PUBLISHED ON : டிச 31, 2015

ஜனவரி
ஜன.7: நியூட்ரினோவுக்கு அனுமதி : தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள அம்பரப்பர்
மலையில், ரூ. 1500 கோடி செலவில் அமையவுள்ள 'நியூட்ரினோ' ஆய்வு மையத்துக்கு
மத்திய அரசு ஜன., 7ல் அனுமதி வழங்கியது. 'நியூட்ரினோ' என்பது அணுவை விட
சிறிய துகள். இந்த ஆய்வின் மூலம் பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறியலாம்.
சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை அறிய உதவும்.
ஜன.18: தமிழக முதல்வர் ஜெயலலிதா- மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்திப்பு.
ஜன.20: ஒகேனக்கல் மலைப் பாதையில் 100 அடிப் பள்ளத்தில், பேருந்து விழுந்து விபத்து. 9 பேர் பலி.
ஜன.30: காங்., கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்.
ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு: பொங்கல் பண்டிகையின் போது நடக்கும் பாரம்பரியமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரபலம். இந்தாண்டு மத்திய விலங்குகள் நல வாரியம் இதற்கு தடை விதித்தது. மக்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லை. முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
பிப்ரவரி
பிப்.1: தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு, புவி சார் குறியீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பிப்.4: சென்னை சட்டக்கல்லூரியை, இடமாற்றம் செய்யக்கூடாது என மாணவர்கள் போராட்டம்.
பிப்.13: பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தமிழக கர்நாடக எல்லையில்(ஆனேக்கல்) தடம் புரண்டதில் 10 பேர் பலி. 150 பேர் காயம்.
பிப்.16: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி 96,516 ஓட்டுகள் வித்தியா சத்தில் வெற்றி.
பிப்.22: ஆப்கனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமார் விடுதலை.
பிப்.24: மத்திய அரசின் புராதன சின்னங்களை பாதுகாக்கும் திட்டத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர், மாமல்லபுரம் கோயில் இடம் பெற்றது.
மார்ச்
மார்ச் 8: உலக மகளிர் தினத்தையொட்டி டி.டி.ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயலர் சாந்தி ரங்கநாதனுக்கு அவ்வையார் விருது.
* இருசக்கர வாகன ஓட்டிகள்: கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மார்ச் 18: 'வாட்ஸ் அப்பில்' வினாத்தாள்: ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் மார்ச் 18ம் தேதி பிளஸ் 2 கணித தேர்வு நடந்தது. கண்காணிப்பாளராக இருந்த 2 ஆசிரியர்களின் கையில் அலைபேசி இருப்பதும், அதில் 'வாட்ஸ் ஆப்' மூலம் கணித வினாத்தாள் சிலருக்கு அனுப்பப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த 2 ஆசிரியர்கள் உட்பட 6 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மார்ச் 28: 'புதிய பூதம்' மேகதாது: காவிரி ஆற்றில் இருந்து கர்நாடகா, தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். இதனை மறுக்கும் கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக விவசாயிகள் மார்ச் 28ல் 'பந்த்' நடத்தினர்.
ஏப்ரல்
ஏப்.1: ஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கு தொடர்பாக தயாநிதி, கலாநிதியின் ரூ.740 கோடி சொத்துகளை சி.பி.ஐ., முடக்கியது.
* ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு.
ஏப்.3: திண்டுக்கல் அருகே செம்பட்டியில் கார் - லாரி மோதியதில் 4 ஆசிரியர்கள் உள்பட 9 பேர் பலி.
ஏப்.4: தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 2014 - 15 நிதியாண்டில் 32.41 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை.
ஏப்.5: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது உலைகளுக்கு மத்திய அரசு அனுமதி.
சிறையில் அக்ரி : நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துகுமாரசுவாமி தற்கொலைக்கு, டிரைவர் பணி நியமனம் தொடர்பாக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி கொடுத்த நெருக்கடி தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. மார்ச் 7ல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஏப்., 5ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமினில் விடுவிப்பு.
ஏப்.7: இஸ்ரோ செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தின் தலைவராக, சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்பு.
ஏப்.13: போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடி செய்த பா.ம.க., மகளிர் அணி நிர்வாகி சண்முகசுந்தரி கைது.
ஏப்.24: தமிழக போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா நிறுவுவதற்கு தமிழக அரசு ஒப்புதல்.
ஏப்.25: நடிகை ஐஸ்வர்யா நடித்த நகைக்கடை விளம்பரத்தில் இனவெறி இருப்பதாக சர்ச்சை. இதனால் அந்த விளம்பரம் நிறுத்தம்.
ஏப்.30: நூறு ஆண்டுகளுக்குப் பின் தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் நடந்தது.
