PUBLISHED ON : ஜன 06, 2019

தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வரவேண்டும், அதன் மூலமாக வருவாய் அதிகரிக்க வேண்டும் என்று தான், அனைத்து நாட்டு அரசும் நினைக்கும். ஆனால், இத்தாலி நாட்டில் உள்ள வெனீஸ் அரசு, 'அதிக அளவில் வரும் சுற்றுலா பயணியரால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைகிறது. அதனால், எங்கள் நாட்டுக்கு, சுற்றுலா பயணியர் வரவேண்டாம்...' என்று அறிவித்திருக்கிறது. மேலும், சுற்றுலா பயணியரை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய, வெனீஸ் அரசு, குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு, இரவு நேரங்களில், கையில் மது பாட்டில்களுடன் அலையும் ஆட்களை கட்டுப்படுத்த, 'இனிமேல், மது பாட்டிலுடன் அலையும் குடிமகன்களை கண்டால், ஐரோப்பிய நாட்டின் கரன்சியான, 30 முதல் 500 யூரோ, அதாவது, 1 யூரோ மதிப்பு, நம்மூர் கரன்சியில், 81 ரூபாய் செலுத்தினால் தான் வெளியே வர முடியும்...' என்று அறிவித்துள்ளது.—ஜோல்னாபையன்.

