PUBLISHED ON : டிச 31, 2015

ஜனவரி
ஜன.11: சென்னை ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரின்கா சாம்பியன்.
ஜன.25: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் செய்னா, காஷ்யப் சாம்பியன்.
ஜன.31: 'சூப்பர்' செரினா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலில் (ஜன. 31) அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் ஷரபோவாவை வீழ்த்தி கோப்பை வென்றார்.
பிப்ரவரி
பிப்.1: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்.
* கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி கோப்பை வென்றது.
பிப். 2: கனடாவில் நடந்த சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல் சாம்பியன்.
பிப்.16: எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் ஏலத்தில் டில்லி அணிக்காக யுவராஜ் ரூ. 16 கோடிக்கு ஒப்பந்தம்.
பிப்.22: டில்லி ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் சோம்தேவ் சாம்பியன்.
* டில்லியில் நடந்த (பிப்., 22) ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) பைனலில் பஞ்சாப் வாரியர்ஸ் அணியை வீழ்த்திய ராஞ்சி ரேஸ் அணி, 2வது முறையாக (2013, 2015) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பிப்.24: கெய்ல் 'புயல்': ஜிம்பாப்வேக்கு எதிராக (பிப்., 24) அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், 138 பந்தில் 200 ரன்களை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். தவிர இவர், உலக கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் கடந்த முதல் வீரரானார்.
மார்ச்
மார்ச் 2: இந்திய கிரிக்கெட் போர்டு தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்வு.
மார்ச் 7: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் செய்னா.
மார்ச் 12: ரஞ்சி கோப்பை பைனலில் தமிழகத்தை வீழ்த்திய கர்நாடகா அணி சாம்பியன்.
மார்ச் 15: சுவிட்சர்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கோப்பை வென்றார்.
மார்ச் 21: உலக கோப்பையில் ஒரு போட்டியில் அதிக (237, எதிர்-வெ.இண்டீஸ்) ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை எட்டினார் நியூசிலாந்தின் கப்டில்.
மார்ச் 26: உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
மார்ச் 28: 'சூப்பர்' செய்னா: டில்லியில் நடந்த (மார்ச் 28) இந்திய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறிய செய்னா நேவல், உலக தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர இவர், இந்த இலக்கை எட்டிய 2வது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னாள் இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே 1980ல் உலகின் 'நம்பர்-1' வீரராக இருந்துள்ளார்.
மார்ச் 29: இத்தொடரின் பைனலில் (மார்ச் 29) அசத்திய செய்னா நேவல், தாய்லாந்தின் ரட்சானக்கை தோற்கடித்து முதன்முறையாக கோப்பை வென்றார். இதன்மூலம் இத்தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியரானார்.
மார்ச் 29: அஞ்சாத ஆஸி.,க்கு 'அஞ்சு: மெல்போர்னில் நடந்த (மார்ச் 29) உலக கோப்பை பைனலில், நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 5வது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை.
ஏப்ரல்
ஏப். 6: ரஷ்யாவில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இந்தியாவின் ஹரிகா வெண்கலம் வென்றார்.
* மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
ஏப். 12: பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., இரட்டையர் பிரிவு 'ரேங்கிங்' பட்டியலில் 'நம்பர்-1' இடம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார் சானியா.
ஏப். 18: பெடரேஷன் கோப்பை டென்னிஸ், 'ஆசிய-ஓசியானா குரூப்-2' பைனலில் இந்திய அணி வெற்றி.
மே
மே.3: நூற்றாண்டின் மிகச் சிறந்த குத்துச்சண்டை (மே.3) போட்டியில் பிலிப்பைன்சின் பாக்குயாவோவை வீழ்த்திய அமெரிக்காவின் மேவெதர், உலக 'வெல்டர் வெயிட்' சாம்பியன் பட்டத்துடன் ரூ. 1143 கோடி பரிசு வென்றார். பின் இதற்கான நுழைவுக்கட்டணம் செலுத்தாததால் பட்டம் பறிக்கப்பட்டது.
மே 24: எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் பைனலில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை அணி சாம்பியன்.
ஜூன்
ஜூன் 6: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் கோப்பை வென்றார்.
