தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/அக்டோபர்

அக்டோபர்

அக்டோபர்


PUBLISHED ON : டிச 29, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*********************

தமிழகம்

*********************



அக்., 1: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூட, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.

* தமிழக மேலவை தேர்தலுக்கு, உள்ளாட்சி, பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளுக்கான தொகுதிப் பட்டியல் வெளியீடு.

அக்., 3: வீரப்பனை சுட்டுக் கொன்ற விஜயகுமார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக நியமனம்.

அக்., 9: திருச்சியில் காங்., கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் சோனியா பங்கேற்பு.

அக்.,18: சவாலான ஆர்ப்பாட்டம்: மதுரையில் அக்., 18ல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலிலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் இவருக்கு பல கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதையும் மீறி ஜெ., கலந்து கொண்டார்.

அக்., 22: பசங்க திரைப்படத்தில் நடித்த ஸ்ரீராம், கி÷ஷார் ஆகிய சிறுவர்களுக்கு தேசிய விருது வழங்கப் பட்டது.

அக்., 23: பள்ளிக் கட்டணம்: தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் ஒரே விதமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க அரசு முடிவு செய்தது. இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு ஒவ்வொரு பள்ளிக்கும் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அரசும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் பள்ளிகள் வழக்கமான கட்டணத்தையே வசூலிக்கின்றன எனும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கோவிந்தராஜன் ராஜினாமா செய்தார். இவருக்கு பதிலாக ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றார்.

அக்., 27: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு மாதமாக மேற்கொண்ட வேலைநிறுத்தம் முடிவு.

அக்., 31: கோவையில் பள்ளிக் குழந்தைகள் இருவர் பணத்துக்காக கடத்தி கொலை.



*****************************************************

இந்தியா

*****************************************************



அக்., 5: 2010ம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, சோதனைக்குழாய் முறையை கண்டுபிடித்த ராபர்ட் எட்வர்ஸ்க்கு வழங்கப்பட்டது.

அக்., 6: தடை செய்யப்பட்ட, 'சிமி' அமைப்புடன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை ஒப்பிட்டுப் பேசிய காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு, பா.ஜ, சிவசேனா கட்சிகள் கடும் கண்டனம்.

* ஜம்மு-காஷ்மீர் அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படவில்லை என, முதல்வர் ஒமர் அப்துல்லா சர்ச்சைக்குரிய பேச்சு. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி.

அக்., 11: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இணைந்தது.

அக்., 16: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க பிரதமர் உத்தரவு.

அக்., 25: தேசவிரோத பேச்சு: டில்லியில் நடந்த பேரணியில், காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை என சர்ச்சைக்குரிய விதத்தில் அருந்ததிராய் பேசினார். பேரணியில் கலந்து கொண்ட ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் கிலானியும் இதே கருத்தை தெரிவித்தார். இருவர் மீதும் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அக்., 27: காஷ்மீர் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக மூன்று பேர் கொண்ட பத்திரிகையாளர் குழு நியமனம்.

அக்., 28: வியட்நாமில் நடைபெற்ற ஆசியன் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு.

அக்., 29: மேற்கு வங்க மாநிலம் தெர்குபர்கானா மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் 66 பேர் பலி.

அக்., 30: கர்நாடகாவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிக்கப் பட்டது செல்லும் என பெங்களூரு ஐகோர்ட் தீர்ப்பு.

* ஊழலால் பதவி காலி: கார்கில் போரில் உயிரிழந்தவர் களுக்கு வீடு வழங்குவதற்கான 'ஆதர்ஷ் வீட்டு வசதி' திட்டத்தில் ஊழல் செய்ததாக முதல்வர் அசோக் சவான் மீது அக்., 30ல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக பிரித்திவிராஜ் சவான் பொறுப்பேற்றார்.

அக்., 31: போலி என்கவுன்டர் வழக்கில் கைதான குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஜாமீன்.



குழப்பமான ஆட்சி: கர்நாடக முதல்வராக இருப்பவர் பா.ஜ.,வின் எடியூரப்பா. பதவியேற்றது முதல் இவருக்கு ஏதாவது ஒரு பிரச்னை தொடர்கிறது. எம்.எல்.ஏ.,க்களுக்குள் ஏற்பட்ட பிரிவால் அக்., 11 ,15 என அடுத்தடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். வெற்றியும் பெற்றார். தற்போது மகனுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தால் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தது. எதிர்க்கட்சிகள் இவரை விலக வலியுறுத்தியும் விடாப்பிடியாக சவால்களை எதிர்கொண்டு பதவியில் தொடர்கிறார்.



