தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/அறிவியல்

அறிவியல்

அறிவியல்


PUBLISHED ON : டிச 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புளூட்டோவில் புதுமை: நாசா விண்வெளி மையம் புளூட்டோவுக்கு அனுப்பிய நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் அக்., 9ம் தேதி புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் பூமியைப் போல நீல வானம் காணப்பட்டது. சிவப்பு நிறத்தில் ஐஸ் கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

புளூட்டோ 1930ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இதுவரை எந்தவொரு விண்கலமும் செல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் நாசா, நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை 2006 ஜன., 20ல் அனுப்பியது. அது 9 ஆண்டுகளுக்குப்பின் 2015 ஜூலை 14ல் புளூட்டோவை நெருங்கியது. புளூட்டோவின் பரப்பில் இருந்து 12,500 தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து அதில் உள்ள அதி நவீன டெலஸ்கோப், புளூட்ேடாவை போட்டோ எடுத்தும் அனுப்பியது.

செவ்வாயில் தண்ணீர்: சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, இந்தியா என பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் 'நாசா' 2006ல் அனுப்பிய 'மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்' (எம்.ஆர்.ஓ.,) என்ற விண்கலம் செவ்வாயில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை செப்., 29ம் தேதி புகைப்படம் எடுத்து அனுப்பியது.

அதில் பள்ளத்தாக்குகளில் நீர் ஓடுவது போன்று இருந்தது. விரல் தடம் போன்ற அமைப்பு தான் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரம் என ஆய்வில் கண்டறிந்தனர். நீர் எங்கிருந்து வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கமுடிய வில்லை. 'நிலத்தடி நீர் அல்லது பனிக்கட்டிகள் உருகுவதால் நீர் ஓடலாம்' என்கின்றனர். அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப் படுகிறது என்றும் உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

முதல் விண்வெளி செயற்கைக்கோள்: இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட், பி.எஸ்.எல்.வி., சி 30 ராக்கெட் மூலம் செப்., 28ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. புற ஊதாக் கதிர்கள், குறைந்த மற்றும் அதிக திறன் கொண்ட எக்ஸ்ரே கதிர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதே இதன் முக்கிய நோக்கம். இதற்காக 5 கருவிகள் உள்ளன. இதன் மூலம் விண்வெளியில் உள்ள எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்யலாம். மேலும் பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபடும்.விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளை அனுப்பிய 4வது நாடு. மேலும் வளரும் நாடுகளில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இதன் எடை 1,513 கிலோ. ஆயுட்காலம் 5 ஆண்டுகள். செலவு 180 கோடி.

'என்ஜாய்' லவ்ஜாய்: லவ்ஜாய் என்ற வால் நட்சத்திரத்தில் எத்தில் ஆல்கஹால், சர்க்கரை உள்ளிட்ட 21 வகையான இயற்கை சேர்மங்கள் உள்ளன. இந்த வால் நட்சத்திரம் ஒரு வினாடியில் 500 பாட்டில் ஒயினில் அடங்கியிருக்கும் அளவுக்கு ஆல்கஹாலை வெளியிடுகிறது என பாரிஸ் விஞ்ஞானிகள் அக்., 26ம் தேதி தகவல் வெளியிட்டனர். இது கடந்த 2015 ஜன., 30ம் தேதி சூரியனை நெருங்கி கடந்து சென்றது. அப்போது வினாடிக்கு 20 டன் தண்ணீரை வெளியிட்டது. பெரும்பாலான வால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கி வருவதில்லை. ஆனால் இந்த லவ்ஜாய் வால்நட்சத்திரம் சூரியனை நெருங்கி வந் தும் அழியாமல் தொடர்ந்து சுற்றி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us