ஜூன் 7: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா கோப்பை வென்றார்.
* சீனாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 800 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டிண்டு லூகா தங்கம் வென்றார்.
ஜூன் 26: நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2வது இடம்.
டிவிலியர்ஸ் விஸ்வரூபம் வெஸ்ட் இண்டீசுக்கு (ஜன., 18) எதிரான ஒருநாள் போட்டியில், 16 பந்தில் அதிவேக அரைசதம் அடித்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், ஜெயசூர்யாவின் (இலங்கை, 17 பந்து, எதிர்-பாக்., 1996) சாதனையை முறிடித்தார்.
பின் தனது விளாசலை தொடர்ந்த இவர் 31 பந்தில் அதிவேக சதம் கடந்து இன்னொரு உலக சாதனை படைத்தார்.
ஜூன் 29: கலக்கல் ஜோடி: கனடா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் (ஜூன் 29) தொடரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜூலை
ஜூலை 8: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய பெண்கள் அணி (3-2) வென்றது.
ஜூலை 11: விம்பிள்டன் டென்னிசில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் சாம்பியன்.
ஜூலை 12: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் கோப்பை வென்று சானியா சாதனை.
* விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்.
* கலப்பு இரட்டையரில் பயஸ்-ஹிங்கிஸ் சாம்பியன்.
ஜூலை 14: சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டு தடை.
* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா (3-0) வென்றது.
ஆகஸ்ட்
ஆக. 2: ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.
ஆக. 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து (3-1) வென்றது.
* ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் ஓய்வு.
ஆக. 15: உலக பாட்மின்டனில் இந்தியாவின் செய்னா வெள்ளி வென்றார்.
ஆக. 22: கபடி லீக் தொடரில் மும்பை அணி சாம்பியன்.
ஆக. 23: இலங்கை வீரர் சங்ககரா ஓய்வு.
ஆக. 28: சாதித்த ஹாக்கி பெண்கள்: இந்திய பெண்கள் ஹாக்கிக்கு பொன்னான ஆண்டாக, 2015 அமைந்தது. பெல்ஜியத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பின், ஒலிம்பிக் வாய்ப்பை (ஆக., 28) பெற்று அசத்தியது.
ஆக. 29: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 'கேல் ரத்னா' விருது பெற்றார்.
செப்டம்பர்
செப். 1: இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி.
செப்.13: 'சூப்பர்' ஜோடி: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் (செப். 13) இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் ஆனது.
செப். 12: வயது தடை அல்ல: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பயஸ் (42), சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் (செப்., 12) ஆனது. இதையடுத்து 46 ஆண்டுக்குப் பின் கிராண்ட்ஸ்லாம் அரங்கில், ஒரே 'சீசனில்' 3 கலப்பு
இரட்டையர் பட்டம் வென்ற முதல் ஜோடி என்ற சாதனை படைத்தனர். தவிர, ஆண்கள் (8), கலப்பு இரட்டையர் (9) என சேர்த்து 17வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றார்.
செப். 14: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் ஜோகோவிச் சாம்பியன்.
அக்டோபர்
அக். 3: பி.சி.சி.ஐ., புதிய தலைவரானார் சஷாங்க் மனோகர்.
அக். 8: 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி (0-2) தென் ஆப்ரிக்காவிடம் இழந்தது.
அக். 10: சீன ஓபன் டென்னிசில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்.
அக். 11: நெதர்லாந்து ஓபன் பாட்மின்டனில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் சாம்பியன்.
* நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய அணி 2-1 என, கைப்பற்றியது.
அக். 15: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் ஓய்வு.
அக். 20: இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். டெஸ்டில் அதிவேக முச்சதம் (278 பந்தில், எதிர் - தெ.ஆ.,2008), ஒரு நாள் அரங்கில் அதிவேக இரட்டை சதம் (140 பந்து, எதிர் - வெ.இ., 2011) அடித்தார். 'நவீன ரிச்சர்ட்ஸ்'என்றழைக்கப்பட்ட இவர், அக்., 20ல் ஓய்வு பெற்றார்.
அக். 25: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என இந்தியா இழந்தது.
