தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தாய்ப்பாலில் குளித்த நடிகை!

தாய்ப்பாலில் குளித்த நடிகை!

தாய்ப்பாலில் குளித்த நடிகை!


PUBLISHED ON : நவ 02, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நரம்பு சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பிரசாரம் அமெரிக்காவில் துவக்கப்பட்டது. பிரபலங்கள் பலர், ஐஸ் தண்ணீர் நிரப்பப்பட்ட பக்கெட்டை, தங்கள் மேல் கவிழ்த்து, புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த பிரசாரம், தற்போது, எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது.

ஹாலிவுட்டில், ஒலிவியா வைல்ட் என்ற நடிகை, சமீபத்தில்,'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' சில் பங்கேற்று, அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர் குளித்த பக்கெட்டில் இருந்த தண்ணீர், வெள்ளை நிறத்தில் இருந்தது. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பவே, 'அது, தண்ணீர் இல்லை; தாய்ப்பால். இதை சேகரிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன்...' என, சர்வசாதாரணமாக பதில் அளித்தார். அவரின் இந்த செயல், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதளங்களில், பலரும் அவரை திட்டி தீர்த்ததும், தடாலடியாக பல்டி அடித்து விட்டார். 'ஹி...ஹி... அது தாய்ப்பால் இல்லை; தண்ணீர் தான். சும்மா, ஒரு விளையாட்டுக்காக, தாய்ப்பால் என கூறினேன்...' என, அசடு வழிகிறார்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us