தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/நவம்பர்

நவம்பர்

நவம்பர்


PUBLISHED ON : டிச 29, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

**********************

தமிழகம்

**********************



நவ., 1: தமிழக மின்சார வாரியம் மூன்றாக பிரிப்பு.

நவ., 2: ஆள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்த தி.மு.க., வின் என்.கே.கே.பி.ராஜாவுக்கு மீண்டும் ஈரோடு மாவட்டச் செயலர் பதவி.

நவ., 3: தமிழகத்தில் 574 பத்திரப்பதிவு அலுவலகங்களில், டோக்கன் விவரம் அறிய 'சில்வர் லைன்' இயந்திரம் பயன்பாடு அமல்.

* சிறுவன் மீட்பு: சென்னையில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நவ., 3ல் கடத்தப்பட்டான், மறுநாள் போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டான். மாணவரை கடத்திய விஜய் மற்றும் பிரபு கைது செய்யப்பட்டனர்.

நவ., 11: கோவையில் பள்ளி வாகன கண்ணாடியில் கறுப்பு பிலிம் ஒட்டுவதற்கான தடை அமல்.

நவ., 18: கோலாகல திருமணம்: தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி - அனுஷா திருமணம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, பிரபுல் படேல், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நவ., 23: நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மற்றும் மகன் அருண் விஜய் ஆகியோர் மீது மகள் வனிதா பரபரப்பு குற்றச்சாட்டு.

நவ., 28: அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நடத்தப்பட்ட தொழிற்சங்க தேர்தலில் தி.மு.க.,வின் தொ.மு.ச., வெற்றி.



*****************************************************

இந்தியா

*****************************************************



நவ., 6: மூன்று நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை.

நவ., 8: காமன்வெல்த் ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, காங்., பார்லிமென்ட் குழு செயலர் பதவியிலிருந்து நீக்கம்.

நவ., 10: மகாராஷ்டிராவின் புதிய முதல்வரானார் பிரித்விராஜ் சவான். துணை முதல்வராக அஜித்பவார் தேர்வு.

நவ., 11: ஒரிசா மாநிலம் 'ஒடிஷா' என்று பெயர் மாற்றத்துக்கு பார்லிமென்ட் ஒப்புதல்.

நவ., 15: கென்ய பிரதமர் ரெய்லோ அமோங்கோ ஒடியா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை.

நவ., 16: டில்லியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 65 பேர் பலி.

நவ., 17: மத்திய அமைச்சர் ராஜாவின் ராஜினாமாவை தொடர்ந்து தகவல் தொடர்பு துறையை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூடுதல் பொறுப்பாக ஏற்றார்.

நவ., 20: இருபதாம் நூற்றாண்டில் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு 8வது இடம்.

நவ., 24: மீண்டும் முதல்வர்: பீகார் சட்டசபைக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதி களில் 201 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. வளர்ச்சிப்பணிகளை முடுக்கிவிட்ட நிதிஷ்குமார் முதல்வராக நவ., 24ல் மீண்டும் பதவியேற்றார்.

* அதிரடி மாற்றம்: ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து ரோசைய்யா திடீரென ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்றார், அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. ராஜசேகர ரெட்டி மறைவுக்குப்பின் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக விரும்பினார். ஆனால் காங்., மேலிடம் அதற்கு செவிசாய்க்கவில்லை. மேலும் ஜெகனை தனிமைப்படுத்தும் விதமாக ரெட்டி சமூகத்தை சேர்ந்த கிரண்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கியது.

நவ., 25: மொபைல் எண்ணை மாற்றாமலே மொபைல் நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதி அரியானாவில் துவக்கம்.

* இஸ்ரோ தயாரித்த 'ஹைலாஸ்' என்ற அதிநவீன செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நவ., 29: ஜெகன் மோகன் ரெட்டி, எம்.பி., பதவி, மற்றும் காங்., அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகல். அவரது தாயாரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா.



