PUBLISHED ON : பிப் 11, 2018

அ நிறம் | அளவு
'ஆசியாவின் நகரம்' என, பெருமையுடன் அழைக்கப்படுவது, ஹாங்காங் நாடு. இங்கு வசிக்கும், பெர்ரி என்ற, 22 வயது பெண், காதலனை கவர்வதற்காக, 30 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத் தோற்றத்தை மாற்றியுள்ளார். இதற்காக, பல லட்சம் ரூபாய், செலவு செய்துள்ளார்.
'என் காதலனை முதல் முறையாக சந்தித்தபோது, என் தோற்றத்தை கிண்டல் செய்தான்; இதனால், அவனை கவர்வதற்காக, விளையாட்டாக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். பின், அதுவே வழக்கமாகி விட்டது. இதற்காக, இப்போது வருத்தப்படுகிறேன்...' என்கிறார், பெர்ரி.
— ஜோல்னாபையன்.
