PUBLISHED ON : நவ 02, 2014

அ நிறம் | அளவு
மாட்டை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓட்டிப்போகும் போது, அதன் பின்னாலேயே கயிறைப் பிடித்துக் கொண்டு ஓட்டமும், நடையுமாக செல்பவரை, தூரத்திலிருந்து பார்க்க நன்றாக இருக்கலாம். ஆனால், மாடு கால் வைக்கும் பாங்கும், அதன் பின்னே, கயிறு பிடித்து மாட்டை தொடர்பவரின் வேகமும், ஒரு சீராக இல்லாவிட்டால், மாடு இவர் காலை தன் குளம்புக் காலால் மிதித்து விடும்.
என்னுடைய எஸ்.எஸ்.எல்.சி., சர்டிபிகேட்டில், உடல் அடையாளத்தை பதிவு செய்ய காலில் மாடு மிதித்த அடையாளம்தான் உதவியது.
— பாக்கியம் ராமசாமி.
