PUBLISHED ON : பிப் 09, 2020

பலருக்கு காதலிக்க தெரியும். ஆனால், சிலருக்கு தான், காதல் கடிதம் எழுத தெரியும். காதலியை கவரும் விதத்தில் கடிதம் எழுதுவது ஒரு கலை.
காதலியாக இருக்கும்போது தான், கடிதம் எழுதணும்ன்னு அவசியம் கிடையாது. அன்பான மனைவிக்கும், வாழ்நாள் முழுவதும், காதல் வாசகங்களை கொட்டி, கடிதம் எழுத முடியும். காதல் கடிதத்திற்கு, கவர்ந்து இழுக்கும் சக்தி அதிகம்; ஈர்ப்பு அதிகம்.
இந்த வகையில், உலகின் மிகச்சிறந்த, 10 காதல் கடிதங்கள் என, சிலவற்றை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது; அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனம். அது:
1. அமெரிக்காவின், பிரபல நாட்டுப்புற பாடகர், ஜான்கேஷ் என்பவர், தன் மனைவி ஜுனே கார்டரின், 65வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு, 1994ல் எழுதிய கடிதம், மிகச்சிறந்த காதல் கடிதமாக, முதல் இடத்தை பெற்றுள்ளது.
2. பிரிட்டன் முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில், தன் மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதை வெளிப்படுத்தும் விதமாக, மனைவி கிவ்மென்டினுக்கு, 1935ல் எழுதிய, கடிதம் மிகவும் பிரபலம்.
3. ஆங்கில கவிஞர் ஜான்கீட்ஸ், 1819ல், தன் பக்கத்து வீட்டில் வசித்த பெண், பிரவுனுக்கு எழுதிய, 'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்ற கடிதம்.
4. அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, 1951ல், தன்னுடைய காதலை, மார்லின் டைடிரிச்சுக்கு வெளிப்படுத்திய கடிதம்.
5. பிரெஞ்சு படையின் தளபதியாக, நெப்போலியன் இருந்த காலகட்டத்தில், தனக்கு அந்த பொறுப்பை வாங்கிக் கொடுத்த, பால்பேரசின் மனைவி ஜோசப்பினையே மணந்தார். அதற்கு முன், அவருக்கு, காதல் கடிதம் எழுதிய நெப்போலியன், அதை, காதல் ரசனை சொட்ட சொட்ட எழுத, 1796ல் மிகவும் பிரபலமானது.
6. நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன், நடிகை எலிசபெத் டெய்லரின் அழகை வர்ணித்து, 1964ல் எழுதிய கடிதம், 'ஆஹா' போட வைத்தது.
7. இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி, ஆனிபோலியனுக்கு, 1527ல் எழுதிய கடிதம் ரம்யமானது.
8. ஜெர்மன் பெத்தோவென், இசையமைப்பாளர் மற்றும் பியானோ வாசிப்பவர். இவர், தன்னுடைய நிரந்தர, மானசீக காதலிக்கு, 1812ல் எழுதிய கடிதம் பிரபலம். இந்த காதலி, உண்மையில் யார் என்பது கடைசி வரை கண்டுபிடிக்கப்படாமல், மர்மத்திலேயே முடிவுக்கு வந்தது.
9. அமெரிக்காவின், 38வது ஜனாதிபதி, ஜெரால்ட் போர்டு, தன் மனைவி பெட்டி போர்டு, 1924ல், மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டபோது, தானும், தன்னுடைய குடும்பமும் அவர் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தி எழுதிய கடிதம்.
10. அமெரிக்காவின் பிரபல கிதார் வாசிப்பாளரான, ஜிம்மி ஹென்டிரிக்ஸ், 1968ல், தனக்கு பெண் குழந்தை பிறந்ததும், அதை வாழ்த்தி எழுதிய கடிதம். இவர், 32 வயது வரை தான் வாழ்ந்தார்.
ஆர். ஆர். சரண்