*****************************************************

உலகம்

*****************************************************



நவ., 1: பிரேசிலில் நடந்த தேர்தலில், டில்மா ரூசெப் என்பவர் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

நவ., 2: ஆஸ்திரேலிய ஆழ்கடல் பகுதியில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் எரிமலையை, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

நவ., 3: அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில், தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக அமெரிக்க இந்தியரான நிக்கி ஹாலே(38) வெற்றி.

நவ.,6: பாகிஸ்தானின் மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 100 பேர் பலி.

நவ., 11: தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற 'ஜி-20' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.

நவ., 13: ஆப்கானிஸ்தான் விமான நிலையம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

நவ., 14:காத்திருந்த விடுதலை: மியான்மர் நாட்டின் ஜனநாயக கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி 15 ஆண்டு கால வீட்டுக்காவலில் இருந்து, நவ., 14ல் விடுவிக்கப்பட்டார். விடுதலையான மகிழ்ச்சியில் ஆங் சான் சூகி.

நவ., 19: பிரேசிலின் சுல்தான் கோஸன் (8 அடி, 1 இன்ச் உயரம்), உலகின் உயரமான மனிதர் என்று கின்னஸ் நிறுவனத்தால் தேர்வு.

நவ., 20: பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியா லுலாடா சில்வாவுக்கு, இந்திரா அமைதி விருது வழங்கப்பட்டது.

நவ., 22: இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு.

நவ., 23: கம்போடிய தலைநகர் பெனோபன் நகரில் நடந்த தண்ணீர் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 378 பேர் பலி.

* தென் கொரியா தீவு ஒன்றின் மீது வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு போர் பதட்டம் உருவானது.

நவ.,27: இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா துவக்கினார்.

* விக்கிலீக்சின் 'லீக்': உலகின் பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதரகங்கள், வாஷிங்டன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய 2 லட்சத்துக்கு மேலான ரகசியங்களை, 'ஹேக் செய்து' 'விக்கிலீக்ஸ்' இணையதளம் நவ., 27ல் வெளியிட்டது. இதில் இந்தியாவைப் பற்றிய 3 ஆயிரம் ரகசியங்களும் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை இச்சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் தலைவரான ஜூலியன் அசேஞ்ச் பாலியல் புகார் தொடர்பாக பிரிட்டனில் கைது செய்யப்பட்டார்.



*****************************************************

விளையாட்டு

*****************************************************



நவ. 2: சர்வதேச செஸ் ரேங்கிங்கில் இந்தியாவின் ஆனந்த், மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார்.

நவ. 7: ஆஸ்திரேலிய மண்ணில், இலங்கை அணி முதன் முறையாக ஒருநாள் தொடரை (2-1) வென்று சாதித்தது.

நவ. 14: ஆசிய விளையாட்டில், இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் (பங்கஜ் அத்வானி -'இங்கிலிஷ்' பில்லியர்ட்ஸ்) கிடைத்தது.

நவ. 15: சாதனை சதம்: நியூசிலாந்துக்கு எதிரான ஆமதாபாத் போட்டியில், இந்தியாவின் ஹர்பஜன் சிங், தனது முதல் சதம் (115) அடித்தார். இதன் மூலம் 8வது வீரராக களமிறங்கி சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனை படைத்தார். பின், ஆமதாபாத் டெஸ்டில் 2வது சதம் (111*) கடந்து புதிய வரலாறு படைத்தார். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ் மற்றும் இரண்டு போட்டிகளில் சதம் அடித்த, முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தார் இந்தியாவின் ஹர்பஜன்.

நவ. 16: ஆசிய விளையாட்டு, ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் ஆஷிஷ் குமார்.

நவ. 20: ஆசிய விளையாட்டு, ஹாக்கியில் இந்தியா, பாகிஸ்தானை (3-2) வீழ்த்தியது.

நவ. 22: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி (1-0) வென்றது.

நவ. 25: ஆசிய விளையாட்டு, கபடியின் இரண்டு பிரிவிலும் (ஆண்கள், பெண்கள்) இந்தியா தங்கம் வென்றது.

* சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதன் ஆண்கள் கபடியில் அசத்திய இந்திய அணி, தொடர்ந்து ஆறாவது முறையாக தங்கப்பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இம்மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us