sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

அக்டோபர்

/

அக்டோபர்

அக்டோபர்

அக்டோபர்


PUBLISHED ON : டிச 31, 2020

Google News

PUBLISHED ON : டிச 31, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

அக்., 1 : ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கினார்.

அக்., 16: ஆசிரியர் பணி நியமன உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40, இதர பிரிவிற்கு 45 என தமிழக அரசு அறிவிப்பு.

அக்., 23: கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக தமிழகத்தில் 3,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உருவாக்கப்பட்டன.

* விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி.

அக்., 26: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு இந்தாண்டு வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

அக்., 27: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தலைவராக வி.எம்.கடோச், உயர்நிலை குழு உறுப்பினர்களாக டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம்.

அக்., 28: சட்டப்படிப்பு முடித்த வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை.

அக்., 30: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.

* புதிதாக கட்டப்படும் நாமக்கல் மருத்துவ கல்லுாரியின் 'போர்டிகோ' இடிந்து விழுந்தது.



இந்தியா


அக்., 3: உ.பி., யின் ஹத்ராஸில் கூட்டு பாலியல் துன்புறுத்தலில் உயிரிழந்த இளம் பெண் குடும்பத்தினருக்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஆறுதல்.

அக்., 7: இந்தியாவில் 24 பல்கலை., போலியானவை என யு.ஜி.சி., அறிவிப்பு.

* 'ஸ்மார்ட்' சூப்பார்சானிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி கழகம்(DRDO) சோதித்தது.

அக்., 8: ரிசர்வ் வங்கி துணை கவர்னராக ராஜேஸ்வர் ராவ் நியமனம்.

அக்., 9: எதிரிகளின் ரேடார், தகவல் தொடர்பு அமைப்பை தாக்கி அழிக்கும் 'ருத்ரம்' ஏவுகணை சுகோய் விமானத்தில் இருந்து சோதிக்கப்பட்டது.

அக்., 12: எல்லை மாநிலங்களில் அமைக்கப்பட்ட 44 பாலங்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் துவக்கினார்.

அக்., 15: ஐ.நா., அறிக்கையில் கடந்த 20 ஆண்டுகளில் அதிக இயற்கை பேரிடர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.

அக்., 17: 'பட்டினி குறியீடு - 2020ல் இந்தியாவுக்கு 94வது இடம்.

அக., 19: ஏழு மாதங்களுக்குப்பின் மும்பை மெட்ரோ சேவை துவக்கம்.

அக்., 20: சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ. 28 லட்சத்தில் இருந்து ரூ. 30.80 லட்சமாக அதிகரிப்பு.

* மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம்.



உலகம்


அக்., 9: கொரோனா பாதிப்பிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமடைந்தார்.

அக்., 10: ஆர்மீனியா - அஜர் பைஜான் இடையே போர் நிறுத்தம்.

அக்., 11: குவைத்தின் புதிய மன்னராக அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் பொறுப்பேற்பு.

அக்., 20: சிலியில் அரசுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் ஓராண்டு நிறைவு.

அக்., 22: சீனாவின் வங்கி ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கணக்கு வைத்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

அக்., 29: பிரான்ஸ் சர்ச்சில் பயங்கரவாதி கத்தியால் தாக்கியதில் மூன்று பேர் பலி.

அக்., 30: துருக்கியின் இஜ்மிர் பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 27 பேர் பலி.

இதுதான் 'டாப்'

* அக்., 1: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் பயணிப்பதற்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரண்டு 'ஏர் இந்தியா ஒன்' சொகுசு விமானம் டில்லி வந்தடைந்தது. இதன் விலை ரூ. 8400 கோடி.

* அக்., 7: அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளராக பழனிசாமி தேர்வு. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் அமைப்பு.

* அக்., 15: வியட்நாமுக்கு 'சிந்துவீரா' நீர்மூழ்கி கப்பலை இந்தியா வழங்கியது. இதுவே அந்நாட்டின் முதல் நீர்மூழ்கி கப்பல்.

நீளமான சுரங்கப்பாதை

அக்., 3: ஹிமாச்சலில் உலகின் உயரமான இடத்தில் (10 ஆயிரம் அடி) அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு திறப்பு. மணாலி - சிஸ்சூ வரையிலான இச்சாலை 9.02 கி.மீ., நீளம் கொண்டது.

ஜெசிந்தா ஜெயம்

அக்., 17: நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் பதவியில் இருக்கும் போதே குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பெண் பிரதமர்.

மறைந்திருந்து தாக்கும்

அக்., 23: அணு, ரசாயனம், உயிரியல் போரை எதிர்த்து போரிடும் நீர்மூழ்கி கப்பல் 'ஐ.என்.எஸ்., கவரட்டி' இந்திய கப்பல்படையில் சேர்ப்பு. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

கடல் விமானம்

அக்., 31: முதல் கடல்வழி விமானப் போக்குவரத்தை குஜராத்தில் பிரதமர் மோடி துவக்கினார். இது ஆமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் இருந்து சர்தார் படேல் சிலை உள்ள கேவடியா வரை செல்கிறது.

'தாமரை பூ' குஷ்பு

அக்., 12: காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ., வில் சேர்ந்தார் நடிகை குஷ்பு. முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணக்குமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரனும் பா.ஜ., வில் இணைந்தனர்.






      Dinamalar
      Follow us