PUBLISHED ON : பிப் 20, 2022

அ நிறம் | அளவு
பெட்ரோல் விலை உயர்ந்தாலும், வாகன கட்டணம் ஏறினாலும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் தம்பதியான, பென்னி - மோளிக்கு கவலை இல்லை. காரணம், நடை பயணமாகவே சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர்.
'திருமணமாகி, 19 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. 'கொரோனா' தொற்று பரவியதை அடுத்து, பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் தான், சுற்றுலா போகும் எண்ணம் ஏற்பட்டது...' என, கூறும் இவர்கள், ஏற்கனவே ஒருமுறை சைக்கிளில் இந்தியாவை சுற்றி வந்துள்ளனர். இப்போது, நடை பயணமாகவே ஊர் ஊராக சுற்றி வரும் நோக்கத்துடன், தங்கள் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பித்து இருக்கின்றனர்.
— ஜோல்னாபையன்
