PUBLISHED ON : பிப் 09, 2020

கவிதைச்சோலை - வரப்பிரசாதம்!
33 சதவீத இட ஒதுக்கீடு அல்ல
சமரசம் பேச
இது... உங்கள் இடம்
சகலமும் பேச!
இரண்டடி அல்ல
இரு பக்க திருக்குறள்
பார்த்து, கேட்டு, படித்தது!
திண்ணைகளில் - நாம் பேசத்
தவறிய தேசத் தலைவர்களின்
தாக்கம் ஏற்படுத்தும் வரலாறு!
கவலை தோய்ந்து விடாமல்
காவல் காத்த
கவிதைச் சோலைகள் எத்தனை எத்தனை!
குறுக்கும் நெடுக்குமான
சதுரங்க வாழ்க்கையில்,
தலையெழுத்தை மாற்ற
குறுக்கெழுத்தால் பதில் ஒரு முன்னேற்றமே!
'ஆண்'டிராகன் நிறைந்த
'ஆன்டிராய்டு' உலகில் - இப்படி
அந்தரங்கத்தை அலசினால்
அற்புதமான விடிவுண்டு!
பன்னிரு ஆண்டிற்கு ஒருமுறை பூப்பது!
குறிஞ்சிப் பூ!
எண்ணி ஏழு நாட்களில்
நில அபகரிப்பு இல்லாமல்
கதிரொளியை காணாது
நீர் பிரச்னை ஏதுமின்றி
அனைவர்
இதயத்தில் பூத்த மலர்
வாரம் வரும் மலரல்ல
வரம் வாங்கி வந்த
வர(பிரசாத)மலர் தான்
வாரமலர்!
சு. பிரபாகர், தேவகோட்டை.