* ஒரே நேரத்தில் டுமீல் டுமீல்: திருப்பதி வனப்பகுதியில், செம்மரம் கடத்தியதாக ஒரே நேரத்தில் 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு போராட்டங்களும் நடத்தின.
மே
மே.1: கோவையில் மாவோயிஸ்ட் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி கைது.
மே.11: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
* மே.11: ஐரோப்பாவில் இந்திய மாம்பழத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.
மே 15: தினமலர் ஆசிரியருக்கு விருது: தமிழுக்கும் நாணயவியல் துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 2013ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதை தினமலர் நாளிதழ் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான
இரா. கிருஷ்ணமூர்த்திக்கு மே 15ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
மே.12: மேகாலயா கவர்னராக தமிழகத்தின் சண்முகநாதன் பொறுப்பேற்பு.
மே.22: தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார்.
மே 23: மீண்டும் முதல்வர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 2014 செப்., 27ல் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். பின் மேல்முறையீட்டில் கர்நாடகா ஐகோர்ட் விடுவிக்க, மே 23ல் ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.
ஜூன்
ஜூன்.8: கடற்படை டோர்னியர் விமானம் வங்கக்கடலில் பறக்கும் போது காணாமல் போனது. 2 விமானிகள் பலி.
ஜூன்.11: புதுச்சேரியில் பத்திரிகை யாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கினார்.
ஜூன்.25: பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி பூஜாரி தற்கொலை வழக்கில், நிதி அமைச்சர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா கைது.
ஜூன்.27: பவித்ரா காணாமல் போன வழக்கில் கைதான ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது உயிரிழந்தார். இதை கண்டித்து போராட்டம் நடந்தது.
ஜூன் 29: நனவான 'மெட்ரோ' கனவு: சென்னையில் மின்சார ரயில்கள் செல்லாத இடங்களுக்கு, மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக ஜூன் 29ம் தேதி கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.
2வது முறை எம்.எல்.ஏ.,: ஜூன் 30: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மே 23ல் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ., வாக வேண்டும் என்பதால், ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ., வாக இருந்த வெற்றிவேல் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜூன் 30ல் நடந்த இடைத்தேர்தலை தி.மு.க, தே.மு.தி.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஜெயலலிதா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த ஆட்சியில் 2வது முறை எம்.எல்.ஏ., ஆனார்.
ஜூலை
ஜூலை.18: சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை.
ஜூலை.20: மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளித்தும்பா, மனோகரஞ்சி என்ற புதிய தாவர வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜூலை.23: ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஜூலை.27: 2011 மே 16ல், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி பொறுப் பேற்றதிலிருந்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜூலை 27ல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜூலை 28: விடைபெற்ற 'மக்கள் ஜனாதிபதி': தனது எளிமையால் மக்களை கவர்ந்த 'ஏவுகணை விஞ்ஞானி' அப்துல் கலாம், ஜூலை 28ல் மரணம் அடைந்தார். இவரது உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜூலை.30: வெனிஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 'விசாரணை' பெற்றது.
நிறைவேறாத போராட்டம்: ஜூலை 30ல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாமலைக் கடையில் அலைபேசி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினார் சசிபெருமாள். 5 மணி நேரத்துக்குப் பின் போலீசார் அவரை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
ஆனால் மேலேயே உயிரிழந்து விட்டார். உடலை வாங்க மறுத்து உறவினர்களும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
ஜூலை.31: டாக்டர் அப்துல் கலாம் நினைவாக ஆண்டுதோறும் இளைஞர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
ஆகஸ்ட்
ஆக.4: சென்னையில் டாஸ்மாக் கடையை சூறையாடியதாக 15 மாணவர்கள் சிறையில் அடைப்பு.
ஆக.6: வாழப்பாடியில் டாஸ்மாக் எதிரான போராட்டத்தில் கடைக்கு தீ வைக்கப்பட்டதில், ஊழியர் ஒருவர் பலி.
ஆக.7: தமிழகத்தில் மோடி: சென்னையில் ஆக., 7ம் தேதி நடந்த முதல் தேசிய கைத்தறி தினத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சிறந்த நெசவாளிகளுக்கு 'சந்த் கபீர்' விருது வழங்கப்பட்டது. மோடி பிரதமராகி 15 மாதம் கழித்து முதன்முறையாக தமிழகம் வந்தார்.
ஆக.13: இந்தியாவிலேயே அதிகம் உடல் உறுப்பு தானம் செய்தது தமிழகம் தான் என அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவிப்பு.
ஆக.21: பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' திட்டத்தை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கினார்.
ஆக.26: நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாக அறிவிப்பு.
ஆக.31: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.
செப்டம்பர்
செப்.7: அம்மா குழந்தைகள் நலஉதவிப்பொருட்கள் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.
* சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழகத்தின் 20வது புதிய அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு.
