PUBLISHED ON : செப் 07, 2014

அ நிறம் | அளவு
இந்திய ஜனநாயகம் பரம ஏழையையும், பெரும் செல்வந்தராக்க வழி செய்கிறது. இதனால் தான் நம் அரசியல்வாதிகளால், எளிதில் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க முடிகிறது. ஆனால், அமெரிக்க அரசியலில் நிலைமை அப்படி அல்ல; முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஜனாதிபதி பதவியை இழந்த பின், அவர் குடும்பம், பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டது. மகள் படிப்புக்காக, வீட்டையும், நிலத்தையும் அடமானம் வைத்தார். கடன் தொல்லைகளை சமாளிக்க, வேலைக்கு போனார் மனைவி ஹிலாரி. இவ்வாறு அவரின் குடும்பம் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டது என்ற விவரங்களை, புத்தகமாக வெளியிட்டுள்ளார் ஹிலாரி கிளிண்டன். 'ஹார்டு சாய்ஸ்' என்ற இப்புத்தகம், தற்போது அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
— ஜோல்னாபையன்.
