sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை!

/

திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை!

திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை!

திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை!


PUBLISHED ON : ஜூன் 19, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெர்மனியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால், பெர்லின் மருத்துவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனை செய்துள்ளார். அவரும், பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்து, 'குழந்தை அசைவின்றி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை; ஆனால், சிசுவுக்கு உயிர் இருக்கிறது...' என்று கூறி, அனுப்பி விட்டார்.

என்ன செய்வதென்று புரியாமல் தொடர்ந்து, ஒவ்வொரு மருத்துவராக பார்த்துள்ளனர், அப்பெண்ணும், அவர் கணவரும். இந்நிலையில், மன நிம்மதிக்காக, இளையராஜாவின் திருவாசகம் இசையை கேட்டுள்ளார்.

என்ன ஆச்சர்யம்! 'திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்...' என்ற சான்றோர் வார்த்தைக்கு இணங்க, சில நிமிடங்களில், வயிற்றில் அசைவு தெரிய, மகிழ்ச்சியில் இசையை நிறுத்தியுள்ளார். உடனே குழந்தையின் அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து, நான்கு முறை இப்படிப் போட்டு போட்டு நிறுத்தியுள்ளார். அதன்பின், தொடர்ந்து, வீடு முழுவதும் ராஜாவின் இசை தான் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது.

சரியாக, பத்தாவது மாதம், அறுவை சிகிச்சையின்றி, குழந்தை ஆரோக்கியமாக பிறந்து, மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த ஜெர்மன் தம்பதியர், இளையராஜாவை சந்திக்க சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தனர். தம்பதியை சந்தித்து, குழந்தைக்கு ஆசி வழங்கினார், ராஜா.

தற்போது, ஜெர்மன் மருத்துவர்கள் பலரும், இந்த இசை அற்புதத்தை ஒப்புக்கொண்டுள்ளதோடு, ராஜாவின் திருவாசகம் சி.டி.,யை கேட்டு, மொழி புரியாவிட்டாலும், அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயியுள்ளனர்.

அத்துடன், மருத்துவத்துறையில் இந்திய இசையால், என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற, ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர்.

இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள்; குறிப்பாக தமிழர்கள். ஆனால், நாம் நம் பாரம்பரியத்தை மறந்து போனதால், நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது.

இதேபோன்று, நாம் போகர் மருத்துவத்தை ஓரங்கட்ட, அவர்களோ அதை வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

- ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us