தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/இந்தியா

இந்தியா

இந்தியா


PUBLISHED ON : டிச 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி

ஜன.12: 'இஸ்ரோ' புதிய தலைவராக கிரண்குமார் நியமனம்.

ஜன.15: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, பா.ஜ., வில் இணைந்தார்.

ஜன.16: இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஹரி ஷங்கர் பிரம்மா பொறுப்பேற்பு.

ஜன.17: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், இந்திய விமானப்படையில் சேர்ப்பு.

ஜன.19: மத்திய தணிக்கை வாரிய புதிய தலைவராக பக்லஜ் நிஹாலனி பொறுப்பேற்பு.

ஜன.21: 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் படி 11.5 கோடி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஜன.25: 2014ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு. 9 பத்ம விபூஷண், 20 பத்ம பூஷன், 70 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு.

ஜன.26: இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமை பெற்றார் ஒபாமா.

ஜன.31: 5000 கி.மீ., தூரம் சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

பிப்ரவரி

பிப்.4: சாரதா சிட் பண்டு மோசடி வழக்கில் கைதான திரிணமுல் காங்., எம்.பி., சிரிஞ்ஜாய் போஸ், பதவியை ராஜினாமா செய்தார்.

பிப்.6: புதிய அமைப்பு: திட்டக்குழு கலைக்கப்படும் என மோடி சுதந்திர தின உரையில் அறவித்தார். அதன்படி திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நீதி ஆயோக்' என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் இருப்பார். துணை தலைவராக அரவிந்த் பனகரியா நியமனம். முதல் கூட்டம் பிப்., 6ம் தேதி நடந்தது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

பிப்.14: 'டில்லி ராஜா: டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், ஆம் ஆத்மி 67 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றிபெற்றது. பிப்., 14ல், அரவிந்த் கெஜ்ரிவால் 2வது முறை முதல்வராக பதவியேற்றார். பா.ஜ., 3 இடங்களில் மட்டுமே வென்றது. பா.ஜ., வின் முதல்வர் வேட்பாளரான கிரண்பேடியும் தோல்வியடைந்தார். காங்., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

பிப்.15: இலங்கையின் அதிபர் சிறிசேன அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார். அணுசக்தி உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பிப்.20: சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் கழித்து அருணாசலப்பிரதேசம் ரயில் பாதை மூலம் டில்லியுடன் இணைந்தது.

பிப்.22: பீகார் முதல்வராக இருந்த ஜிதன் ராம் மஞ்ஜி ராஜினாமா. நிதிஷ்குமார் 4வது முறையாக முதல்வராக பதவியேற்பு.

பிப்.24: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டில்லியில் அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்பு.

* பாலியல் வழக்கில் சிக்கிய, பருவநிலை மாற்றம் தொடர்பான குழுவின் தலைவர் ஆர்.கே.பச்சோரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிப்.25: வியாபம் முறைகேட்டு வழக்கில் சிக்கிய மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவ், பதவியை ராஜினாமா செய்தார்.

மார்ச்

மார்ச் 3: அரியானாவில் உலகின் உயரமான (250 அடி) தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 96 அடி நீளமும், 64 அடி அகலமும் கொண்டது.

மார்ச் 9: 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

மார்ச் 11: நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சி.பி.ஐ., நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

மார்ச் 14: அரியானா அரசு மாட்டுக்கறி விற்பதற்கு தடை விதித்தது.

மார்ச் 15: வீடு கொடுத்த மோடி: மார்ச் 15ம் தேதி மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி இலங்கை சென்றார். அந்நாட்டின் பார்லிமென்டில் உரையாற்றினார். பின் தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கு பகுதிகளுக்கு சென்றார். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக இந்திய அரசு கட்டிக் கொடுத்த 27,000 வீடுகளை தமிழர்களுக்கு வழங்கினார்.

மார்ச் 17: ராஜஸ்தானில் ஜாட் இனத்தவர் ஒ.பி.சி.,யில் சேர்க்கப்பட்டதை, உச்ச நீதிமன்றம் நீக்கியது.

மார்ச் 19: பீகாரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் பிட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு.

மார்ச் 20: உத்தரபிரதேசத்தின் ரேபரேலியில் டேராடூன் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்ததில் 32 பேர் பலி.

மார்ச் 27: 'பாரத ரத்னா' வாஜ்பாய்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கே சென்று நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' மார்ச் 27ல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

மார்ச் 28: மிசோரம் கவர்னர் ஆஜிஜ் குரேஷி நீக்கம்.

