PUBLISHED ON : பிப் 10, 2013

சீனாவைச் சேர்ந்த, இந்த, நான்கு வயதுச் சிறுவனின் பெயர், சியு கோ. இவன் பிறக்கும்போது, மற்ற குழந்தைகளைப் போல், 2.6 கிலோ எடையுடன் தான், பிறந்துள்ளான். ஆனால், இப்போது, இவனது எடை, 62 கிலோ. அதாவது, நான்கு வயதில், மற்ற குழந்தைகள் எவ்வளவு எடை இருக்குமோ, அதை விட, ஐந்து மடங்கு அதிக எடையுடன், வலம் வருகிறான், இந்த சிறுவன்.
இந்த சிறுவனுக்கு, சாப்பிடுவது தான், பொழுது போக்கு. நினைத்த நேரத்தில், நினைத்த தின்பண்டங்கள் கிடைக்க வேண்டும். இல்லையெனில், ரணகளம் தான். இவனது பெற்றோர், பல டாக்டர்களிடம், அழைத்துச் சென்று காண்பித்தபோதும், 'இவனுக்கு தேவையற்ற, ஹார்மோன்கள் எதுவும் இல்லை...' என கூறி, அனுப்பி வைத்து விட்டனர்.
சியு கோவின், தாயும், தந்தையும், 'நாங்கள் இருவருமே, சாதாரண எடை உள்ளவர்கள் தான். இவன் தான், இப்படி அநியாயத்துக்கு குண்டாகி விட்டான். ஆனாலும், எதிர்காலத்தில், மிகப் பெரிய மல்யுத்த வீரனாக விளங்குவதற்கு, வாய்ப்பு உள்ளது...' என்கின்றனர்.
— ஜோல்னா பையன்.
