sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

நவம்பர்

/

நவம்பர்

நவம்பர்

நவம்பர்


PUBLISHED ON : டிச 31, 2020

Google News

PUBLISHED ON : டிச 31, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

நவ., 6: தமிழக பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் துவக்கம். டிச., 7ல் திருச்செந்துாரில் நிறைவு.

நவ., 11: தேசிய நீர் விருதுக்கான முதல் விருதை தமிழகம் பெற்றது.

நவ., 13: சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொலை.

நவ., 15: திருவண்ணாமலையில் கேஸ் சிலிண்டர் வெடித்தில் 3 பேர் பலி.

நவ., 25: வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரியில் கரையை கடந்தது. சென்னை, கடலுார், புதுச்சேரியில் கனமழை பெய்தது.

இந்தியா

நவ., 2: காஷ்மீரில் போலீசாருடன் நடந்த சண்டையில், ஹிஷ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவர் சைபுல்லாஹ் சுட்டுக்கொலை

நவ., 3: தற்கொலைக்கு துாண்டியதாக ரிபப்ளிக் டிவி நிறுவனர், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மும்பையில் கைது. நவ., 10ல் ஜாமினில் வந்தார்.

* சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சிறிய ரயில் கேரளாவில் வேலி சுற்றுலா கிராமத்தில் அறிமுகம்.

நவ., 6: டி.ஆர்.டி.ஓ., வால் தயாரிக்கப்பட்ட பினகா ராக்கெட் சோதனை.

நவ., 7: தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமார் சின்கா பொறுப்பேற்பு.

நவ., 10: மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 19ல் வென்று பா.ஜ., ஆட்சியை தக்க வைத்தது.

* குஜராத்தில் 8 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி.

நவ., 14: குஜராத்தின் ஜாம்நகர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் தேசிய ஆயுர்வேத மையம் துவக்கம்.

* சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தை இந்தியாவில் அமைக்க இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு.

நவ., 15: பார்லிமென்ட் கேன்டீன்களை இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகம் நிர்வகிக்கும்.

நவ., 17: வடக்கு அரபிக்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் கடற்படையினர் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

நவ., 18: ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையத்தின் தலைவராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நியமனம்.

நவ., 23: 'ஜி-20' மாநாடு இந்தியாவில் 2023ல் நடத்தப்படும்.

நவ., 24: சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையில் எழுதினால் நடவடிக்கை எடுக்க 119ஏ சட்டம் கேரளாவில் அமல்.

நவ., 29: காங்., கட்சியின் பொருளாளராக பவன்குமார் பன்சால் நியமனம்.

நவ., 30: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை காணொலியில் இந்தியா நடத்தியது.

உலகம்

நவ., 1: சீனாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்.

நவ., 5: தென்கொரியாவில் வாக்களிக்கும் வயது 19ல் இருந்து 18 ஆக குறைப்பு.

நவ., 6: தான்சானியா அதிபராக ஜான்பாம்பி மாகுபலி பொறுப்பேற்பு.

* இந்திய ராணுவ தளபதி நரவனே, நேபாள பிரதமர் ஷர்மா ஒலியை சந்தித்தார்.

நவ., 21: சவுதியில் நடந்த 'ஜி20' மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார்.

நவ., 10: ஜோ பைடனின் கொரோனா கட்டுப் பாட்டு குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி நியமனம்.

நவ., 18: ஒபாமா 2009 - 2017ல் தன் ஆட்சிக்கால நினைவுகளை 'ஏ பிராமிஸ்டு லேண்டு' புத்தகமாக எழுதி அதன் முதல் பாகத்தை வெளியிட்டார்.

இதுதான் 'டாப்'

* நவ., 2: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா, நியூசிலாந்தில் அமைச்சராக நியமனம்.

* நவ., 13: காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவம் தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உட்பட 9 பேர் பலி. இந்தியாவின் பதில் தாக்குதலில் 11 பாக்., வீரர்கள் பலி.

* நவ., 23: தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு டயல் செய்வதற்கு, 2021 ஜன., 15 முதல் எண்களுக்கு முன் 0 சேர்ப்பது கட்டாயம் என டிராய் அறிவிப்பு.

சோலார் ரயில்

நவ., 3: கேரளாவின் வேலி கிராமத்தில் சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சிறிய ரயில், சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு திறப்பு.

அசத்தல் கண்டுபிடிப்பு

நவ., 20: சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை திருவண்ணாமலை மாணவி வினிஷா, 14 கண்டுபிடிப்பு. ஸ்வீடனின் 'மாணவர் பருவநிலை விருது' பெற்றார்.

சபாஷ் நிதிஷ்

நவ., 16: பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., - ஐ.ஜ.த., கூட்டணி (125/243) வெற்றி பெற்றது. முதல்வராக நிதிஷ்குமார், துணை முதல்வர்களாக பா.ஜ., வின் தர்கிஷோர், ரேணு பொறுப்பேற்பு.

கப்பல் போக்குவரத்து

நவ., 8: குஜராத்தில் கோகா - ஹசீரா இடையே கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி துவக்கினார். கப்பல் துறை அமைச்சகம் என்ற பெயரை, மத்திய துறைமுகம், கப்பல், நீர்வழித்தட அமைச்சகம் என மாற்றினார்.

தீ... தீபாவளி

நவ., 14: மதுரை துணிக்கடையில் தீயை அணைக்கும் போது, கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.






      Dinamalar
      Follow us