* இஸ்ரோ 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1டி' என்ற நான்காவது ஜி.பி.எஸ்., செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

* ஆம்ஆத்மி தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கம்.

காஷ்மீரில் மலர்ந்தது தாமரை: காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 87 இடங்களில் மக்கள் ஜனநாயக கட்சி 28, பா.ஜ., 25 இடங்களில் வென்றது. எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இரு கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. மார்ச் 1ம் தேதி முதல்வராக முப்தி முகமது சயிது, துணைமுதல்வராக பா.ஜ.,வின் நிர்மல் குமார் பதவியேற்றனர்.

மார்ச் 30: பனாரஸ் இந்து பல்கலை., நிறுவனரும், கல்வியாளருமான மறைந்த மதன் மோகன் மாளவியாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா மார்ச் 30ல் வழங்கப்பட்டது. விருதினை அவரது குடும்பத்தினர் பெற்றனர்.

ஏப்ரல்

ஏப்.8: சிறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கும் 'முத்ரா' வங்கியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ஏப்.9: அணு ஆயுதங்களை தாங்கி சென்று 350 கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும் தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை.

* பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி, கனடாவுக்கு பயணம். ஐதராபத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிய சத்யம் நிறுவனத்தில், பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூவுக்கு ஏப்.௯ல்,

7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

ஏப்.11: சத்தீஸ்கரின் பஸ்தர் என்ற இடத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி.

ஏப்.15: இவர்கள் இப்படித்தான்: தேசிய அளவில் பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளுக்கு மாற்றாக பெரிய எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏப்., 15ம் தேதி, சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகள் 'ஒரே கட்சியாக' செயல்படுவது என முடிவெடுத்தனர். சில நாட்களிலேயே இக்கூட்டணி சிதறி விட்டது.

ஏப்.19: மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலராக சீதாராம் யெச்சூரி நியமனம்.

* இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பொறுப்பேற்பு.

ஏப்.20: ஆயுதம் தாங்கி கப்பல்: முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் என்ற ஆயுதம் தாங்கி கப்பல், ஏப்., 20ல் மும்பையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. அணு கதிரியக்கம், ரசாயன தாக்குதல் உள்ளிட்ட சூழ்நிலைகளிலும் இயங்கும்.

ஏப்.22: நேபாளத்துக்கு ஆன்மிக பயணம் சென்றவர்களின் பஸ், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பக்தர்கள் பலி.

ஏப்.24: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சம அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றம்.

ஏப்.28: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை.

மே

மே 5: ஆகாஷ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்ப்பு.

மே 6: தப்பிய சல்மான்: பாலிவுட் நடிகர் சல்மான் கான் 2002ல் குடிபோதையில் கார் ஓட்டி ஒருவர் பலியான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மே 6ம் தேதி, 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சல்மான் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். போதிய சாட்சியங்கள் இல்லை எனக்கூறி டிச.10ல் மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு விடுதலை வழங்கி தீர்ப்பளித்தது.

மே 9: பிரதமர் மோடி, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, பென்ஷன் ஆகிய 3 விதமான சமூக காப்பீட்டு திட்டங்களை துவக்கினார்.

மே 10: பாலிவுட் நடிகர் சசி கபூருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது.

மே 11: கறுப்பு பணம் மீட்பது தொடர்பான சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்.

மே 13: மத்திய மாநில அரசு விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களை மட்டுமே இடம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

மே 16: சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம்.

மே 21:'மிராஜ் 2000' போர் விமானம், டில்லி அருகே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நடுவே வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

மே 26: யாஷ் பிர்லா, குர்ஷித் சிங் கோச்சர், ரிட்டிகா சர்மா, சங்கிதா சானே ஆகியோர் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்துள்ளதாக தகவல்.

* விவசாயிகளுக்கு உதவும் விதமாக 'டிடி கிசான்' என்ற புதிய சேனலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ஜூன்

ஜூன் 1: மத்திய அரசு சேவை வரியை 12.36 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தியது.

ஜூன் 2: வானிலை ஆராய்ச்சிக்கு உதவும் 'பாஸ்கரா' சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம்.

