தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/நவம்பர்

நவம்பர்

நவம்பர்


PUBLISHED ON : டிச 31, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம்



நவ., 2: சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்குவதாக முதல்வர் ஜெ., அறிவிப்பு.

நவ., 14: குடும்பத்துடன் சிவகங்கை மாணவர் அணி செயலர் கதிரேசன், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.

நவ., 19: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, பள்ளி வாகனங்கள் வேலைநிறுத்தம்.

நவ., 20: திண்டுக்கல் - பழனி இடையே புதிய அகலப் பாதையில், ரயில் பயணம் தொடங்கப் பட்டது.

நவ., 22: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட, 675 புதிய பஸ்களை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

நவ., 26: ஆண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த, நடிகை சோனா மீது நடவடிக்கை கோரி, எழும்பூர் கோர்ட்டில் மனு.

நவ., 29: காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் அறிவுரைப்படி தமிழக - கர்நாடக முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.

நவ., 30: திருப்பாசேத்தி எஸ்.ஐ., ஆல்பின் சுதன் கொலை வழக்கு குற்றவாளிகள், பிரபு மற்றும் பாரதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

இந்தியா







நவ., 5: இரோம் சானு சர்மிளா என்பவர், மணிப்பூரில் அமலில் உள்ள 'ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் -1958'யை கைவிட வலியுறுத்தி 12 ஆண்டுகால உண்ணாவிரதத்தை முடித்தார்.

நவ., 4: சார்க் நாடுகளின் 6வது சபாநாயகர்கள் மாநாடு இஸ்லாமாபாத்தில் நடந்தது. இதில் சபாநாயகர் மீரா குமார் பங்கேற்பு.

நவ., 6: காங்., கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரமணிய சுவாமி கொடுத்த மனு தள்ளுபடி.

* மகாத்மா காந்தி பேரன் சாந்தி காந்தி, அமெரிக்க மாகாண தேர்தலில் வெற்றி.

நவ., 11: ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் இந்தியா வந்தார். இரு நாடுகளுக்கிடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நவ., 14: மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகி, மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை.

நவ., 15: கம்போடியாவில் நடந்த கிழக்கு ஆசியா மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.

நவ., 19: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சூரியனார் கோவிலில், சாத் பூஜை கொண்டாட்டத்தின்தற்காலிக பாலம் இடிந்து விழுந்ததில், 18 பேர் பலி.

நவ., 23: எதிரிகளின் ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் திறன் பெற்ற, இந்தியாவின் சூப்பர்சானிக் ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை.

நவ., 25: கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பா.ஜ., எம்.பி., ராம் ஜெத்மலானி, 'சஸ்பெண்ட்' .

உலகம்



நவ., 8: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ரிக்டரில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 44 பேர் பலி.

நவ., 12: இந்தியா - மாலத்தீவு இடையே கூட்டு ராணுவ பயிற்சி முகாம், பெல்காமில் 12 நாள் நடந்தது.

நவ., 15: அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்தல் வெற்றிக்குப் பின், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம்.

நவ., 19: இந்திராகாந்தி சர்வதேச அமைதி விருதுக்கு லைபீரியாவின் பெண் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் தேர்வு.

நவ., 21: ஐ.நா., சபையில் நடந்த மரணதண்டனை ஒழிப்பு தீர்மானம் தொடர்பான ஓட்டளிப்பில், இந்தியா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பு.

நவ., 25: வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள ஜவளி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 137 பேர் பலி.

விளையாட்டு



நவ. 4: பரிபாஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிசில் இந்தியாவின் மகேஷ் பூபதி, போபண்ணா ஜோடி சாம்பியன்.

நவ. 18: 'சுல்தான் ஜோகர்' கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெள்ளி.

நவ. 24: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில், இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி தோல்வி.

நவ. 25: 'சூப்பர் சீரிஸ்' ஹாக்கி தொடரில், பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us