். 6: உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக ஆந்திராவின் என்.வி. ரமணா பதவியேற்பு.

மார்ச் 8: கட்டாய மதமாற்ற திருமணத்தை தடுக்கும் சட்டம் ம.பி.,யில் நிறைவேற்றம்.

மார்ச் 9: இந்தியா - வங்கதேசம் இடையே 1.9 கி.மீ., நீளம் கொண்ட 'மைத்ரி சேது' பாலத்தை பிரதமர் மோடி துவக்கினார்.

கடல் காவலன்: மார்ச் 10: இந்திய கப்பல்படையில் 'பி-75 கரன்ஜ்' நீர்மூழ்கி கப்பல் சேர்ப்பு. முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில், மணிக்கு 37 கி.மீ., வேகத்தில் செல்லும்.

மார்ச் 10: உத்தரகண்ட் முதல்வராக தீரத்சிங் ராவத் பதவியேற்பு.

* இந்திய கப்பல்படையில் 'பி-75 கரன்ஜ்' நீர்மூழ்கி கப்பல் சேர்ப்பு

மார்ச் 11: கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுக்கு பின் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மஹா சிவராத்திரி பூஜை நடத்தினார்.

மார்ச் 16: கருக்கலைப்பு உச்சவரம்பை 20ல் இருந்து 24 வாரமாக உயர்த்தும் மசோதா பார்லிமென்டில் நிறைவேறியது.

மார்ச் 19:'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

மார்ச் 31: மின் விபத்தை தடுக்க ரயிலில் இரவு 11:00--அதிகாலை 5:00 மணி வரை அலைபேசி, லேப்டாப் 'சார்ஜ்' செய்ய தடை.

ஏப். 1: 45 வயதுக்கு மேற்பட் டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்.

ஏப். 4: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம்.

ஏப். 5: லஞ்ச புகாரால் மகா ராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் (தேசியவாத காங்.,) ராஜினாமா.

ஏப். 7: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாணைய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.

ஏப். 12: ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி.

ஏப். 13: இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்பு.

ஏப். 14: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து. பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு.

மேளா... கும்பமேளா: ஏப். 17 : கொரோனா காரணமாக ஹரித்வார் கும்பமேளா (12 ஆண்டு) பாதியில் நிறுத்தம்.

ஏப். 22: கர்நாடகாவின் சிரூர் மடத்தின் தலைமை ஜீயராக 16 வயதான அனிருத்தா சரளத்தையா சுவாமி தேர்வு.

ஏப்.  25: இந்தோனேஷி யாவில் 'கே.ஆர்.ஐ.நங்கலா 402' நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதில் 53 பேர் பலி.

* கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில், சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை.

உலகம்

மார்ச் 5: ராணுவ செலவினங் களுக்கு சீனா ரூ. 16 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

தாயுடன் சேய்: மார்ச் 11: பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட பேச முடியாத, காது கேளாத இந்தியப் பெண் கீதா, 5 ஆண்டுக்குப்பின் மகாராஷ்டிராவில் தாயுடன் சேர்ந்தார்.

மார்ச் 12: 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்த 'குவாட்' மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் பங்கேற்பு.

மார்ச் 19: ஐ.நா.,வின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம், இந்தியா 139வது இடம் பிடித்தன.

* தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுகு ஹசன் பதவியேற்பு.

மார்ச் 22: நைஜரில் பயங்கர வாதிகளின் தாக்குதலில் 137 பேர் பலி.

மார்ச் 26: வங்கதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.

மார்ச் 27: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 115 பேர் சுட்டுக்கொலை.

மார்ச் 31: விலங்குகளுக்கான 'கார்னிவாக் கோவ்' கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டு பிடித்தது.

ஏப். 7: அமெரிக்க 'போர்ப்ஸ்' பத்திரிகையின் உலக பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜாஸ் முதலிடம்.

* ஆசிய பணக்காரர்களில் இந்தியாவின் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம்.

ஏப். 17: கியூபா கம்யூ., தலைவர் ரவுல் காஸ்ட்ரோ 89, விலகினார். 60 ஆண்டு காஸ்ட்ரோ குடும்ப பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.

ஏப். 21: ஆப்ரிக்காவில் உள்ள சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி இட்னோ 68, கிளர்ச்சியாளர்களால் சுட்டுக்கொலை.

ஏப். 22: அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த வனிதா குப்தா நியமனம்.

ஏப். 27: பிரிட்டனில் தானியங்கி வாகனங்கள் இயக்க அனுமதி.

டாப் - 4

* ஏப். 2: தைவானில் ரயில் தடம் புரண்டு 50 பேர் பலி.

* ஏப். 3: ராணுவத்துக்கான எடை குறைந்த 'புல்லட் புரூப்' உடை அறிமுகம்.

* ஏப். 3 : பொதுத்துறை நிறுவன தேர்வு வாரிய தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமனம்.

* ஏப். 13: காசநோய் இல்லாத யூனியன் பிரதேசமாக லட்சத்தீவு அறிவிப்பு.






      Dinamalar
      Follow us