sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பூண்டு!

/

பூண்டு!

பூண்டு!

பூண்டு!


PUBLISHED ON : ஜூன் 19, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்முடைய தினசரி உணவில் பூண்டுக்கு தனி இடம் உண்டு. மிளகு, சீரகத்துடன் பூண்டு சேர்த்தால் தான் ரசம், 'கமகம'ன்னு மணம் வீசி ருசிக்கும். இது, வாதம், பித்தம் மற்றும் சிலேட்டுமம் எனச் சொல்லப்படும் கபத்தை நீக்கி, உடல் நலம் பெற உதவுகிறது. வாயுக்கோளாறுக்கு முழு வெள்ளைப் பூண்டை தீயில் சுட்டு, நன்கு வெந்ததும் சாப்பிட்டால், வந்த இடம் தெரியாமல் விலகிப் போகும்.

உணவில் அடிக்கடி வெள்ளைப்பூண்டை சேர்த்தால், ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மேலும், பூண்டிற்கு புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றலும் உண்டு.

ரத்தக்கொதிப்பு உள்ளோர், இரண்டு பூண்டை உரித்து, ஒரு டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது, ஒரு டம்ளராக வற்றியதும், இரவு தூங்கச் செல்லும் முன், 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு குணமாவதுடன், வயிற்றுக்கோளாறு, நெஞ்சுவலி சரியாகும்.

தலையில் முடி உதிர்ந்து சொட்டை விழுந்தால், அந்த இடத்தில் இரண்டு பூண்டுப்பல்லை தேய்த்தால், காலப்போக்கில் முடி முளைக்கும்.

மேலும், காதுவலிக்கு பூண்டு நல்ல மருந்து; நல்லெண்ணெயில், 10 கிராம் பூண்டுப்பல்லை போட்டு காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டி வைத்து, அதை காதில் இரண்டு சொட்டு விட்டால், வலி குணமாகும்.






      Dinamalar
      Follow us