PUBLISHED ON : நவ 02, 2014

கோட்டயம் அருகே உள்ள முட்டுச்சிறா என்ற ஊரில், ஏராளமான சவப்பெட்டி கடைகள் உள்ளன. இங்கு, ஐயாயிரம் ரூபாயிலிருந்து, ௫௦ ஆயிரம் ரூபாய் வரை சவப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. பக்கத்து ஊர்களில் யாராவது மரணமடைந்தால், முட்டுச்சிறா போவது தான் முதல் வேலை. ஒரு சிலரோ, மரணமடைவதற்கு முன்பே முட்டுச்சிறா சென்று தங்களுக்கான சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து, முன் பணம் கொடுப்பதும் உண்டு. தற்போது, கிறிஸ்துவர்கள் இறுதிச் சடங்குகளை மிக ஆடம்பரமாக செய்ய விரும்புவதால், இதற்காக லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் வண்டியிலும், வீட்டில் போடப்படும் பந்தலிலும் கூட, 'ஏசி' வசதி செய்கின்றனர். அமெரிக்காவில் பணியாற்றும் சிலரோ, தங்கள் பெற்றோரோ உறவினர்களோ இறந்து விட்டால், அமெரிக்காவில் இருந்து, சவப்பெட்டிகளை கொண்டு வருவது இப்போது சகஜமாகி விட்டது.
— ஜோல்னாபையன்.
