PUBLISHED ON : நவ 02, 2014

அ நிறம் | அளவு
ஒருவர், 101 வயதிலும் சுறுசுறுப்பாக பாட்டு பாடுகிறார் என்றால், வியக்காமல் இருக்க முடியுமா... அவர் தான் கொச்சியை சேர்ந்த பாப்புக்குட்டி பாகவதர். ௧௦௦ வயதில், மேரிக்குண்டொரு குஞ்சாடு என்ற மலையாள படத்தில் ஹீரோவுக்கு பின்னணி பாடி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக் கிறார். நாடகங்கள் கொடிகட்டி பறந்த காலத்தில், ஏழு வயது சிறுவனாக மேடையேறி, பாடி நடித்தவர், அதன்பின், ௧௯௩௦ல், ௧௭ வயதில் பெண் வேடத்தில் தோன்றி பாடி, ஆடி அசத்தி இருக்கிறார். பிரபல பாடகர் ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப் பாகவதருடன் இணைந்து, மக்தலன மேரி என்ற நாடகத்தில் நடித்த இவர், தமிழ் நாடக கலைஞர்களான, மாணிக்கம் பிள்ளை மற்றும் சுப்பையா பாகவதர் போன்றவர்கள் தன்னை பாராட்டியதை நினைத்து பெருமைப்படுகிறார்.
— ஜோல்னாபையன்.
