/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இந்திய ராணுவத்தின், 10 சிறந்த வாசகங்கள்!
/
இந்திய ராணுவத்தின், 10 சிறந்த வாசகங்கள்!
PUBLISHED ON : ஜன 11, 2026

ஜன., 15 - இந்திய ராணுவ தினம்
இங்குள்ள வாசகங்களை ஒவ்வொரு இந்தியரும், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும், என, கூறியுள்ளார், முன்னாள் ராணுவ தலைமை தளபதி, விபின் ராவத்.
உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ, அதுவே, எங்களின் அன்றாட வாழ்க்கை இது, லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம்
* நம் வாழ்வு தற்செயல், நம் காதல் நம் விருப்பம், நாட்டை பாதுகாக்க கொலை செய்வது நம் தொழில்! - அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை
* பயங்கரவாதிகளை மன்னிப்பது கடவுளின் வேலை. அதற்கு, அவர்களை கடவுளை சந்திக்க வைப்பது எங்கள் வேலை!
* கடவுளே! எங்கள், எதிரிகள் மீது கருணை காட்டுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை அவர்களிடம் காட்ட மாட்டோம்!
* எங்களைப் பெற நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். எங்களைப் பிடிக்க நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும். ஆனால், எங்களை வெல்ல, நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்!
* காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை. தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது!
* நம் நாட்டுக்கு கொடுக்க ஒரே ஒரு உயிர் மட்டுமே உள்ளது என்று வருந்துகிறோம்! - இந்திய ராணுவம்.
* மரணத்திற்கு பயப்படவில்லை என்று ஒருவர் கூறினால், அவர் ஒன்று பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்! - பீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா
* நான் மூவர்ண கொடியை ஏந்தி அல்லது மூவர்ண கொடியை போர்த்தி கொண்டு வருவேன். கண்டிப்பாக வருவேன்! - முன்னாள் கேப்டன் விக்ரம் பத்ரா, கார்கில் போரில் ஈடுபட்டு வீர மரணம் அடைந்தவர். பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்
* என் வீரத்தை நிரூபிக்கும் முன், என் மரணம் வந்தால், நான் மரணத்தை கொல்வேன் என்று சத்தியம் செய்கிறேன்! - முன்னாள் கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம் வீர் சக்ரா, விருது பெற்றவர்.
தொகுப்பு: அமுதா அசோக்ராஜா