ஜூன் 3: நொந்து 'நூடுல்சான' மேகி: மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிமான காரீயம் இருப்பதாக டில்லியில் ஜூன் 3ல் மேகி விற்பனைக்கு அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு ஜூன் 4ல் தடை அறிவித்தது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின் ஆக.13ல் தடையை விலக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நவ. 7ல் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

ஜூன் 4: எதிரிக்கு எச்சரிக்கை: ஜூன் 4ம் தேதி மணிப்பூரின் சந்தல் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலி. இத்தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவம், மியான்மர் நாட்டுக்கு தெரியாமலேயே, அதன் எல்லைக்குள் சென்று அப்பகுதியில் பதுங்கியிருந்த 38 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

ஜூன் 7: உ.பி.,யில் சமாஜ்வாடி மாநில அமைச்சர் ஒருவரை எதிர்த்து விமர்சனக் கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் எரித்துக் கொலை.

ஜூன் 8: புதிய தலைமை தகவல் ஆணையராக விஜய் சர்மா நியமனம்.

* மத்திய விஜிலென்ஸ் ஆணையராக கே.வி.சவுத்ரி நியமனம்.

ஜூன் 9: டில்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக கைது.

ஜூன் 15: தேசிய மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு, முறைகேடு காரணமாக ரத்து.

ஜூன் 18:மும்பையில் கள்ளச்சாராயம் குடித்ததின் விளைவாக 102 பேர் பலி.

ஜூன் 21: உலக யோகா தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது.

ஜூன் 24: மத்திய அரசு 2000 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது.

ஜூலை

ஜூலை 4: இந்தியாவில் முதல் நிலநடுக்க எச்சரிக்கை கருவி உத்தரகண்ட்டில் பொருத்தப்பட்டது.

ஜூலை 9: நில மோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி டில்லி எம்.எல்.ஏ., மனோஜ்குமார் கைது.

ஜூலை 10: 'இஸ்ரோ', பிரிட்டனின் ஐந்து செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

ஜூலை 14: ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் நடந்த மகா புஷ்கரம் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பக்தர்கள் பலி.

ஜூலை 27: பஞ்சாப் தாக்குதல்: ஜூலை 27ம் தேதி பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள டினா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உட்பட ஏழு பேர் பலி.

ஜூலை 28: டில்லி பெண்கள் கமிஷன் தலைவராக சுவாதி மலிவால் பொறுப்பேற்றார்.

ஜூலை 29: ஐ.எப்.எஸ்., அதிகாரி சஞ்சய் சதுர்வேதிக்கு, 2015ம் ஆண்டுக்கான பிலிப்பைன்சின் ராமன் மகசாசே விருது வழங்கப்பட்டது.

ஜூலை 30: யோகா தினத்தை பிரபலப்படுத்தும் வகையில் பத்து ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

ஜூலை 30: 22 ஆண்டுக்குப் பின்: 1993 மார்ச் 12ல், மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த கோர தாக்குதலில் 257 பேர் பலியாகினர். 2011ல் இவ்வழக்கில் 30 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2013ல் யாகப் மேமன், சகோதரர் டைகர் மேமன் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டைகர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார். யாகூப்பின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூலை 30ல் தூக்கிலிடப்பட்டார்.

ஜூலை 31: எல்லை தொல்லை இல்லை: இந்தியா - வங்கதேசம் இடையே 1974ல் போடப்பட்ட நில எல்லை ஒப்பந்தம் பார்லிமென்ட்டில் ஜூன் 6ல் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 31 முதல் புதிய எல்லை வகுக்கப்பட்டு மக்கள் இடம் பெயர்ந்தனர். இதன்படி வங்கதேசத்தின் 7,110 ஏக்கர் இந்தியாவும், 17,160 ஏக்கர் இந்தியப் பகுதி வங்கதேசமும் பரிமாறிக்கொண்டன. 40 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

ஆகஸ்ட்

ஆக.3: நாகலாந்து போராட்டகுழுவுடன் மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம். பதட்டம் தணிந்து அமைதி நிலவ வாய்ப்பு.

ஆக.4: உ.பி., டெக்னிகல் பல்கலைக்கழகம் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் டெக்னிகல் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம்.

ஆக.7: மரண தண்டனையை எதிர்த்து திரிபுரா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆக.10: உலக சுற்றுலா நகரங்களின் கூட்டமைப்பில் இந்தியாவில் முதல் நகரமாக கொச்சி இணைந்தது.

ஆக.10: ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி. பலர் காயமடைந்தனர்.

ஆக.13: இந்திய தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்.

