
சிறந்த கலைஞர்கள் பலர், வாழும் நாட்களில், வறுமையில் வாடுவதையும், மறைவுக்கு பின், போற்றப்படுவதையும், நாம் பார்த்து இருக்கிறோம். மறைந்த சிற்பி, ராம் கிங்கர் பெஜ் வாழ்க்கையும், இப்படி தான். கடந்த, 1906ல் வங்காளம், பாங்குறா கிராமத்தில் பிறந்த இவர், சிறு வயதில் இருந்தே, சிற்பியாக ஆசைப்பட்டார். அதன்படி, சாந்தி நிகேதனில், சிற்பக் கலை பயிற்சி பெற்றார். தான் வடித்த சிற்பங்களின் மதிப்பு தெரியாமல், கேட்போருக்கெல்லாம் இலவசமாக வழங்கினார். திருமணம் செய்யாமல், வீட்டில் வேலை செய்த பெண்மணியுடன் வாழ்ந்தவர், மதுவுக்கு அடிமையாகி, வறுமையில் சிரமப்பட்டார். மதுவால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோல்கட்டா பி. ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருடன் பயிற்சி பெற்ற நண்பர்கள் பலர், புகழ் உச்சியில் இருந்த போதும், யாரும் இல்லாமல், மருத்துவமனையில், 74வது வயதில், காலமானார். 1970ல், பத்மபூஷனும், 1976ல், லலித்கலா அகாடமி விருதும் பெற்ற இவர், இறுதி காலத்தில், உணவுக்கும், மருத்துவ செலவிற்கும் வழியின்றி, மிகவும் சிரமப்பட்டார்.
-ஜோல்னா பையன்.