செப்.10: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. ரூபாய் 2 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது என முதல்வர் ஜெயலலிதா தகவல்.
செப்.9: காற்றாலை, சோலார் மின்சார திட்டத்துக்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், சன்எடிசன் நிறுவனத்துக்கு இடையே கையெழுத்து.
செப்.14: முதல்வர் ஜெயலலிதா துவக்கிய தமிழக பைபர்நெட் திட்டத்தால் 12,524 கிராமங்கள் அதிகவேக இணையதள வசதியை பெறும்.
செப்.17: திருச்சி மாநகராட்சிக்கு சிறப்பான திடக்கழிவு மேலாண்மை மேற்கொண்டதால் தேசிய அளவில் விருது.
செப்.18: சேலத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை.
செப்.25: ஸ்டாலின் 'ஸ்டைல்': தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் மக்களை நேரடியாக சந்திக்கும் 'நமக்கு நாமே' பயணத்தை செப்.25ல் கன்னியாகுமரியில் துவக்கினார். கலர் சட்டை, சைக்கிள், டிராக்டர் ஓட்டுவது, பஸ்சில் செல்வது, சாலையோர கடைகளில் சாப்பிடுவது என புது 'ஸ்டைலில்' பயணம் மேற்கொண்டார்.
அக்டோபர்
அக்.2: நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை.
அக்.6: தமிழக அமைச்சராக மீண்டும் ஆனந்தன் நியமனம். அவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது.
அக்.10: கழுகுகளை காப்பாற்றும் நோக்கத்தில் கேட்டோபுரூபின் என்ற மருந்தை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.
அக்.11: கோகுல்ராஜ் கொலை வழக்கில் 3 மாதமாக தேடப்பட்ட யுவராஜ், நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் 'சரண்டர்'.
அக்.15: ராமேஸ்வரம் அம்ருத் திட்டத்தின் கீழ் இணைப்பு. இதன்மூலம் நகரின் உட்கட்டமைப்பு மேம்படும்.
அக்.18: முதல்வர் ஜெயலலிதா - பிரதமர் மோடி சந்திப்பை விமர்சித்த இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க., வினர் போராட்டம்.
அக்.19: 'பாண்டவர்' வெற்றி: மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்., 19ல் நடந்தது. பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட விஷால் அணி வெற்றி. தலைவராக நாசர், செயலராக விஷால், பொருளாளராக கார்த்தி தேர்வு. இதற்கு முன் நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் அணி தோற்றது.
அக்.29: 'டாஸ்மாக்'க்கு எதிராக பாடிய, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவன் கைது. பின் விடுதலை.
அக்.30: சென்னை விமான நிலையத்தில் அசாமை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நவம்பர்
நவ.2: அ.தி.மு.க., தி.மு.க., வுக்கு மாற்றாக ம.தி.மு.க., வி.சி., மார்க்சிஸ்ட், இ.கம்யூ., இணைந்து மக்கள் நலக் கூட்டணி உருவானது.
நவ.6: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மரணம்.
நவ.11: கடலூரில் பெய்த கன மழையால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. மழையின் பாதிப்பு வடமாவட்டங்களில் அதிகம்.
நவ.16: சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாநில போலீசாருக்கு பதிலாக, மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அமலுக்கு வந்தது.
நவ.17: தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமனம்.
நவ.24: மதுரையில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.,
அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, நவ., 24ல் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.
நவ.26: தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மத்திய குழு பார்வையிட்டது.
நவ.30: அவதூறு வழக்குகள் தமிழகத்தில் தான் அதிகம் தொடரப் படுகின்றன. இதற்கு அரசிடம் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.
டிசம்பர்
டிச.2: சென்னையில் 97 ஆண்டுக்கு பிறகு டிச., 2ல் கனமழை பெய்ய அடையாறு, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டிச.3: ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
டிச.8: முல்லை பெரியாறு அணையில் தொடர்ந்து 2வது ஆண்டாக 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது.
டிச.12: பீப் பாடல்: நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் உருவாக்கிய 'பீப்' பாடல் டிச., 12ம் தேதி இணையத்தில் வெளியானது. இப்பாடலில் பெண்களை பற்றி இழிவான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தன. இருவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
டிச.13: அ.தி.மு.க., வில் இருந்து முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் நீக்கம்.
டிச.14: ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் 4 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்.
டிச.15: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் 2006 அரசாணைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
டிச.17: தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனின் 'இலக்கிய சுவடுகள்' என்ற நூலுக்கு 2015ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
டிச.28: தஞ்சையில் முதல்வர் ஜெயலலிதா படத்தை தே.மு.தி.க., வினர் கிழிப்பு. பதிலுக்கு அ.தி.மு.க., வினர் விஜயகாந்த் பேனர்களை கிழித்தனர்.