ஆக.18: அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல்வாதிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பவேண்டும் என அலகாபாத் ஐகோர்ட் அறிவுரை.

ஆக.26: குஜராத்தில் படேல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில் போராட்டத்தில் வன்முறை.

ஆக.27: 'ஸ்மார்ட் சிட்டி': நாட்டில் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறப்போகும் 98 நகரங்களின் பெயரை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆக.27ல் அறிவித்தார். அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தில் தலா 12 நகரங்கள் இடம்பெற்றன. தவிர மகாராஷ்டிராவில் 10ம், ம.பி.,யில் 7ம், பீஹார், ஆந்திராவில் 3ம் அடங்கும்.

ஆக.29: மறைந்த அப்துல் கலாமை கவுரவிக்கும் விதமாக டில்லியில் உள்ள அவுரங்கப் சாலைக்கு கலாம் பெயர் சூட்டப்பட்டது.

ஆக.30ல் பிரபல கன்னட எழுத்தாளர் டாக்டர் எம்.எம்.கல்புர்கி, தார்வாத்தில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்பின் நாட்டில் மத சகிப்புத்தன்மை குறித்த விவாதங்கள் பெருமளவில் நடந்தன.

ஆக.31: ஆளில்லாத லெவல் கிராசிங் இல்லாத முதல் மண்டலமாக மத்திய மேற்கு ரயில்வே மண்டலம் தேர்வு.

செப்டம்பர்

செப்.1: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுப்பணியில் 2 சதவீத இட ஒதுக்கீடு அளித்து பீஹார் அரசு உத்தரவு.

செப்.4: ஒடிசாவின் ஏவுகனை பரிசோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்டது.

செப்.6: டில்லி மெட்ரோ ரயிலை பரிதாபாத் வரை நீட்டிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

* மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஐ.என்.எஸ்., வஜ்ரகோஷ் என்ற போர்க்கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

செப்.12: மத்திய அரசின் கங்கை நதி தூய்மைபடுத்தும் திட்டத்துக்கு, மாதா அமிர்தானந்தமயி 100 கோடி ரூபாய் வழங்கினார்.

செப்.15: மராத்தி மொழி பேசுபவர்களுக்கு மட்டும் ஆட்டோ உரிமம் வழங்க மகாராஷ்டிரா அரசு உத்தரவு.

செப்.16: இந்திரா, ராஜிவ், சத்ய ஜித்ரே உட்பட பலரின் தபால் தலைகளை நீக்க மத்திய அரசு முடிவு.

* கோதாவரி, கிருஷ்ணாவை இணைத்த ஆந்திரா, நாட்டில் நதிகளை இணைத்த முதல் மாநிலம் என்ற பெருமை பெற்றது.

செப்.19: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டது.

செப்.30: 2வது பெரிய போர்கப்பல்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., கொச்சி போர்க்கப்பல், செப்., 30ல் கடற்படையுடன் இணைக்கப்பட்டது. 7,500 டன் எடை கொண்ட இந்த கப்பலை மும்பை மாசாகான் நிறுவனம் தயாரித்தது. இந்தியாவின் 2வது பெரிய

போர்க்கப்பலான இதில் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையும் உள்ளது. 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டது.

அக்டோபர்

அக்.3: உலகின் உயரமான (கடல் மட்டத்திலிருந்து 17,600 அடி) ஆராய்ச்சி மையத்தை காஷ்மீரின் லடாக்கில் டி.ஆர்.டி.ஓ., அமைத்தது.

அக்.6: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து.

அக்.7: இந்தியா கேட் அருகே பிரின்சஸ் பூங்காவில் தேசிய போர் நினைவகம், அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

அக்.22: ஆந்திராவின் தலைநகர் எது: தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் உள்ளது. எனவே ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க

வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய தலைநகராக அமராவதி நகரை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதற்கான அடிக்கல் நாட்டுவிழா அக்.22ல் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. 217 சதுர கி.மீ., பரப்பளவில் பிரமாண்டமான பசுமை ஸ்மார்ட்

நகராக அமைய உள்ளது.

அக்.28: அரசுப்பணியில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து மத்தியபிரதேச மாநில அரசு உத்தரவு.

நவம்பர்

நவ.1: ஐ.என்.எஸ்., கொச்சி கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

நவ.6: தங்க திட்டம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க பத்திர திட்டம், அசோக

சக்கர முத்திரை பதித்த தங்க நாணயம் ஆகிய மூன்று புதுமையான திட்டங்களை நவ., 6ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் முதலிரண்டு திட்டங்களும் லாக்கர்களில் முடங்கி கிடக்கும் தங்கத்தை பணமாக்கும் விதமாகவும், 3வது தங்கத்தை வாங்கும் விதமாகவும் உள்ளது.

