தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்!

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்!

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்!


PUBLISHED ON : அக் 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊன்றி நடக்க உறுதி கொண்டால் ஒட்டடை நூல்கூட ஊன்று கோல்தான்! - இக்கவிதைக்கு, சாட்சியாக உள்ளவர்தான் சூர்யா என்று அழைக்கப்படும் அருள்மொழி வர்மன். நடுங்கும் கைகளுடன், சக்கரநாற் காலியில் அமர்ந்தபடி, திணறி திணறிப் பேசும் சூர்யாவிற்கு, 23 வயதாகிறது.

சூர்யா, ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, முதுகு தண்டுவடப் பிரச்னை காரணமாக, அவனது இடுப்புக்கு கீழே, செயலிழந்து விட்டது.

இடுப்புக்கு கீழே தான் செயல்படவில்லையே தவிர, மூளை அபாரமாகச் செயல்பட்டது. இடதுகை பழக்கம் காரணமாக, இடக்கையில் சாப்பிடுவதை கவனித்த தாத்தா, 'சாப்பிடுவதையாவது வலது கையில் செய்யக் கூடாதா...' என்று கேட்டதும், சற்றும் தயங்காமல், 'கடவுள், எனக்கு, வலது கையை இந்தப் பக்கம் வச்சுட்டான் தாத்தா...' என்று சொன்ன போது, சூர்யாவுக்கு மூன்று வயதுதான். இப்படி அறிவான சூர்யாவை, சென்னையில் உள்ள சிறப்பு பள்ளியில், பெற்றோர் படிக்க வைத்தனர்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது, 'வாக்கரின்' உதவியோடு நடந்து கொண்டிருந்த சூர்யாவை, விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், தெரியாமல் தள்ளிவிட்டதில், தலையில் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், 'இனிமேல், 'வாக்கர்' வைத்து நடக்க முடியாது. 'வீல்சேரில்தான்' நடமாட முடியும். இதுவரை இயங்கி வந்த கைகளும், வழக்கம் போல இயங்காமல், நடுக்கத்துடன் தான் செயல்படும்; பேசும் போது வார்த்தைகள் திக்கும்' என்று சொல்லி விட்டனர். இந்த வேதனையை எல்லாம் கூடத் தாங்கிக் கொண்ட சூர்யாவால், பள்ளியில் படிப்பைத் தொடர முடியாது என்ற, வேதனையைத்தான் தாங்க முடியவில்லை.

வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தான். தன் அண்ணனின் கம்ப்யூட்டரை பொழுது போக்காக இயக்க ஆரம்பித்தான். நடுங்கும் கைகளை கொஞ்சமாவது நிலையாக நிறுத்த, அது ஒரு பயிற்சியாக இருந்தது. அண்ணனும், தனக்கு தெரிந்ததை, தம்பிக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுத்தார். கம்ப்யூட்டரே தனக்கான வடிகால் என்று, அதில் முழுமூச்சாக இறங்கி விட்டான் சூர்யா.

கம்ப்யூட்டரை ஆராய்ந்து ஆராய்ந்து, இத்தனை வருடங்களில், அதில், தேர்ந்து விட்ட சூர்யா, இப்போது, அகில இந்திய அளவில் செயல்படக்கூடிய பெரிய சிறிய நிறுவனங்களின், வெப் டிசைனராக உள்ளார்.

நிறுவனங்கள் பெரியதோ, சிறியதோ தம்மைப் பற்றி வெளியில் சொல்ல, ஒரு வெப் சைட் அவசியம் தேவை. அந்த வெப்சைட், பார்ப்போரை ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும். எல்லாவிதத் தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு வெப் சைட்டை, உருவாக்கித் தருவதுடன், அனிமேஷன் மற்றும் ஆடியோ வீடியோ எடிட்டிங் போன்ற துறைகளிலும், 'ஒன்மேன் ஆர்மியாக' சாதித்து வருகிறார். திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் மேனகா கார்ட்ஸ், பட்ஜெட் பர்னிச்சர், மேரிடைம், இம்பீரியல் இன்போ டெக் உட்பட, பல்வேறு நிறுவனங்களின், வெப் சைட்கள் இவர் டிசைன் செய்தவைதான்.

சூர்யாவின் தந்தை, சென்னையில், காவல் துறையின், கைரேகைப் பிரிவில், இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். பணி ஓய்வுக்கு பின், குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்று விட்டார். சூர்யா, தற்போது, பொள்ளாச்சியில் இருந்தபடி இப்பணியை செய்து வருகிறார். சூரியாவின் தந்தை பாலகுருசாமி, தாயார் தேன்மொழி மற்றும் அண்ணன் நாகசுந்தரம், அண்ணி மதுமதி போன்றோர், 'நிச்சயம், சூர்யா நாலுபேர் பாராட்டும்படி வருவான்' என்ற, நம்பிக்கையுடன் அன்பையும், பாசத்தையும் வாரி வழங்கி வருகின்றனர்.

அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப, பல இரவுகளை பகலாக்கி, கடுமையாக உழைத்து, நல்லதொரு, வெப் டிசைனராக வளர்ந்து வரும் சூர்யா, தனக்கு உதவிய பக்கத்து வீட்டு அண்ணன்கள் சதீஷ், காளிராஜ், மற்றும் பல நண்பர்களையும், உறவினர்களையும் மிகுந்த நன்றியோடு நினைவு கூர்கிறார்.

இவரது வெப் டிசைனை பார்த்தவர்கள் பாராட்டாமல் இருந்ததில்லை. ஆனால், சூர்யாவின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. 'என்னைப் பார்த்து, என் மீது இரக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் எனக்கு வேண்டாம்; என் திறமையை, என் கற்பனையை, என் தொழிலை மட்டும் பாருங்கள்; பின், உங்கள் நிறுவனத்தின், வெப் சைட்டை, டிசைன் செய்ய வாய்ப்பு தாருங்கள்; அது போதும்...' என்று சொல்லும், சூர்யாவின் ஆற்றலை அறிய, கிரியேடிவ் இ ஸ்டுடியோ.காம் என்ற, வலைதளத்துக்கு செல்லவும்.

அவரது அலைபேசி எண்: 97907 41542.

***



எல். ஜெகதீஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us