PUBLISHED ON : ஜூன் 24, 2018

மறைந்த பழம்பெரும் இந்தி நடிகர் ராஜ்கபூரின், காதல் லீலைகள் பற்றி, மகன் ரிஷிகபூர், தன் சுயசரிதையில் எழுதியுள்ளார். அதில், 'என் தந்தைக்கும், நடிகை நர்கீசுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. என் அம்மா சண்டை போட்டார். அம்மாவின் சண்டையை சமாளிக்க முடியாமல், நர்கீசை மறந்தார் அப்பா.
அடுத்த லீலை தான் பெரிய புயலை கிளப்பியது. வேறொரு நடிகையின் பெயரால் வீட்டில் மீண்டும் சண்டை. அம்மா, சிறுவனாக இருந்த என்னை அழைத்துக் கொண்டு, மரைன் டிரைவில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கினார். பின், அப்பா, கெஞ்சிக் கூத்தாடி, அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்பா, அந்த நடிகையுடனான பழக்கத்துக்கும் முழுக்கு போட்டார்...' என்கிறார். இந்த நடிகை, யார் தெரியுமா? வைஜெயந்தி மாலா தான்.
இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்துள்ளார்.
புத்தகம் வெளியானதும் என்ன மாதிரி புயல் வரப் போகிறதோ தெரியவில்லை.
— ஜோல்னாபையன்.
