PUBLISHED ON : பிப் 10, 2013

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியும், டான்சருமான, லேடி காகாவுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது பாடலையும், டான்சையும் விட, இவரது வித்தியாசமான, விதம் விதமான, சிகை அலங்காரம், ரசிகர்களிடம், மிகவும் பிரபலம்.
இவருக்கு, ஒரு வினோதமான பழக்கமும் உள்ளது. அது தான், கஞ்சா புகைப்பது. இதை, வெளிப் படையாக, அவரே, பலமுறை அறிவித்துள்ளார். சமீபத்தில், நெதர்லாந்தில் நடந்த, தன் கலை நிகழ்ச்சியில், மேடையிலேயே, கஞ்சாவை புகைத்து, சர்ச்சையை ஏற்படுத்தினார். 'இந்த பழக்கத்தை என்னால் விட முடியவில்லை...' என, விளக்கம் வேறு அளித்தார்.
இப்போது, அவரது நடவடிக்கையில், தடாலடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. லேடி காகா, 'ஆர்ட்பாப்' என்ற, புதிய ஆல்பத்தை தயாரிக்கும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டுள்ளார். இந்த பிசியான வேலைகளுக்கு நடுவில், கஞ்சா புகைப்பதையே மறந்து விட்டார். 'கஞ்சா பழக்கத்தை அடியோடு கைவிடப் போகிறேன்...' என்றும், அறிவித்துள்ளார், காகா.
— ஜோல்னா பையன்.
