தமிழகம்
ஜூன் 10: சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பலி.
ஜூன் 20: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் அலைபேசி கடை நடத்திய தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் பலியானதாக புகார். இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள், 2 போலீசார் கைது.
ஜூலை 16: முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்ட யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன் புதுச்சேரி போலீசில் சரண்.
ஜூலை 21: பிரதமர் அலுவலக இணை செயலராக தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நியமனம்.
இந்தியா
ஜூன் 3: பின்லாந்துக்கான இந்திய துாதராக ரவீஷ்குமார் நியமனம்.
ஜூன் 8: உத்தரகண்டின் கோடை கால தலைநகராக கெய்ர்செய்ன் அறிவிப்பு.
ஜூன் 11: குஜராத்தின் கிர் வனப்பகுதியில் ஆசிய வகை சிங்கங்களின் எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு. 2015ல் 523 ஆக இருந்தது.
ஜூன் 20: இருபது மாநிலங்களில் இருந்து 61 பேர் ராஜ்யசபாவுக்கு தேர்வு.
ஜூன் 29: பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்ததில் 121 பேர் பலி.
ஜூலை 1: கே.கே.வேணுகோபாலின் அட்டனி ஜெனரல் பதவி ஓராண்டுக்கு நீட்டிப்பு.
* நாட்டின் ஐ.நா.,வுக்கான இந்திய துாதராக மணி பாண்டே நியமனம்.
ஜூலை 3: உ.பி.,யின் கான்பூரில் ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க சென்ற போது, 8 போலீசார் சுட்டுக்கொலை. ஜூலை 10ல் விகாஷ் துபே என்கவுன்டர் செய்யப்பட்டார்.
* இந்திய - சீன எல்லையை ஒட்டிய லடாக்கின் நிமு பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி உரை.
ஜூலை 6: அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு வழங்கிய முதல் மாநிலம் ஹிமாச்சல பிரதேசம்.
ஜூலை 8: லண்டனுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளி நிரவ்மோடியின் ரூ. 329 கோடி சொத்துகள் பறிமுதல்
ஜூலை 9: இந்திய ராணுவ வீரர்கள் அலைபேசியில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகளை நீக்க உத்தரவு.
ஜூலை 11: ராஜஸ்தான் துணை முதல்வர், மாநில காங்., தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் ராஜினாமா.
ஜூலை 22: அசாமில் வெள்ளத்தால் காசிரங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்த 9 காண்டாமிருகங்கள் உட்பட 108 விலங்குகள் பலி.
ஜூலை 29: புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
உலகம்
ஜூன் 3: கொரோனா நோயாளி களுக்காக 100 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பியது.
ஜூன் 4: பெலராஸ் நாட்டின் பிரதமராக ரோமன் கோலோவ்சென்கோ பொறுப்பேற்பு.
ஜூன் 30: ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியது.
ஜூலை 2: ரஷ்ய அதிபர் புடின், 2036 வரை பதவியில் நீடிப்பதற்கான சட்டத்திருத்தத்துக்கு நடந்த ஓட்டெடுப்பில் வெற்றி.
இதுதான் 'டாப்'
* ஜூன் 18: ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தரமில்லாத உறுப்பினராக, 2 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வு. இந்தியாவுக்கு 184 நாடுகள் ஆதரவு வழங்கின.
* ஜூன் 18: இந்தியாவின் லிம்பியதுரா, காலாபானி, லிபுலேக் போன்ற பகுதிகளை தனது நாட்டுடன் சேர்த்து புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதை அந்நாட்டின் பார்லிமென்ட்டில் நிறைவேற்றியது.
* ஜூலை 9: எல்லை சாலை கழகத்தால், இந்திய எல்லைகளில் அமைக்கப்பட்ட ஆறு பாலங்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கினார்.
சீனாவுக்கு பதிலடி
ஜூன் 17: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே நடந்த மோதலில் 20 வீரர்கள் பலி. இந்திய வீரர்களின் பதிலடியில் 35 சீன வீரர்கள் பலி.
சிங்கப்பூர் சிங்கம்
ஜூலை 11: சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் பிரதமர் லீ ஹசின் லுாங் மீண்டும் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தார். இவர் 2004ல் இருந்து பிரதமராக இருக்கிறார்.
தங்க நிறம்
ஜூலை 7: நாட்டின் பெரிய வண்ணத்துபூச்சியாக இமயமலையில் வாழும் 'கோல்டன் பேர்டுவிங்' தேர்வு. இதன் இறக்கையின் நீளம் 19.4 செ.மீ.,
பவளவிழா அணிவகுப்பு
ஜூன் 24: இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படைகள், ரஷ்ய படையிடம் சரணடைந்தன. இதன் 75வது ஆண்டு கொண்டாட்டம் ரஷ்யாவில் நடந்தது.
ஆசியாவின் பெரியது
ஜூலை 10: மத்திய பிரதேசத்தின் ரேவா பகுதியில் ஆசியாவின் பெரிய சூரிய ஒளி மின்சார நிலையத்தை பிரதமர் மோடி திறந்தார். இது 1590 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.