/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அக்கா மாதிரி தோற்றமளிக்க 15 லட்சம் செலவழித்த தங்கச்சி!
/
அக்கா மாதிரி தோற்றமளிக்க 15 லட்சம் செலவழித்த தங்கச்சி!
அக்கா மாதிரி தோற்றமளிக்க 15 லட்சம் செலவழித்த தங்கச்சி!
அக்கா மாதிரி தோற்றமளிக்க 15 லட்சம் செலவழித்த தங்கச்சி!
PUBLISHED ON : நவ 03, 2013

ஹாலிவுட்டின் பிரபல நடிகை, லிண்ட்சே லோகன். இவரின் தந்தைக்கு, இரண்டு மனைவி. மூத்த மனைவிக்கு பிறந்தவர் தான், லிண்ட்சே. இரண்டாவது மனைவிக்கு, ஆஷ்லி என்ற மகள் உண்டு. இந்த ஆஷ்லிக்கு, 25 வயதாகிறது. இவருக்கு, இளம் வயதில், தன் அக்கா எப்படி தோற்றமளித்தாரோ, அதேபோல் நாமும் தோற்றமளிக்க வேண்டும் என்ற, விசித்திர ஆசை ஏற்பட்டது. உடனடியாக, தன் முகத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். உதடு, தாடை, கன்னம் ஆகிய பகுதிகளை, தன் அக்கா, லிண்ட்சேவை போல், மாற்றிக் கொண்டார். இதற்காக, 15 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார்.
ஆஷ்லி கூறுகையில், 'எங்க அக்கா அழகானவர். அதனால், அவரைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். மற்றபடி, எங்க அக்கா குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும், வேறு எந்த தொடர்பும் இல்லை. அவரை, ஒரு சில முறை தான், நேரில் பார்த்திருக்கிறேன். அவரின் வாழ்க்கை முறை வேறு; என் வாழ்க்கை முறை வேறு. குறிப்பாக, நான், மது குடிப்பது இல்லை...' என, அதிரடியாக கூறியுள்ளார். இதன்மூலம், தன் அக்காவுக்கு, மது குடிக்கும் பழக்கம் இருப்பதை, வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார், ஆஷ்லி. அக்கா மீது, தங்கச்சிக்கு என்ன கோபமோ!
- ஜோல்னாபையன்.