நவம்பர்
நவ. 1: நாங்க தான் 'நம்பர்-1': சிங்கப்பூரில் நடந்த டபிள்யு.டி.ஏ., உலக டூர் டென்னிஸ் பைனல்ஸ் தொடரில் (நவ. 1) கோப்பை வென்ற இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ், 'நம்பர்-1' ஜோடியாக ஜொலித்தது.
நவ. 7: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஹீனா சித்து தங்கம் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') வென்றார்.
நவ. 7: நாயகன் அஷ்வின்: இந்திய அணியின் 'நம்பர்-1' சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின். இலங்கை மண்ணில் 21 (டெஸ்ட்) விக்கெட் சாய்த்த இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 31 விக்கெட் வீழ்த்தினார். தனது 5வது தொடர் நாயகன் விருதையும் (நவ., 7) தட்டிச் சென்றார். இதையடுத்து ஜாம்பவான் சச்சின், 200 டெஸ்டில் (5 தொடர் நாயகன்) பங்கேற்று நிகழ்த்திய சாதனையை, 31 டெஸ்டில் விளையாடிய அஷ்வின் சமன் செய்தார். டெஸ்ட் 'ஆல் ரவுண்டர்' பட்டியலில் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். சிறந்த டெஸ்ட் பவுலர்கள் வரிசையில் 2வது இடத்தை பிடித்தார். இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
நவ. 10: ஐ.சி.சி., புதிய 'சேர்மன்' ஆனார் சஷாங்க் மனோகர்.
நவ. 17: ஆஸ்திரேலிய அணியின் 'வேகப்புயல்' மிட்சல் ஜான்சன் ஓய்வு.
நவ. 21: உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் 15வது பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி.
நவ. 22: இளமை அருமை: மலேசியாவில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பைனலில் (நவ. 22) இந்திய அணி, பாகிஸ்தானை
வென்றது. வெற்றி கோப்பையுடன் இளம் இந்திய வீரர்கள்.
நவ. 22: ஜோரான ஆண்டு: டென்னிஸ் அரங்கில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி நாயகனாக உலா வந்தார். ஏ.டி.பி., உலக டூர் பைனல்ஸ் தொடரில் (நவ. 22) சுவிட்சர்லாந்தின் பெடரரை வென்று கோப்பை கைப்பற்றிய ஜோகோவிச். இடம்: லண்டன்
நவ.27-29: முதல் 'பகலிரவு' டெஸ்ட்: டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக 'பகலிரவு' டெஸ்ட் (நவ., 27-29) போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் நடந்தது. 'பிங்க்' நிற பந்தை பயன்படுத்தி விளையாடிய இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
நவ. 29: மக்காவு ஓபன் பாட்மின்டன் தொடரில் சிந்து, 'ஹாட்ரிக்' பட்டம்.
நவ. 29: ஆஹா ஹாமில்டன்: 'பார்முலா-1' கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தய தொடரில் (நவ. 29) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பிரிட்டன் வீரர் ஹாமில்டன்.
டிசம்பர்
டிச. 6: உலக ஹாக்கி லீக் தொடரில் இந்திய அணிக்கு வெண்கலம்.
டிச. 7: ஏற்றம் தந்த மாற்றம்: டெஸ்ட் அரங்கில் கேப்டன் கோஹ்லியின் வரவு இந்திய அணிக்கு மாற்றம் தந்தது. இவரது தலைமையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டில்லி டெஸ்டில் (டிச. 7) வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
டிச. 8: பிரிமியர் தொடரில் சென்னை, ராஜஸ்தானுக்குப் பதில் புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வாகின.
டிச. 19: தொடரட்டும் சாகசம்: தொழில் ரீதியான குத்துச்சண்டை கோதாவில் களமிறங்கிய (டிச. 19) இந்தியாவின் விஜேந்தர், பல்கேரியாவின் சமித்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். இடம்: மான்செஸ்டர், இங்கிலாந்து
டிச. 20: நம்ம சென்னை சாம்பியன்: இரண்டாவது ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலில் (டிச. 20) கோவாவை வீழ்த்திய சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையுடன் சென்னை அணி வீரர்கள்.
டிச. 28: விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணி சாம்பியன்.
