sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

செப்டம்பர்

/

செப்டம்பர்

செப்டம்பர்

செப்டம்பர்


PUBLISHED ON : டிச 31, 2020

Google News

PUBLISHED ON : டிச 31, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

செப்., 3: மணல் கடத்தல் வழக்கில் கைதாகுபவர்களுக்கு ஜாமின் கிடையாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.

செப்., 6: தினமலர் நாளிதழ் 70வதுஆண்டில் அடி எடுத்து வைத்தது.

செப்., 9: மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

செப்., 18: தேசிய நெடுஞ் சாலை டோல்கேட்களில் மாற்றுத் திறானிகளுக்கு கட்டண விலக்கு.

செப்., 19: தமிழக வக்பு வாரிய தலைவராக முகமது ஜான் எம்.பி., நியமனம்.

செப்., 20: சென்னை பல்கலை துணைவேந்தராக எஸ்.கவுரி நியமனம்.

செப்., 21: பொருளாதாரத்தை மேம்படுத்த, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல்.

செப்., 24: அண்ணா பல்கலை கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இறுதியாண்டு தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது.

* தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு.

செப்., 28: அ.தி.மு.க., பொதுக்குழு நடந்தது.

இந்தியா

செப்., 1: நாடு முழுவதும் 'ஜே.இ.இ., - மெயின்' நுழைவுத்தேர்வு நடைபெற்றது.

* முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் குமார் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்பு.

* காஷ்மீரில் ஐந்து மொழிகள் அலுவலக மொழியாக ஏற்பு. (எந்த மொழிகள்)

செப்., 14: பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது.

செப்., 17: பிரதமர் மோடி 70வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.

செப்., 18: விவசாய துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமரிடம் உணவு பதப்படுத்துதல் துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு.

செப்., 19: புதிய மின் இணைப்புகளுக்கு 'ஸ்மார்ட் பிரிபெய்டு மீட்டர்' கட்டாயம் என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்தது.

செப்., 20: இந்திய போர்க்கப்பலில் பணியாற்ற முதன்முதலாக இரு வீராங்கனைகள் ரிதி சிங், குமுதினி நியமனம்.

செப்., 21: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 40 பேர் பலி.

செப்., 26: டில்லி கலவர வழக்கில்- காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு

செப்., 27: இந்திய பத்திரிகைகள் சங்க (ஐ.என்.எஸ்., ) தலைவராக தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் தேர்வு.

உலகம்

செப்., 4: கண்ணாடி பெட்டிக்குள் 200 கிலோ ஐஸ் கட்டிகளை கொட்டி, அதற்குள் 2.5 மணி நேரம் உட்கார்ந்து ஆஸ்திரியாவின் ஜோசப் கோபெர்ல் சாதனை.

செப்., 5: சூடான் வெள்ளத்தில் லட்சக்கணக்கான வீடுகள் சேதம். 3 மாத அவசரநிலை பிரகடனம்.

செப்., 23: அமெரிக்காவின் 'டைம்' இதழின் செல்வாக்கு பெற்றவர்கள் பட்டியலில் கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர் பிச்சை இடம் பெற்றார்.

செப்., 22: வாஷிங்டனில் ஏழைகள் கல்வி கற்க இலவச பள்ளியை அமேசான் நிறுவனர் ஜெப் பெஜாஸ் துவக்கினார்.

செப்., 24: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலி.

இதுதான் 'டாப்'

* செப்., 16: மங்களூருவை சேர்ந்த 16 வயது மாணவி ஸ்வரூபா இரு கைகளையும் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகளை எழுதி சாதனை.

* ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகல். பிரதமராக யோஹிகைட் சுகா பதவியேற்பு.

* செப்., 30: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 32 பேரை விடுதலை செய்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

ரட்சகன் 'ரபேல்'

செப்., 10: பிரான்சில் இருந்து முதல்கட்டமாக வாங்கப்பட்ட ஐந்து ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் சேர்ப்பு. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும். மணிக்கு 2200 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

மீண்டும் தலைவர்

செப்., 14: ராஜ்யசபா துணைத்தலைவராக ஐக்கிய ஜனதாதளத்தின் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் தேர்வு. இவர் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

சீனாவுக்கு 'செக்'

செப்., 2: நாட்டின் பாதுகாப்பு கருதி 'டிக்டாக், 'பப்ஜி' உள்பட 250க்கும் மேற்பட்ட சீன அலைபேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை.

மூன்று நாள் சட்டசபை

செப்., 14: கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க தமிழக சட்டசபை முதன்முறையாக கலைவாணர் அரங்கில் நடந்தது. மூன்று நாட்கள் நடந்த இக்கூட்டத்திற்கு ரூ. 1.20 கோடி செலவு.

புதிய பொறுப்பு

செப்., 9: தி.மு.க., பொதுச்செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலராக ராசா, பொன்முடி தேர்வு.






      Dinamalar
      Follow us