நவ.11: ஜிசாட்-15 தொலைதொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

நவ.12: மோடி இங்கிலாந்து பார்லிமெண்டில் உரை நிகழ்த்தினார். இவரே அந்நாட்டின் பார்லிமென்ட்டில் உரை நிகழ்த்திய முதல் பிரதமர்.

நவ.15: அனைத்து விதமான சேவை வரிகளிலும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. கிடைக்கும் வருவாய் தூய்மை இந்தியா திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.

நவ.16: நாட்டின் முதல் மெகா உணவுப்பூங்காவுக்கு தெலுங்கானாவில் அடிக்கல். ரூபாய் 109 கோடி, 78 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

நவ.18: ஜன்லோக்பால் சட்டத்துக்கு டில்லி அரசு ஒப்புதல்.

நவ.19: ௭வது மத்திய ஊதிய கமிஷன் அறிக்கையை சமர்ப்பித்தது. அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வும், குறைந்தபட்ச ஊதியம் 18000 ரூபாய் வழங்கவும் பரிந்துரை.

நவ.20: 'மெகா' கூட்டணி: பீகாரில் லாலு, காங்., 'மெகா' கூட்டணியின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் நவ., 20 ல் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். லாலு மகன் தேஜஸ்வி துணை முதல்வரானார்.

நவ.26: முதன்முறையாக இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கடைபிடிக்கப்பட்டது.

டிசம்பர்

டிச.2: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல்.தத்து பதவிக்காலம் டிச.2ல் முடிவடைந்தது. புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாகூர் டிச., 3ல் பதவியேற்றார். 2017, ஜன.4 வரை பதவியில் இருப்பார்.

டிச.6: பாங்காங்கில் இந்தியா பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தீவிரவாதம், பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை.

டிச.8: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 2 நாள் பயணமாக பாகிஸ்தான் பயணம். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.

டிச.10: தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி கட்டாயம் தேவை என்ற சட்ட மசோதா, அரியானா சட்டசபையில் தாக்கல்.

டிச.11: ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே இந்தியா வந்தார். மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம்.

* டில்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக புதிய டீசல் வாகனங்களுக்கு அனுமதிஇல்லை.

டிச.15: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் ராஜேந்திரகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.

டிச.17: நாட்டின் 4வது சூப்பர் கம்ப்யூட்டரை டில்லி ஐ.ஐ.டி., வடிவமைத்தது.

டிச.18: ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகையும், எம்.எல்.ஏ.,வுமான ரோஜா ஓராண்டுக்கு சஸ்பெண்ட்.

டிச.19: சோனியா ஆஜர்: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் ரூ. 2000 கோடி சொத்துகளை அபகரித்ததாக சுப்ரமணியன் சாமி தொடர்ந்த வழக்கில் காங்., தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மோதிலால் வோரோ உள்ளிட்டோர் டிச., 19ம் தேதி டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றனர். அடுத்த விசாரணை 2016 பிப்., 2ல் நடக்கவுள்ளது.

டிச.20: நீதி இதுதானா: டில்லியில் 23 வயது மருத்துவ மாணவி நிர்பையா, 6 பேர் கும்பலால் பாலியல் துன்புறுத்தப்பட்டு 2013 டிச., 29ல்

உயிரிழந்தார். 6 குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை. 4 பேர் தூக்கு தண்டனை விதிப்பு. ஒருவன் மைனர் என்பதால் 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததும் டிச., 20ல் விடுதலை. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு.

டிச.22: டில்லியில் எல்லைப் பாதுகாப்பு படை விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி.

டிச.23: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா பயணம்.

டிச.24: டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண்ஜெட்லி இருந்த காலத்தில், ஊழல் நடந்துள்ளது என பா.ஜ., எம்.பி., கீர்த்தி ஆசாத் பேட்டி. இதனால் கட்சியிலிருந்து நீக்கம்.

டிச.25: இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஆப்கன் பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். வரும் வழியில் திடீர்

பயணமாக பாகிஸ்தான் சென்றார்.

டிச.28: ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு காஸ் மானியம் ரத்து செய்ய அரசு முடிவு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us