PUBLISHED ON : ஜூன் 24, 2018

அ நிறம் | அளவு
'ஹீலிகன்ஸ்' என்றால் என்ன தெரியுமா? சர்வதேச போக்கிரி கூட்டத்திற்கு பெயர் தான் ஹீலிகன்ஸ். உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறும்போது, மைதானத்தில் புகுந்து அடிதடி, ரகளை செய்வது தான் இவர்களின் வேலை.
ரஷ்யாவில் நடைபெற்று வரும், உலக கால்பந்து போட்டியில், இந்த போக்கிரிகளின், 'ஆட்டத்தை' கட்டுப் படுத்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், ரஷ்ய போலீசார்.
இவர்களை தடை செய்வது, அரசியல்வாதிகளுக்கு விருப்பம் இல்லாத செயல். காரணம்... கட்சிகளுக்காக, 'கூலிக்கு மாரடிப்பதும்' இவர்கள் பணி. கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களை, 'ஹீலிகன்ஸ்' செய்து வருகின்றனர்.
- ஜோல்னாபையன்.
