PUBLISHED ON : டிச 17, 2017

அ நிறம் | அளவு
இஸ்ரேல் நாட்டு தலைநகரான, டெல் அவிவ் நகரத்தில் உள்ள, 'அன்னா லுாலுா' என்ற மதுபான விடுதியில், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களுக்கு, 25 சதவீத தள்ளுபடியில், மதுபானம், விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டத்துக்கு, 'பிளட்டி ஹவர்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. மதுபான விடுதி உரிமையாளர்கள் கூறுகையில்,'மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள், மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காகவே, இத்திட்டத்தை அறிவித்தோம்; மாதவிடாய் குறித்து, பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இதன் நோக்கம்...' என்கின்றனர்.
இந்த மதுபான விடுதியின் உரிமையாளர்களும், பெண்கள் தான் என்பது கூடுதல் தகவல்.
—ஜோல்னாபையன்.