*****************************************************

உலகம்

*****************************************************



அக்., 1: நைஜீரியாவில் நடந்த சுதந்திர விழாவின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் பலி.

* முஷாரப் புதிய கட்சி: பாக்., முன்னாள் அதிபரான முஷாரப் தற்போது லண்டனில் உள்ளார்.இவர் அக்., 1ல் 'ஆல் பாகிஸ்தானி முஸ்லிம் லீக்' என்ற கட்சியை துவக்கினார்.

* சூடானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 57 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

* கிரிஸ் நாட்டில் புகைப்பிடித்தால் அபராதம் என அரசு உத்தரவு.

அக்., 5: 'இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்' என, பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் அதிர்ச்சி தகவல்.

அக்., 9: இந்தியர்களை இனவெறி தொடர்பாக, ஆஸி., போலீசார் இ-மெயில் அனுப்பிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

* ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 29 லாரிகள் தீயில் கருகின.

அக்., 10: பாகிஸ் தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், அல்- குவைதா அமைப்பின் தலைவர் அதியா அப்த் அல் ரஹ்மான் கொல்லப்பட்டார்.

அக்., 20: பாகிஸ்தானில், கராச்சி நகரில் நடைபெற்ற இடைத்தேர்தல் வன்முறையில் 56 பேர் பலி.

அக்., 23: ஈராக் போரில் அமெரிக்க ராணுவ வீரர்களின் அத்துமீறல்களை 'விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.

அக்., 25: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் சுனாமி தாக்கியதில் 300க்கும் மேற்பட்டோர் பலி.

அக்., 27: மலேசியாவின் கோலாலம் பூரில் 'லிட்டில் இந்தியா' என்ற வர்த்தக நகரை பிரதமர் மன்மோகன் துவக்கினார்.

அக்., 28: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 200 பேர் பலி.



*****************************************************

விளையாட்டு

*****************************************************



அக். 3: டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி துவங்கியது.

அக். 6: ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர், மக்கள் மனம் கவர்ந்தவர் என இரட்டை விருதை இந்தியாவின் சச்சின் பெற்றார்.

அக்: 8: காமன்வெல்த் தடகளத்தில் கவிதா ராத், தனிநபர் பிரிவில் (பெண்கள் 10,000 மீ.,) பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

அக். 9: தங்க மகன்: டில்லி, காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், தங்க மழை பொழிந்தார். 10 மீ., 'ஏர் ரைபிள்' போட்டியில் அணி மற்றும் தனி நபர் பிரிவில் இரண்டு தங்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ககன் நரங், 'ரைபிள் 3 பொசிசன்' போட்டியிலும் அணி மற்றும் தனி நபர் பிரிவில் இரண்டு தங்கம் கைப்பற்றினார். இத்தொடரில் மொத்தம் நான்கு தங்கப் பதக்கம் வென்ற இவர் 'தங்க மகனாக' ஜொலித்தார்.

அக். 10: காமன்வெல்த் போட்டியின் ஒற்றையர் டென்னிசில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தங்கம் கைப்பற்றினார்.

* காமன்வெல்த் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சானியா மிர்சா, வெள்ளி வென்றார்.

* ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நீக்கப்பட்டன.

அக். 11: காமன்வெல்த் தடகளத்தில் (வட்டு எறிதல்), இந்தியாவின் கிருஷ்ண பூனியா, (61.51 மீ.,) தங்கம் வென்றார்.

அக். 24: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது.

அக். 26: உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக கணித்த, ஆக்டோபஸ் 'பால்' மரணம் அடைந்தது.

அக். 26: 'ஆக்டோபஸ்' ஆருடம்: தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதில், போட்டிகளின் முடிவுகளை, 'பால்' ஆக்டோபஸ் துல்லியமாக கணித்து கூறியது. பைனலில் ஸ்பெயின் அணி, ஜெர்மனியை வீழ்த்தி கோப்பை வெல்லும் என சரியாக கணித்தது, ரசிகர்களின் அன்பைப் பெற்றது. பின் ஆருடம் சொல்வதில் இருந்து ஓய்வு பெற்ற இது, இயற்கை மரணம் அடைந்தது.

காமன்வெல்த் ஊழல்: அக். 3-14: டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி நடந்தது. 101 பதக்கங்களுடன் இந்தியா 2 வது இடம் பெற்றது. இப்போட்டிக்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாயில், ஊழல் நடந்ததாக சர்ச்சை வெடித்தது, இதன் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us