sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

ஆகஸ்ட்

/

ஆகஸ்ட்

ஆகஸ்ட்

ஆகஸ்ட்


PUBLISHED ON : டிச 31, 2020

Google News

PUBLISHED ON : டிச 31, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஆக., 8: ரஷ்யாவில் ஆற்றில் குளிக்கும்போது நான்கு தமிழக மருத்துவ மாணவர்கள் பலி.

ஆக., 12: சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுக்கு, கடலுக்கு அடியில் 2,132 கி.மீ. துாரத்துக்கு 'பைபர் ஆப்டிக் கேபிள்' இணைப்பு திட்டம் மத்திய அரசு துவக்கம்.

ஆக., 31: 118 புதிய ஆம்புலன்ஸ்கள் துவக்கம். முதல் பெண் ஓட்டுநராக வீரலட்சுமி நியமனம்.

இந்தியா

ஆக., 1: மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் துவக்கம். இதில் தமிழகம் உட்பட 24 மாநிலங்கள் இணைந்தன.

ஆக., 6: காய்கறிகளை கொண்டு செல்ல மஹாராஷ்டிரா - பீஹார் இடையே முதல் கிசான் ரயில் துவுக்கம்.

* விசாகபட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததில் 11 பேர் பலி.

ஆக., 9: ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி. 22 பேர் காயம்.

ஆக., 11: குடும்ப சொத்து பங்கீட்டில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ஆக., 19 : ரயில்வே சொத்துகளை பாதுகாக்க 'நின்ஜா டிரோன்களை' இந்திய ரயில்வே அறிமுகம்.

ஆக., 20: தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் நீர் மின்உற்பத்தி நிலைய தீ விபத்தில் 9 பேர் பலி.

ஆக., 22: யுனெஸ்கோ அமைப்பின் 12 ஆயிரம் இளம் ஆராய்ச்சியாளர்களில் கேரளாவின் அனாமிகா மதுராஜ் தேர்வு.

உலகம்

ஆக., 1: கூகுள்( 2021, ஜூன் ), பேஸ்புக் (2021, ஜூலை) நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி.

ஆக., 3: தனிம வரிசை(periodic table) அட்டவணையை வேகமாக அடுக்கி பாகிஸ்தானின் ஒன்பது வயது சிறுமி நடாலியா நஜாம் கின்னஸ் சாதனை.

ஆக., 9: இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்பு.

ஆக., 15: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கின் 'டைம்ஸ்' சதுக்கத்தில், முதல்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றம்.

ஆக., 19: ஐக்கிய அரபு எமிரேட்சின் பரஹாக் அணு மின் நிலையம் உற்பத்தியை தொடங்கியது.

ஆக., 22: உலகின் அதிக வயதான முதியவர் பிரெடி புளோம் 116, காலமானார். இவர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்.

ஆக., 23: அமெரிக்காவின் புளோரிடா மாகாண அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல்.

ஆக., 28: நைஜீரியாவில் போலியோ ஒழிக்கப்பட்டதால், போலியோ இல்லாத கண்டமாக ஆப்ரிக்கா மாறியது.

ஆக., 30: வடக்கு மாசிடோனியா பிரதமராக ஜோரான் ஜீவ் பொறுப்பேற்பு.

இதுதான் 'டாப்'

* ஆக., 1: மத்திய அரசின் 'ஒரே நாடு., ஒரே ரேஷன் கார்டு' திட்டம் துவக்கம். தமிழகம் உட்பட 24 மாநிலங்கள் இணைந்தன.

* ஆக., 20: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சே நாவல்னிக்கு, ரஷ்ய அதிகாரிகள் தேநீரில் விஷம் கொடுத்ததாக குற்றச்சாட்டு. ஜெர்மனியில் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறினார்.

* ஆக., 24: சிங்கப்பூரின் முதல் எதிர்கட்சி தலைவராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரதம் சிங் பொறுப்பேற்பு.

'இரண்டான' விமானம்

ஆக., 7: துபாயிலிருந்து கோழிக்கோடு விமானநிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 'டேபிள்டாப்' ஓடுதளத்தில் தரையிறங்கும் போது இரண்டாக பிளந்தது. 2 விமானிகள் உட்பட 19 பேர் பலி.

சாதனை பெண்

ஆக., 4: ஐ..ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ணசுந்தரி சாதனை. ஐ.ஆர்.எஸ்., பணி ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு.

பிரதமரின் திருமணம்

ஆக., 3: உலகின் இளம் வயதில் (34 வயது) பிரதமரானவர் பின்லாந்தின் சன்னா மரின். நீண்டநாள் காதலரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்தார்.

உலுக்கிய வெடி

ஆக., 4: லெபனானின் பெய்ரூட் துறைமுக கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்தில் 204 பேர் பலி. ரூ. 1.10 லட்சம் கோடி சேதம்.

'மாரத்தான்' பதவியேற்பு

ஆக., 2: 'மாரத்தான்' ஓடிக்கொண்டே அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாண உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜில் கரோப்ஸ்கி பதவியேற்றார்.






      Dinamalar
      Follow us