தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/அக்டோபர்

அக்டோபர்

அக்டோபர்


PUBLISHED ON : டிச 31, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம்







அக்., 3: தமிழக அமைச்சரவை 8வது முறையாக மாற்றம். சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, ப.மோகன் புதிய அமைச்சராக நியமனம்.

அக்., 6: செம்மண் குவாரியில் மணல் எடுப்பதில், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்த வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது.

* தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் 'பந்த்' நடந்தது.

அக்., 7: தமிழக அரசின் புதிய தலைமை கொறடாவாக, வைகை செல்வன் எம்.எல்.ஏ., நியமனம்.

* பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில், விசாரணைக் கைதி வெங்கடேசன் இறந்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 4 பேர் சஸ்பெண்ட் .

அக்., 8: 10 ஆயிரத்து 700 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்தி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அக்., 10: சட்டசபையின் புதிய சபாநாயகராக தனபால் தேர்வு.

அக்., 14: டி.இ.டி., மறுதேர்வு நடைபெற்றது.

அக்., 19: மதுரை ஆதீனத்தின், இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டிந்த நித்யானந்தாவை நீக்கி விட்டதாக, ஆதினம் அருணகிரிநாதர் அறிவிப்பு.

அக்., 20: தி.மு.க., மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி., ஆகிய இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

அக்., 21: மூன்று ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது.

அக்., 27: திருப்பாச்சேத்தி அருகே ரவுடிகள் சண்டையை தடுக்கச் சென்ற எஸ்.ஐ., ஆல்பின் சுதன் குத்தி கொலை.

அக்., 30: தேவர் ஜெயந்தி விழாவுக்கு பசும்பொன் சென்ற மூன்று இளைஞர்கள் பரமக்குடியில் அடித்து கொலை.

* மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு 7 பேர் பலி.

இந்தியா







அக்., 1: பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம், 1000ல் இருந்து1500 ரூபாயாகவும், தட்கல் பாஸ்போர்ட்டுக்கு 2500 லிருந்து 3500 ஆகவும் உயர்வு.

* ரயில்களில் 'ஏசி' பெட்டிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.

அக்., 3: நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆறு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

அக்., 7: ரயில்களின் இருப்பிடம் அறிய, எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதள சேவை தொடக்கம்.

அக்., 20: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான சேவை, உரிமம் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

அக்., 30: 'ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது' என, உ.பி., அரசு புது உத்தரவு.

உலகம்







அக்., 1: இந்தியாவின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கே.எஸ்.பிரார் லண்டனில் தாக்கப்பட்டார். சீக்கிய பொற்கோயிலில் புகுந்த ராணுவப் படைக்கு தலைமை தாங்கியவர்.

அக்., 8: தென் அமெரிக்க நாடான, வெனிசுலாவில் நடந்த தேர்தலில், அதிபர் ஹக்கோ சாவெஸ் நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.

* ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த உலகின் அதிக வயதான பெண்மணி அன்டிசா, மறைந்தார். இவர் 2 உலகப்போர் மற்றும் ரஷ்ய புரட்சியை கண்டுள்ளார்.

அக்., 15: லிபியாவின், புதிய பிரதமராக, அலி ஜுடன் பதவியேற்றார். இவர் இந்தியாவுக்கான லிபிய தூதராக இருந்துள்ளார்.

விளையாட்டு



அக். 7: 'டுவென்டி-20' உலக கோப்பையை முதல் முறையாக வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அக். 8: 'டுவென்டி-20' போட்டி, ஐ.சி.சி., உலக லெவன் அணியில் இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு இடம்.

அக். 10: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை, பாகிஸ்தானின் ஆறு அம்பயர்கள் 'சஸ்பெண்ட்'.

அக். 21: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன்.

* இப்ஸ்விச் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாகா அலன்காமணி சாம்பியன் பட்டம் வென்றார்.

அக். 22: ஊக்க மருந்து பயன்படுத்திய 'சைக்கிள்' பந்தய ஜாம்பவான் லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங்கிற்கு வாழ்நாள் தடை.

அக். 28: சாம்பியன்ஸ் லீக் தொடரில், ஆஸ்திரேலியாவின் சிட்னி சிக்சர்ஸ் சாம்பியன்.

* உலக பில்லியர்ட்ஸ் தொடரில் இந்தியாவின் ருபேஷ் ஷா 3வது முறையாக சாம்பியன்.

அக். 31: பெண்கள் ஆசிய கோப்பை 'டுவென்டி-20' தொடரில், இந்திய அணி சாம்பியன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us