sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 13, 2026 ,மார்கழி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

மே

/

மே

மே

மே


PUBLISHED ON : ஜன 01, 2022

Google News

PUBLISHED ON : ஜன 01, 2022


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

மே 2: கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் விஜய் வசந்த் வெற்றி.

நனவான கனவு: மே 7: பத்தாண்டுக்கு பின் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் 13வது முதல்வராக ஸ்டாலின் 68, பதவியேற்பு.

மே 9: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமனம்.

மே 10: தமிழகத்தில் முழு ஊரடங்கு (மே 10 - 24) அமல்.

மே 10: எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி (அ.தி.மு.க.,) தேர்வு.

மே 12: தமிழக சட்டசபை சபாநாயகராக தி.மு.க.,வைச் சேர்ந்த அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு.

மே 13: கடலுாரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் பலி.

மே 20: தமிழகத்தில் 18 -44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கம்.

மே 27: 2022-23 கல்வி ஆண்டு முதல் தமிழில் பாடம் நடத்த இன்ஜினியரிங் கல்லுாரிக்கு அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) அனுமதி.

மே 31: சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர், கோயில் பணியாளர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.

இந்தியா

மே 1: குஜராத்தின் பரூச் மாவட்ட மருத்துவமனை தீ விபத்தில் 18 கொரோனா நோயாளி பலி.

மே 2: அசாமில் நடந்த தேர்தலில் பா.ஜ. கூட்டணி, ஆட்சியை தக்க வைத்தது.

* மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமுல் காங்.. ஆட்சி.

மே 3: கர்நாடகாவின் சாம்ராஜா நகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 கொரோனா நோயாளி பலி.

மே 5: மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்.,) மீண்டும் பதவியேற்பு.

* மஹாராஷ்டிராவில் 'மராத்தா' பிரிவினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மீண்டும் ரங்கசாமி: மே 7: புதுச்சேரி முதல்வராக நான்காவது முறையாக என்.ஆர்.காங்கிரசின் ரங்கசாமி பதவியேற்பு.

மே 8: ஆந்திராவின் கடப்பாவில் சுண்ணாம்பு சுரங்க வெடிவிபத்தில் 10 பேர் பலி.

மே 10: அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா (பா.ஜ.,) பதவியேற்பு.

* 17 கோடி 'டோஸ்' தடுப்பூசியை இந்தியா ௧௧௪ நாளில் செலுத்தி சாதனை. அமெரிக்கா 115, சீனா 119 நாளில் எட்டின.

மே 13: கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது 'டோஸ்' செலுத்தும் இடைவெளி 12-16 வாரமாக நீடிப்பு.

மே 17: கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் 'டி.ஆர்.டி.ஓ.,' தயாரித்த '2டிஜி' மருந்து விநியோகம் துவக்கம்.

மே 17: 'நாரதா' லஞ்ச ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தின் 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்தது.

புரட்டிய புயல்: மே 20: 'டாக்டே' புயலில், மும்பை கடலில் எண்ணெய் தொழிலாளர்கள் தங்கியிருந்த மிதவை கப்பல் கவிழ்ந்ததில் 37 பேர் பலி.

மே 20: கேரள முதல்வராக மீண்டும் பினராயி விஜயன் (மார்க்சிஸ்ட்) பதவியேற்பு.

மே 21: மஹாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 நக்சல்கள் பலி.

மே 25: 'ரோச்' இந்தியா தனியார் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அறிமுகம். ஒரு டோஸ் விலை ரூ. 60,000.

மே 29: கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ. 10 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.

மே 31: புதிய பார்லிமென்ட் கட்ட தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு.

உலகம்

மே 3: வங்கதேசத்தில் பத்மாவதி நதியில் படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலி.

மே 4: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி விவாகரத்து.

மே 5: மாலி நாட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தை பிறந்தன.

மே 11: சீன மக்கள்தொகை 141 கோடியாக உயர்வு. (உலகில் முதலிடம்)

* அமெரிக்காவில் 12 -15 வயதுக்குட்பட்டவர் பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி.

சூப்பர் 'மேபிளவர்': மே 12: உலகின் முதல் தானியங்கி அமெரிக்க கப்பல் 'மேபிளவர் 400' அட்லாண்டிக் கடலை கடந்தது. நீளம் 50 அடி. எடை 8164 கிலோ.

மே 14: நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு.

மே 16: இரு நாடுகளின் 11 நாள் சண்டையில் இஸ்ரேலில் 12, பாலஸ்தீனத்தில் 240 பேர் பலி.

உலக அழகியே: மே 17: மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸா 27, 'மிஸ் யுனிவர்ஸ் - 2020' பட்டம் வென்றார்.

மே 21: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு மாணவர் சங்க தேர்தலில் இந்திய வம்சாவளி மாணவி ராஷ்மி சமந்த் வெற்றி.

மே 25: அண்டார்டிகாவில் உலகின் பெரிய பனிப்பாறை 'ஏ-76' (4320 சதுர கி.மீ.) 'வெடல்' கடல்பகுதியில் உடைந்து விழுந்தது. நீளம் 175 கி.மீ. அகலம் 25 கி.மீ.

மே 26: பஞ்சாப் வங்கி கடன் மோசடி வழக்கில் இந்திய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை சர்வதேச போலீசார், டொமினிக்காவில் கைது செய்தனர்.

மே 26: ஹாங்காங்கில் இளஞ்சிவப்பு 'சகுரா' வைரம் (15.81 காரட்) ரூ. 213 கோடிக்கு ஏலம் போனது.

மே 27: எத்தியோப்பியாவில் 'டைக்ரே' கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 22 அரசு அதிகாரிகள் பலி.

மே 28: நான்காவது முறையாக சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் தேர்வு.

மே 31: சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்ததால் 3 குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி. (இதுவரை 2க்கு அனுமதி)

டாப் - 4

* மே 25: சி.பி.ஐ., இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்.

* மே 28: நைஜீரியாவின் நைஜர் நதியில் படகு மூழ்கியதில் 60 பேர் பலி.

* மே 28: சிரிய அதிபராக தொடர்ந்து நான்காவது முறையாக அல் ஆசாத் தேர்வு.

* மே 29: மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் நியமனம்.






      Dinamalar
      Follow us