
கேரள, மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பழமள்ளுரை, சமோசா தேசம் என்று அழைக்கின்றனர். இந்த ஏரியாவுக்குள் சென்றால், எங்கும், சமோசா வாசனையைத் தான் உணர முடியும். இங்குள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், சமோசா தயாரித்து விற்கப்படுகின்றன. அதிகாலை, 2:00 மணி முதல், இங்கு, அடுப்புகள் எரியத் துவங்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன், குஞ்சு அகமது என்பவர், முதல் முதலாக, சமோசா தயாரிப்பில் இறங்கினார். இத்தொழில் லாபகரமானதால், வேறு பல குடும்பத்தினரும், இதே தொழிலில் ஈடுபடத் துவங்கினர். இன்று, அரை லட்சத்துக்கும் மேற்பட்ட சமோசாக்கள், இங்கிருந்து அக்கம் பக்கத்து மாவட்டங்களுக்கு, அனுப்பப்படுகின்றன. குடும்பம் ஒன்றுக்கு, மாதம் முப்பதாயிரத்துக்கும் மேலே, வருமானம் கிடைக்கிறது. படித்து பட்டம் பெற்றவர்கள் கூட, வேறு வேலைக்கு அலையாமல், சமோசா தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
-ஜோல்னா பையன்.

